Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/27/2018

+2 Accountancy ல் Centum எடுப்பது எப்படி?


How to get centum in plus two accounts?
+2 கணக்குப்பதிவியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி?
அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட் இல்லாமல் எந்த நிறுவனங்களும் இயங்க முடியாது. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அக்கவுன்டன்ஸி சப்ஜெக்டில் எப்படி  படித்தால்  சென்டம் எடுக்கலாம்? 

அறிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள், 3 மணி நேரத்தில் 150 மதிப்பெண்ணுக்கு பதில் எழுதும் அதே நாளின் அதே 3 மணி நேரத்தில், அக்கவுன்டன்ஸி மாணவர்கள் 200 மதிப்பெண்ணுக்கு தியரி, கணக்கு என எழுதவேண்டும். அதனால், அவர்களுக்கு டைம் மேனேஜ்மென்ட் மிகவும் முக்கியம்.   அதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

(அ) முதல் 5 நிமிடங்கள் 30 ஒரு மதிப்பெண் கேள்விகளையும்  வேகமாக    படித்து மனசுக்குள் அதற்கான பதிலை  சொல்லிப் பார்த்துவிடுங்கள். 

(ஆ) அடுத்த 10 நிமிடங்களில் எந்தெந்த கணக்குகளைப் போடப்போகிறீர்கள்     என்பதை  முடிவு செய்து விடுங்கள். 

(இ) 12 மற்றும் 20 மதிப்பெண் கேள்விகளில் கணக்குப் போடப்போகிறீர்களா அல்லது தியரி எழுதப்போகிறீர்களா என்பதையும்  முடிவு செய்யுங்கள். 

(ஈ)  பள்ளிகளில்  மாடல் எக்ஸாம்களில் 1 மதிப்பெண், 5 மதிப்பெண், 12 மதிப்பெண், 20 மதிப்பெண் என்ற வரிசையிலே நீங்கள் எழுதியிருந்தால், பொதுத் தேர்விலும் அப்படியே எழுதுங்கள்.
20, 12, 5, 1 என்ற வரிசையில் எழுதியிருந்தால், அதையே பின்பற்றுங்கள். பிறர் பேச்சைக் கேட்டு, ஆர்டரை மாற்ற வேண்டாம். பிறகு, நேரத்தை மேனேஜ் பண்ணமுடியாமல், பெரிய கேள்விகளை விட்டுவிடக்கூடும். 

(உ) 20 மதிப்பெண் கணக்கில் சரியான விடை வரவில்லையென அதிலேயே நேரத்தைச் செலவழிக்காமல் அடுத்த பதிலுக்குச் சென்றுவிடுங்கள். அந்தக் கணக்கை கடைசியில்கூட போட்டுக்கொள்ளலாம். 

(ஊ) இந்தக் கடைசி நேரத்தில், அட்லீஸ்ட் 3 அக்கவுன்ட்ஸ் மாடல் பேப்பர்களையாவது உங்களுக்கு நீங்களே டெஸ்ட் வைத்துப் பார்த்து, 3 மணி நேரத்தில் முடிக்கும் பயிற்சி எடுங்கள். 

2. அக்கவுன்டன்ஸி பொதுத்தேர்வில், புக் பேக் கேள்விகள்தான் அதிகம் வரும். பாடங்களின் உள்ளிருந்து கணக்குச் சம்பந்தப்பட்ட ஒரு மதிப்பெண் கேள்விகளைத் தவிர, மற்ற பெரிய கேள்விகளை மேக்ஸிமம் கேட்பதில்லை. 

3. மொத்தம் ஒன்பது சேப்டரிகளிருந்து 30 மதிப்பெண்ணுக்கு ஒன் வேர்டு கேள்விகள் வரும். ஒரு பாடத்திலிருந்து குறைந்தது 3 கேள்விகளாவது கேட்பார்கள். 

4. 5 மதிப்பெண் கேள்விகளில்... 7 தியரி சம்பந்தப்பட்ட கேள்விகள், 7 பிராப்ளம்ஸ் தருவார்கள். இதில், 10 கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டும். கணக்கில் சற்று பலவீனமான மாணவர்கள், தியரி கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தியரி பதில்களுக்கும் முழு மதிப்பெண் கிடைக்கும். எனவே, பயம் வேண்டாம். 

5. 12 மதிப்பெண் கேள்விகளில் 3 தியரி கேள்விகளும் 5 பிராப்ளம்களும் வரும். தியரியில் தேய்மானம் சேப்டரில் ஒரு கேள்வியும், ரொக்க திட்டப்பட்டியல் சேப்டரில் ஒரு கேள்வியும், கூட்டாண்மைப் பட்டியலில் ஒரு கேள்வியும் வரும். 5 பிராப்ளம்களில் முதல் பிராப்ளத்தை கட்டாயம் எழுத வேண்டும். இதில், வாராக் கடன் அல்லது ஒற்றைப் பதிவுமுறை ஆகியவைதான் இதுவரை வந்துள்ளன. ஸோ, இந்தக் கணக்குகளை நன்கு பிராக்டிஸ் செய்துபாருங்கள். 

6. நிறுமம் சேப்டரில் ஒரு கணக்கு வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. 

7. 20 மதிப்பெண் கேள்விகளிலும் முதல் கேள்வியைக் கட்டாயம் எழுத வேண்டும். ஒற்றைப் பதிவுமுறை அல்லது கூட்டாண்மை சேப்டரில் இந்த முதல் கேள்வி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

இந்த இரண்டு கேள்விகளைத் தவிர, இறுதிக் கணக்குகள் சேப்டரில் ஒரு கணக்கு, ரொக்கத் திட்டப்பட்டியல் சேப்டரில் ஒரு கணக்கு, விகித ஆய்வில் ஒரு கணக்கு,  நிறுமம்  கணக்குகள் சேப்டரில் ஒரு கணக்கு எனக் கட்டாயம் வரும். தயாராக இருங்கள். 

1. புத்தகத்தின் உள்ளிருந்துதான் எல்லாக் கேள்விகளும் வரும். புக் பேக் கேள்விகள் மட்டும்தான் வரும் என்று நம்பிக்கொண்டு பொதுத்தேர்வுக்கு பிரிப்பேர் செய்யாதீர்கள். 

2. 8 மதிப்பெண் கேள்விகள் இரண்டு கேட்கப்படும். இதற்கு மட்டுமே சாய்ஸ் உண்டு. 8 மதிப்பெண் கேள்விகளில், ஒரு சேப்டரில் இருக்கிற நான்கு அல்லது ஐந்து யூனிட்களிலிருந்தும் எந்தக் கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கப்படும். 

இவையனைத்தும் ஒரே கேள்வியாகத் தருவார்கள். இதில் 2 கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லையென்றாலும் தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமாவது பதில் எழுதுங்கள். மதிப்பெண் இழப்பு ஏற்படாமல் இருக்க, இது ஒரு வழி. தவிர, பெரிய கேள்விகளில் பார்ட்னர்ஷிப், கம்பெனி அக்கவுன்டன்ஸி, ஷேர்ஸ் ஆகிய சேப்டர்களிலிருந்து கேள்விகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 

3. ஒரு கணக்கு உங்களுக்குப் பாதிதான் தெரிகிறது என்றாலும் அதையும் போடுங்கள். ஸ்டேப் மார்க் உண்டு என்பதையும் மறக்காதீர்கள்.

4. சில கணக்குகள் பெரிதாக இருக்கும். ஆனால், உங்களுக்கு அது நன்றாகத் தெரிந்திருக்கும். அதற்காக, அந்தக் கணக்குக்கு மட்டும் நிறைய நேரம் செலவழித்து, மற்ற கேள்விகளுக்கு நேரமின்றி தவிக்காதீர்கள். 

5. அக்கவுன்டன்ஸி எக்ஸாமைப் பொறுத்தவரை சென்டம் வாங்க வேண்டுமென்றால், அத்தனை சேப்டர்களையும் வரிக்கு வரி படித்தால் மட்டுமே முடியும்.

6. நன்கு படித்தும் சென்டம் கிடைக்காமல் போவதற்கு, ஓல்டு பார்ட்னர் சேக்ரிஃபைஸ் விகிதத்தைக் கவனிக்காதது, ஷேரில் விகிதம் கண்டுபிடிக்காமல் விடுவது எனச் சின்னச் சின்ன தவறுகளே காரணம். இதுபோன்ற தவறுகளை தவிர்க்க, உங்கள் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, சரி செய்துவிடுங்கள். 

வெற்றி உங்களுக்கே!

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"