Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/24/2018

ஜே.இ.இ., JEE EXAM க்கு விண்ணப்பித்து விட்டீர்களா?



JEE - JOINT ENTRANCE EXAMINATION

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.,), மற்றும்  தேசிய தொழில்நுட்ப  கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி.,) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, ஜே.இ.இ., எனப்படும் ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்’! ஆகும்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இத்தேர்வு, ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் என இரு நிலைகளை கொண்டது. ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெறுவர்.

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ., எஸ்.எப்.ஐ., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ஜே.இ.இ., மெயின் மதிப்பெண்கள் போதுமானது. ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெற ஜே.இ.இ.,அட்வான்ஸ்ட் தேர்வு எழுவது அவசியம்.

தேர்விற்கான  தகுதிகள் :

பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் 2வில், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல் அல்லது தொழிற்கல்வி, போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

பி.ஆர்க்., மற்றும் பி.பிளானிங்., படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும்.

குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பாடங்களிலும் குறைந்தது தலா 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை (மெயின்) :

தாள் 1: பி.இ., மற்றும் பி.டெக்.,

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். கணினி மற்றும் எழுத்து முறையில் தேர்வுகள் நடைபெறும். அவற்றில் மாணவர்கள் விரும்பிய முறையை தேர்வு செய்துகொள்ளலாம்.

தாள் 2: பி.ஆர்க்., மற்றும் பி.பிளானிங்

கணிதம், திறனறிவு தேர்வு மற்றும் வரைதல் போன்ற பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்து முறையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு முற்றிலும் கணினி முறையில் மட்டுமே நடைபெறும்.

குறிப்பு: ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் அட்டை வைத்திருப்பது கட்டாயம்.

இந்த வருடத்திற்கு விண்ணபிக்க கடைசி தேதி: 07/07/2018
தேர்வு நாள்: 20/05/2018

மேலும்  விபரங்களுக்கு:  https://jeemain.nic.in , www.jeeadv.ac.in

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"