கணவன் : கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது
மனைவி : இப்ப?
கணவன் : நரகத்தைத் தான் பார்த்துட்டேன்.. சொர்கத்த இனிமே தான் தேடணும்.
***********************************************************************************
என்னங்க நம்ம குடும்பத்துக்காக நான் நாயா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லுவீங்களே?
ஆமாம் அதுக்கு என்ன இப்போ?
இல்ல நம்ம வீட்டு வாசல்ல நாய் வண்டி வந்திருக்கு அதான் கேட்டேன்.
***********************************************************************************
நான் செத்துட்டா நீ என்னப் பண்ணுவ?
நீங்க செத்த பிறகு எனக்கு என்னங்க வாழ்க்கை.. நானும் செத்துப் போய்டுவேன்.
சரிதான்.. ஜோசியர் சொன்னது சரியாத்தான் இருக்கு.
என்னங்க சொன்னாரு?
நீ செத்தாலும் சனி உன்ன விடாதுன்னு.
***********************************************************************************
காதலன் : உன்ன அழகா படச்ச இறைவன் அதே சமயம் முட்டாளாவும் படைச்சிட்டானே...
காதலி : ஆமாம்.. நீங்க சொல்றது உண்மைதான்.
காதலன் : நீயே அத ஒத்துக் கொள்கிறாயா?
காதலி : ஆமாம், நான் அழகா இருந்ததால தான் நீங்க என்ன காதலிச்சீங்க.. நான் முட்டாள இருந்ததாலதான் உங்கள நான் காதலிச்சேன்.
***********************************************************************************
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
***********************************************************************************
நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆண்: ஏன் செய்து கொள்ள மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.
***********************************************************************************
ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
************************************************************************************