Ads 468x60px

7/14/2013

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!





1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
 ( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!" இந்த மாதிரி பேரு வெச்ச படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற" இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :

இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..!!

நல்ல டாக்டரா போயி பார்க்கிறது..!! - படித்ததில் பிடித்தது.

9 comments:

  1. இப்படியா புட்டு புட்டு வைக்கிறது - உண்மையை...! ஹிஹி...

    ReplyDelete
  2. போட்டு ஒடச்சிட்டீங்களே...

    ReplyDelete
  3. ஹி!ஹி! இப்படியா போட்டுகொடுக்கிறது!

    ReplyDelete
  4. 100/100 உண்மை தான், என்ன செய்ய, :)

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"