NATA - National Aptitude Test in Architecture என்பது பொறியியலில் ஆர்கிடெக் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகும்.
பி.ஆர்க்(Architecture)., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரமிது. விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், இன்னும், 10 நாட்களே அவகாசம் இருப்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்துவிடுங்கள்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கட்டடவியல் இன்ஜினியரிங் படிப்பான, பி.ஆர்க்., பாடப்பிரிவில் சேர, நாட்டா நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வை, மத்திய அரசின், தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் நடத்துகிறது.
வரும் கல்வி ஆண்டில், நாட்டா தேர்வு, ஏப்., 29ல், நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது.இந்த முறை, கணினி வழி தேர்வுகள் கிடையாது. எழுத்து தேர்வு முடிவுகள், ஜூன், 1ல் வெளியாகின்றன.
தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.coa.gov.in அல்லது http://www.nata.in/ என்ற இணையதளத்தில், ஜன., 18ல் விண்ணப்ப பதிவு துவங்கியது; மார்ச், 2ல் முடியும் என, ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளன. தேர்வு கட்டணத்தையும், மார்ச், 2க்குள் செலுத்தி விட வேண்டும். எனவே, பிளஸ் 2 மாணவர்கள், பி.ஆர்க்., படிக்க விரும்பினால், இன்னும், 10 நாட்களுக்குள், விண்ணப்ப பதிவை முடித்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"