Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

3/07/2011

தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்....

 
மாணவர்களுக்குத் தேர்வுபயம் போனால்தான் அவர்கள் ஓரளவு நன்றாகத் தேர்வு எழுத முடியும். 

தேர்வுக்கு முதல்நாள் இரவு புதியதாக எதையும் படிப்பதோ, இரவு நீண்ட நேரம் படிப்பதோ கூடாது.எடுத்த குறிப்புகளை அன்று காலையில் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான முறை.

ரவில் நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு அமைதியான மனநிலையில் செல்வதுதான் அதிக மதிப்பெண் பெற உதவும்.தேர்வுக்கு சிறிது நேரத்துக்கு முன் உங்கள் நண்பர்கள், அதைப் படித்தாயா? இதைப் படித்தாயா? என்று உங்கள் பயத்தை அதிகப்படுத்த முயற்சிக்கலாம். அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அத்தகைய நண்பர்கள் பக்கமே போகாதீர்கள்.

தேர்வு அறையில் வினாத்தாள் வாங்குவதற்கு முன் 3 நிமிஷங்கள் "ரிலாக்ஸ்' செய்யுங்கள்.  மனத்தை உங்கள் மகிழ்ச்சியான அனுபவத்துக்கு இட்டுச் செல்லுங்கள்."என்னால் மிக நன்றாகத் தேர்வு எழுத முடியும். முழு நம்பிக்கை இருக்கிறது' என்று குறைந்தபட்சம் 5 முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இதற்காக 2 நிமிஷங்கள் செலவழிக்கலாம். 

கேள்வித்தாளை வாங்கிய உடன் 2 அல்லது 3 நிமிஷங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நிமிஷங்கள் ஒதுக்குவது எனத் திட்டமிடுங்கள்.குறைவாக எழுத வேண்டிய கேள்விகளுக்கு அதிகமாக எழுதியும் அதிகமாக எழுத வேண்டியவற்றுக்கு நேரம் இன்மையால் குறைவாகவும் எழுத வேண்டாம்.அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது முக்கியம்.முழுவதும் எழுதிய பிறகு குறைந்தது 5 நிமிடங்களாவது எழுதியதைப் படித்துப் பார்க்க நேரம் வைத்துக்கொள்ள வேண்டும்.

விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக எழுத வேண்டும்.எத்தனை வார்த்தைகளில் பதில் என்பதில் கட்டுப்பாடு அவசியம்.கையெழுத்தைப் பிறர் புரியும்படி எழுத வேண்டும்.கேள்வி எண், அதன் பகுதி எண் ஆகியவற்றைச் சரியாக எழுதுங்கள்.ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற வேண்டியது, ஒரு செயலைச் சரியான பதிலாகத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் வேகம் அவசியம். 

ன்கு தெரிந்த விடையை டக் டக் என்று தேர்வு செய்து எழுதுங்கள். தெளிவில்லாததைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை இரண்டு வண்ணப் பேனாக்களையாவது பயன்படுத்துங்கள்.

விடைகளில் அவசியமில்லாத வார்த்தைகள் உள்ளனவா? எங்கு கவனக்குறைவால் தவறு ஏற்படும்?  எந்தெந்த  பாயிண்ட்டுகளுக்கு அடிக்கோடு இடவேண்டும்? குறைந்த நேரத்தில் எவ்வளவு சுருக்கமாக விடையளிக்கலாம்? என்பது குறித்து ஆசிரியரிடம் அறிவுரையை  முன்பே கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
 
யமில்லாமலும், நமக்கு  அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும் என்கிற நம்பிக்கையோடும் தேர்வு எழுதுங்கள்.. வெற்றி  உங்களுக்கே...
வாழ்த்துக்களுடன்.....



முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2.  மனதை தொட்ட கவிதைகள்                                                                               3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 
4திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா
 

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

அரசியல்வாதிகளே.! அப்ப நீங்க எதுக்கு?




விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் எதுவும் எங்களிடம் இல்லை.

யங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு, மாநிலங்களுக்கே அதிகம்.

ணவீக்கம் குறைய, பொது வினியோக முறையை, மாநிலங்கள் தான் பலப்படுத்த வேண்டும்.

திநீர் இணைப்பு, சாத்தியமில்லாத ஒன்று! - இவை, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் கூறியவை.

ல்லா பிரச்னைகளையும் மாநில அரசே தீர்க்க வேண்டுமென்றால், மத்திய அரசின் பணி என்ன? எல்லா அதிகாரங்களையும் டில்லியில் குவித்து வைத்து, எல்லா வருமானம், வளங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொண்ட பின், விவகாரங்களை மட்டும், எப்படி, எந்த வகையில் தீர்க்க சொல்கிறது?

விவசாயத்துறை அமைச்சரோ, விவசாயப் பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, கிரிக்கெட் துறையில் மூழ்கி, முத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், ஸ்பெக்ட்ரம் போன்றவைகள் நடந்து கொண்டிருப்பதை, பிரதமர் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார். நன்றி  தினமலர்.

னால், பிரச்னைகளை மட்டும், மாநிலங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். மோசமான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, ஒரு நல்ல தலைமை ஆசிரியரால், நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
ல்ல தலைமை ஆசிரியரான மன்மோகன் சிங் தான், இதற்கு வழி காண வேண்டும்.


முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2.  மனதை தொட்ட கவிதைகள்                                                                               3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 
4திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

3/05/2011

திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா

திமுகவின் முடிவை வரவேற்பதாகவும், வரும் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.த்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.







சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு கூட்டணியை வலுவிழக்கச் செய்யாது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். நன்றி நக்கீரன்.

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

மனதை தொட்ட கவிதைகள்



 1.

ரு
இலக்கணம் தெரிந்து
நான்,
கவிதை எழுதவில்லை
எனினும் எழுதுகிறேன்
நம்புவது,
தமிழை அல்ல
உன்   அழகை...!

**********************************************************************************
 2.

பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!

**********************************************************************************
 3.


ற்செயலாய்
வாசல் வந்து
நீ...
நின்றபோது
உன் அம்மா
“உள்ளேப் போ”
என்று சொன்னது
என் இதயத்திற்குள்
போகத்தானா?

**********************************************************************************
 4.


ன்னுடன்
பேசிவிட்டு வந்த
உரையாடலை,
கலைக்க மனமில்லாமல்
மற்றவர்கள் மத்தியில்
மரமாய்...!

**********************************************************************************
 5.


ப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!

**********************************************************************************



முந்தைய பதிவுகள்:  



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

3/04/2011

தேவையா இந்தக் கொண்டாட்டங்கள்....


நீதிமன்றம் கொடுத்த தைரியத்தைத் தொடர்ந்து, "பஸ் டே கொண்டாடும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறை அறிவித்துள்ளது, பாராட்டத்தக்கது.இதுவரை தமிழக மாநகர காவல் துறை, "பஸ் டே' அட்டூழியங்களை அனுமதித்து வந்தது. தற்போது, நீதிமன்றம் தலையிட்டதால், காவல்துறைக்கு தெம்பு வந்து, களத்தில் குதித்துள்ளது. 

மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...இதை ஒரு கவுரவப் பிரச்னையாக்கி, காவல் துறையிடம், "மல்லு' கட்டாமல், தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, தலைசிறந்த குடிமகன்களாக மாற வேண்டும்."நூறு இளைஞர்களைத் தாருங்கள், வலிமைமிக்க பாரதத்தை உருவாக்கி காட்டுகிறேன்' எனக் கூறினார் விவேகானந்தர். இளைஞர்களின் சக்தி அளப்பரியது. அது, "பஸ் டே' போன்ற அருவெறுக்கத்தக்க விஷயங்களில் செலவாவதை, மக்கள் விரும்பவில்லை.

யுத பூஜை அன்று மக்கள், தம் தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகளை சுத்தம் செய்து, கும்பிட்டு மகிழ்வர். பொங்கலன்று, கலப்பை, உழவு மாடுகளை அலங்கரித்து, மகிழ்வர்.ஆனால், "பஸ் டே' அன்று, பஸ்கள் படும்பாடு, குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதி தான். ஆண்டு முழுவதும் தங்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல உதவும் பஸ்சுக்கு, மாணவர்கள் காட்டும் கைமாறா இது?

ந்தனம் அரசு கல்லூரி, பச்சையப்பன் கல்லூரிகளைத் தொடர்ந்து, விவேகானந்தா கல்லூரி மாணவர்களும், பஸ்தின கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.ஒரு கல்லூரி, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால், நாமும் அது போல் பயிற்சி எடுத்து, பதக்கம் வெல்ல வேண்டும் என துடிப்பதில் அர்த்தம் உண்டு.ஆனால், "அவர்கள் பஸ் தினம் கொண்டாடிவிட்டனர்; நாமும் கொண்டாட வேண்டும்' என, மாணவர்கள் நினைப்பது, அர்த்தமற்ற, அவசியமற்ற, தேவையற்ற, குறிக்கோளற்ற, சிந்தனையற்ற செயல்.
Thanks Dinamalar. 

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 . இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

தேர்தல் வருகிறது உஷார் - ஓரு அவலநிலை

ன்றைய இந்திய ஜனநாயகம் ஊழல்வாதிகளிடமும், கிரிமினல் மாஃபியாக்களிடமும், பணமுதலைகளிடமும், பேராசை பிடித்த வாரிசுகளிடம் சிக்கிக்கொண்டு, மனசாட்சியற்ற  மக்களாட்சியாக மாறிவிட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம்,  சில அரசியல்வாதிகள் பெற்ற ஆதாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும்,  அரசு வழங்கும் மானியங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.


கூட்டணிக்கட்சி  வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டாலும், தடுக்க முடியாததற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்று  நா  கூசாமலும், வெட்கம் இல்லாமலும் திருவாய்  மலர்கிறார்.

லகளவில் நடைபெறும், உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் ஒரு  அமைச்சர் பயமே இல்லாமல் ஊழல் செய்கிறார். 

மிக மோசமான நிதி நிர்வாகத்தாலும், அதிக சம்பளச்சுமையாலும்,  இலவசப் போலிக் கவர்ச்சி  திட்டங்களாலும், கரைபுரண்டு ஓடும் ஊழல்களாலும், டாஸ்மார்க் சாராய வருமானத்தையும் மீறி தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்ட நிலையில், எல்லா வகை புதிய திட்டங்களுக்காகவும் வெளிநாட்டு வங்கிகள், உலக வங்கி ஆகியவற்றிடம் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 
 
னால் நிதியமைச்சரோ "தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று  பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வரோ, "ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி தமிழ்நாட்டை  கேவலப்படுத்துகிறார்.
 
ழல்களில்  ஊறிப்போன,  நாக்கில் நரம்பில்லாமல் பேசும், சொந்தத் தொகுதி பக்கமே தலைகாட்டாமல் இருக்கும், அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கும், குடும்ப உறுப்பினர்களை அரசியலில் களமிரக்கும். Etc.. அரசியல்வாதிகளுக்கு யார் கொடுத்தது இந்த துணிச்சல் . அவர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது.

ரு ஓட்டிற்கு 1000, 2000 ரூபாய்,  ஒர் ஆப்ஃ பாட்டில், ஒர் குவாட்டர் பிரியாணி கொடுத்தால் சில மட்டி ஜனங்கள் ஓட்டு பொட்டுவிடுவார்கள் என்கிற நினைப்பு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.

க்களாகிய  நாம்தான் அவா்களுக்கு இந்த துணிச்சலையும், நினைப்பையும்  கொடுத்தோம். நம்முடைய  ஓட்டின் முக்கியத்துவம் தெரியாமல் கண்டகழிசடை நாய்களுக்கு (மன்னிக்கவும்) ஓட்டுப் போட்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்து அழகுபார்த்தோமே நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.
 
தோ வருகிறது இன்னும் ஓரு தோ்தல்..  இந்த தேர்தலாவது பணபலம், ஆள்பலம், இன்னபிற அவலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அதற்கு  தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வேண்டிய உண்மையான முயற்சிகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் முயற்சி  செய்ய வேண்டும். ஊடகங்களும் இதற்கு துணைபுரிய வேண்டும். நம் பதிவுலகமும் இதற்கு ஆதரவு தரவேண்டும். 


முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

3/03/2011

மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் தேர்தல் பயங்கரம்

மிழக சட்ட சபைக்கு ஏப்ரல் 13-ந்தேதி தேர்தல்  நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டம் 10-ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுக்கு மும்முரமாக தயாராகும் நேரம் ஆகும்.

மிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு என்னவோ மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 13-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ந்தேதியாக இருந்தாலும் அதற்கு ஒரு மாதம் முன்பே மாணவர்கள் தேர்வுக்காக கன்டிப்பாக தயாராவார்கள். 


 ந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். மைக் செட்டுகள் வைத்து தானைத் தலைவர்களின் புராணம் பாடுவார்கள்.  ஓட்டு பிச்சைகளுக்காக விடுவீடாக கையேந்துவார்கள்.  


வீதியெங்கும் சினிமா பாடல்களும், தலைவர்களின் துதிபாடல்களும் கலைகட்டும். இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.  அவர்களின் சிந்தனைகள் சிதறும். இதனால் பல மாணவர்களுடைய எதிர்காலம்  பாழாகும் அபாயம் இருக்கிறது.

மேலும் பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகளும் ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி மே 2-ந் தேதி முடிகிறது. தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடத்தப்பட்டால் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு தேதியை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை முடிவு செய்து இருக்க வேணடும்.

ரசியல்வாதிகளே உங்கள் அரசியல் விளையாட்டுகளை நாளைய சாதனையாளர்கள் மேல் தினிக்காதீர்கள்..  இதிலாவது ஒன்றுபட்டு தேர்தல் தேதியை தள்ளிவைக்க முயற்சி செய்யுங்கள்...
( இந்த படத்திற்கும் ‌ பதிவிற்கும் சம்பந்தம் இல்லைன்னு  சொன்னா நம்பனும்)



 முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                                   2 .  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                 3 . இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

3/02/2011

இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தெரியவில்லை




ட்டு குட்டியை
மடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ” 
( நன்றி இளம்பிறை)



ம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!



சிறகுகளை இழப்பதா?
அதைவிட எளிது
உயிர் விடுவது...!


 குடிப்பழக்கத்தை
விடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!


முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                     2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                 3. இனி சன்டேன்னா சினிமாதான்...


யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....

3/01/2011

விடுதலைப்புலிகளை தோற்கடித்தது எப்படி - ரோஷன் குணதிலக்க


விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்கு பேரிழப்பாக அமைந்ததாக இலங்கை விமானப்படைத் தளபதி ரோஷன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

விரைவில் விமானப்படை பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ள அவர் கடந்த கால அனுபவங்கள் பற்றி பேசுகையில் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலர் நீண்டகாலமாக விமானப்படையால் இலக்கு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதில் தமிழ்ச்செல்வனும் ஒருவர்.

அவர் கிளிநொச்சியில் தங்கி இருக்கும் இடம் பற்றி 2008 நவம்பரில் புலனாய்வுத் தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து அவரது மறைவிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி கிடைத்தது.

அவரது மறைவால் விடுதலைப் புலிகள் தலைவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அவர்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்தார்கள். அதன் காரணமாக இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது எளிதாக இருந்தது என ரோஷன் குணதிலக்க தெரிவித்ததாக இணையதளச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி தினமணி. 
நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே...

முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                  2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                3. இனி சன்டேன்னா சினிமாதான்...


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

தனியார் கல்வி நிறுவன பயங்கரங்கள் - ஓர் அலசல்

மிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டு, இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என்றாலும், இது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.

துபோன்ற பிரச்னைகளைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தும் நேரத்தில் கல்வி நிறுவனங்கள் எழுப்புவதும், அரசும் இந்தப் பிரச்னையை ஏனோதானோ என்று முடித்துவிடவும், ஓரளவு உயர்த்திக்கொள்ள அனுமதிப்பதுமாக இருக்கிறதே தவிர, இதனை ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பாகவே விவாதித்து, முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

இதனால் அரசுக்கோ அல்லது தனியார் கல்லூரிகளுக்கோ பெரிய இழப்பு இல்லை. பொருளிழப்பும் அதே நேரத்தில் மனஉளைச்சலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்தான் ஏற்படுகின்றன.

ல்விக் கட்டணம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் சுமையாக இருக்கிறது என்பது ஒவ்வொரு குடும்பத்தினரும் உணரக்கூடியதுதான். அது மழலையர் பள்ளி என்றாலும், மருத்துவக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்லூரி என்றாலும் அபரிமிதமான கட்டணமாகவே இருக்கின்றன.


ந்தச் சுமையைக் குறைக்க வேண்டியது அரசின் மிகப்பெரும் கடமை. இந்தச் சுமையை இரு வழிகளில் குறைக்க முடியும். ஒன்று, கல்லூரிகளின் கட்டணத்தை அதன் தரத்துக்கு ஏற்ப குறைப்பது. இரண்டாவது, மாணவர்களின் "கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிப்பது.

ற்போது தனியார் கல்லூரிகள் அனைத்திலும் ஒரே விதமான கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. கலந்தாய்வின் கடைசிநாள் வரை இடங்கள் காலியாக இருக்கும் கல்லூரியின் கல்விக் கட்டணமும், முதல் நாளிலேயே இடங்கள் நிரம்பிவிடுகிற கல்லூரிக்கும் ஒரே விதமான கல்விக் கட்டணத்தைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் என்றால், கல்வியின்  தரத்தைப் பற்றி பல்கலைக்கழகம் அல்லது அரசின் கருத்துதான் என்ன?

ற்போது வெறுமனே தேர்ச்சிபெற்றிருந்தாலே போதும் என்கிற அளவுக்குப் பொறியியல் கல்விக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டு, அனைவரும் தனியார் கல்லூரியில் சேரும் வாய்ப்பை விரிவுபடுத்திக் கொடுத்திருக்கும் தமிழக அரசு, இந்தக் கல்லூரிகளை ஏன் தரப்படுத்தி, கட்டணத்தை வகைப்படுத்தக்கூடாது?

லந்தாய்வு தொடங்கிய 5 நாள்களில் எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்தப் பாடப்பிரிவுகளில் இடம் நிரம்பி விடுகிறதோ அவர்களுக்கு மட்டும் அதிகபட்சக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கலாம். அடுத்த 5 தினங்களில் இடங்கள் நிரம்பிவிடும் கல்லூரிகள் அல்லது அக் கல்லூரியின் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 20 விழுக்காடு கல்விக் கட்டணத்தைக் குறைக்கலாம்.


தே போன்று பல அடுக்குகளில் கல்விக் கட்டணம் அமைக்கப்படுமேயானால், மாணவர்கள் பயன்பெறுவதுடன், கல்லூரிகளும் தங்கள் பாடப்பிரிவைத் தரமாக மாற்றி மக்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சிகள் செய்யும். கல்வியின் தரம் தானே உயரும்.

ல்லது மாணவர்களின் "கட்-ஆப்' மதிப்பெண் அடிப்படையில் கல்விக் கட்டணத்தைத் தீர்மானிக்கலாம். ஒரு மாணவர் "கட்-ஆப்' மதிப்பெண் 190 இருந்தும்கூட, அவர் விரும்பிய பாடப்பிரிவு, அரசுக் கல்லூரிகளில் இல்லை என்பதாலேயே தனியார் கல்லூரியைத் தேர்வு செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். 


ரசு போதுமான அளவு கல்லூரிகளை உருவாக்காத குற்றத்துக்காக, தனியார் கல்லூரிகளை அனுமதித்திருக்கிறது என்பதற்காக, நன்றாகப் படித்த ஒரு மாணவரும் அதிகபட்சக் கல்விக் கட்டணத்தைச்  செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

துபற்றிய முடிவுகளை, மாணவர் சேர்க்கை தொடங்கிய பின்னர் அவசர அவசரமாகக்  கூட்டம் நடத்தித் தீர்மானிப்பதைக் காட்டிலும், இப்போதே இந்தப் பிரச்னையைப் பேசி, மக்களுக்கும் மாணவர்களும் பயன்படும் வகையில் கட்டணத்தைத் தீர்மானிப்பது அரசின் கடமையல்லவா?


நன்றி தினமணி.
 

முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                  2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                3. இனி சன்டேன்னா சினிமாதான்...

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....