Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

5/14/2011

முதல்வர் ஜே போடும் முதல் கையெழுத்து


பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி தலைவர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியில் அமர்ந்தவுடன், அவர் போடும் முதல் கையெழுத்து, மிகவும் எதிர்பார்ப்பு வாய்ந்ததாக இருக்கும்.

தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், "இனி ஆட்சியில் அமர்ந்தால், நீங்கள் இடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்' என நிருபர்கள் கேட்டதற்கு, "அது எதுவாயினும், ஏழை எளியவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே இருக்கும்' என, கருணாநிதி கூறியிருந்தார்.

விலையில் விண்ணைத் தொட்ட அத்தியாவசியப் பொருட்கள், வெள்ளைக் குதிரையின் விலை போல் கூறப்பட்ட காய்கறிகள், இதுவரை தமிழகம் சந்திக்காத மின் பற்றாக்குறை போன்றவற்றால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், தங்கள் தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கு விழி பிதுங்கி நின்ற போது, அவர்களின் துயர் போக்க, அரசின் சார்பில் முன்னாள் முதல்வர்  எடுத்த நடவடிக்கை என்னவென்று அவரால் கூற முடியுமா?

அவரது ஆட்சியின் போது தான் மின்சாரத்துறை, மின்வெட்டுத்துறை என மாற்றமடைந்து, அது நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று, மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன் உள்ள காலம் எவ்வாறு இருந்திருக்கும் என உணரச் செய்தது.கடந்த, 2008, ஜூலையில் துவங்கிய மின்வெட்டு, தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, தற்போது பகலில், சென்னையில் ஒரு மணி நேரம், மற்ற மாவட்டங்களில் மூன்று மணி நேரம் இருக்கும் என்ற நிலையில் உள்ளது.

எனவே, நம் அவசிய தேவையான மின்சாரம் பெருக, அதில் தமிழகம் தன்னிறைவு அடைய, அத்துறையில் நிர்வாக குளறுபடிகள் நீங்க, இது நாள் வரை தமிழக முதல்வர் செய்யத் தவறியதை, இனி ஆட்சிக் கட்டிலில் அமரப் போகும் ஜெ., மாற்றி, மக்களை மின்வெட்டிலிருந்து விடுவிக்க, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தன் முதல் கையெழுத்தை இட வேண்டும்!

5/12/2011

உங்க உடம்ப பத்திரமாக பாத்துக்கோங்க?

இன்று வலைச்சரத்தில்,


நம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ புதன்

படித்து பயனடையுங்கள்.. 

நன்றி  ....

5/11/2011

மழையை ரசிக்காமல் யாரிருப்பார்?




என்னுடைய
அறியா வயதில்
அழியா நினைவுகள் இவை...!!!

மேகம் கறுக்கையில்
அம்மாவின் முகமும் கறுக்கும்
மழை தொடங்கிய பின்னோ
வீடே நீர்காடாகும் ...!

சோறு வடிக்க
உதவாத பாத்திரங்கள்
சொட்டும் நீரை
பிடிக்க உதவும் ...!

நீர் ஒழுகாத இடத்தில்
ஒன்டிக்கொள்ள
உடன்பிறப்புகளுடன்
அடிதடி சண்டை ...!

கிடைக்கும் ஒரு வேலை
சோற்றுக்கும்
மண்ணள்ளிப் போடும்
நனைந்த விறகும் அடுப்பும் ...!

மழை வலுக்க
கழிவு நீரும்
மழை நீருடன் சங்கமமாகி
அழையா விருந்தாளியாக
குடிசைக்குள் நுழையும்
அவை விட்டு சென்ற
வியாதிகள் உதவியுடன்
உலகை விட்டுச் சென்ற
தங்கை ஒன்று ...!

ஒவ்வொரு மழையும்
விட்டுசெல்லும் ஞாபங்கள்
மறையும் முன்னே
அடுத்த மழை...!!!

இன்று கண்ணில் பட்டது
ஒரு வரி
"மழையை  ரசிக்காமல் யாரிருப்பார்  ?"

5/10/2011

இது இலவச மருத்துவமனை !!!?

***********************************************************************************
அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு
ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?
ஊஹும் ஜெயில்ல.

***********************************************************************************


எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க
இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

***********************************************************************************

நல்ல காலம் பொறக்குது இந்த வூட்டு அய்யாவுக்கு வேலைல பதவி உயர்வு கிடைக்கப்போவுது... பிள்ளைங்கள்லாம் நல்லா படிக்கப் போவுது...
இந்தாப்பா குடுகுடுப்பாண்டி இந்த அய்யா கிய்யாவெல்லாம் விட்டுத் தள்ளு! கோலங்கள்ல அபியோட பிரச்சனை எப்ப தீரும், ஆனந்தம்ல அந்த கடங்காரன் அபிராமியோட அப்பனுக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா? கஸ்தூரில டெல்லி கணேஷ் குடும்பத்துக்கு என்ன ஆகும்? இதெல்லாம் சொல்லு உனக்கு வேண்டியதைத் தரேன். 

***********************************************************************************

அதோ அங்கப் போறாரே அவர் சஸ்பென்ஸ் கதை எழுதருதல கில்லாடி!
அப்டியா?
ஆமாம்! முதல் வரி என்ன எழுதப்போறாருன்னு அவருக்கே தெரியாதுன்னா பாத்துக்கயேன்.

***********************************************************************************
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?
அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான். 


***********************************************************************************

5/06/2011

வளைகுடாவில் தமிழன்...!




நாங்கள் ,
திரவியம் தேடி ஓடி வந்தோம்...!
இடையில் முகவரி மறந்தோம்..!

இல்லோன்று வாங்கிட 
இளமையை விற்றோம்...!

காதலைத் துறந்து 
வீடு மனை வாங்கினோம்...!

வாலிபத்தை கரைத்து
வங்கி கணக்கை ஏற்றினோம்...!

இளநரை பெற்றோம்,
இளைமையைத் தொலைத்தோம்,
பணம் பண்ணும்
இயந்திரங்கள் ஆனோம்...!


காற்றில்லா ஆடி,
கொலுவில்லா  புரட்டாசி,
பொரியில்லா கார்த்திகை,
கோலமில்லா மார்கழி ,
கும்மியில்லாப் பொங்கல் ,
எம்  பிள்ளைகள் 
இழந்தவை தான் எத்தனை...!

மணல் வீடு கட்ட 
ஆற்று மணலில்லை ,
கட்டிய வீட்டைக் கலைக்க 
அத்தை, மாமன்
மக்களுமில்லை...!

மழைக்கு முன் வீசும் 
மண்வாசம் நுகர்ந்ததில்லை ,
மழை பெய்த ஈரமண்ணை 
வெறும் பாதம் தொட்டதில்லை...!

ம்..ம்...
நாங்கள்,
திரவியம் தேடி ஓடி வந்தோம்,
டாலர் நாடி 
ஓடிக்கொண்டிருக்கிறோம்...!


5/05/2011

என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !?





நீளப்  போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டேன் 
என் மௌனத்தை ...!

என்னில் தேங்கிக் கிடந்த 
மகிழ்ச்சியை
சுரண்டிக் குளிர் காய்ந்த 
கோரமுகத்திற்குப்
பதிலடியாய் 
கை நீட்டும் என் மௌனம்...!

எனது வசவுகளும் 
கோபங்களும்
பொங்கிப் பாய்கையில் 
இலாவகத்தொடு 
உள்ளடைக்கும் என் மௌனம் ...!

சுற்றிலுமான
விமர்சனங்களுக்கும்
நான் புன்னகையோடு 
பரிமாறினேன் மௌனத்தை ...!

அவரவர் முகத்தை
அவர்களுக்கே காட்டும் 
கண்ணாடி 
என் மௌனம் ...!


5/04/2011

எடையைக் குறைக்க 7 வழிகள் !


நான் மூன்று மாதங்களுக்கு முன் அறுபத்தி நான்கு கிலோ எடை இருந்தேன் . இந்த மாதம் எடையை சரிபார்க்கும் போது ஐந்து கிலோ கூடியிருந்தேன். இந்த எடையை எப்படி குறைப்பது என்று இணையத்தில் தேடும்போது வெப் துனியாவில் ஒரு கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1.
உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2.
பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
"
அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3.
எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
"
நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4.
தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5.
உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6.
ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. "
நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.
இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!  

5/03/2011

வாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் !?




முடித்தே காட்ட வேண்டுமெனப்
பிடிக்க முயல்கிறேன் தருணங்களை

தப்பிக்க கற்ற இதனிடம் 
அவ்வப்போது என்  தோல்விகள் 
தீவிரப்படுகையில் கை நழுவும்

விட்டு விலகியவை மீண்டும்
சிந்தனைக்குள் ஒளிர்கையில் 

கண்ணெதிரே
மாற்று திறனாளிகளின்
அணிவகுப்பு...!


5/02/2011

கட்டி இழுத்துச்செல்லப்பட்ட ராஜபக்சே!


இந்த  செய்தி நக்கீரனில் வந்துள்ள செய்தியாகும்.. இதை  என் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு...

நார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர். பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.


பெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.



திரும்ப வருமோ அந்த நாட்கள்...!


வேலமுள் காற்றாடிகள்,
பணங்காயில் வண்டிசெய்தும்,
தைரியமாய் 'தும்பி' பிடித்தும்,
பன ஓலையில் ஃபேன் செய்து ஓடவிட்டும்,
நத்தை ஓடு திறந்து நகர்வதைச்
சத்தம் இல்லாமல் உற்று நோக்கியும் , 
அஞ்சாங்கால், ஏழாங்கால்  பல்லாங்குழிகளை 
ஐம்பது வயது பாட்டிகளோடு விளையாடியும்,
நாவல்  பழங்களை ஏறிப்பறித்தும்,
புளிய மரம் உலுக்கி விளையாடியும், 
மீன் பிடிக்க சட்டை  கழற்றி 
வெள்ளத்தில் விட்டுவிட்டு 
வீடு சேர வேட்கிப் போனதுமான
என் மழலை நாட்கள்...

இன்று
என் மகளோ
கணினி  இயக்கியும்,
படப்புத்தகமும்,
கரடி போம்மையுமாய்....!