Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/22/2018

கல்வி உதவித் தொகை வேண்டுமா?


சென்னை பல்கலைகழக கல்லூரியில் படிக்கும் மாணவர்ளுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் .

சென்னையில் உள்ள சென்னை  பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  இணைப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும்  மாணவர்களுக்கு  பல்வேறு அறக்கட்டளைகளின் சார்பில் பல  உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. அந்த விவரங்களை பார்ப்போம்.
ஜான்ஸ்டன் ஆப் கார்ன்ஸ்லோச் என்டவுன்மென்ட்  :

ஜான்ஸ்டன் ஆப் கார்ன்ஸ்லோச் என்டவுன்மென்ட்  என்ற அமைப்பின் சார்பில்  முதலாமாண்டு கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்கு  மட்டும் உதவித்தொகை  வழங்கப்படுகிறது.

டாக்டர். ஏ. எல் முதலியார் உதவித்தொகை :

டாக்டர். ஏ. எல் முதலியார் அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மதர் எம்.செலின் கல்வி உதவித் தொகை :

மதர் எம்.செலின் கல்வி அறக்கட்டளையின் சார்பில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.400 உதவித் தொகையாக வழங்கப்படும்.

லார்ட் பெண்ட்லேன்ட் முசல்மான் உதவித்தொகை :

லார்ட் பெண்ட்லேன்ட் முசல்மான் அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

சர் தஞ்சாவூர் மாதவ ராவ் உதவித்தொகை :

சர் தஞ்சாவூர் மாதவ ராவ் அறக்கட்டளையின் சார்பில் முதலாமாண்டு பயிலும் இரண்டு இந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.700 உதவித் தொகையாக வழங்கப்படும்.

கவிஞர் எச்.ஏ கிருஷ்ண பிள்ளை தமிழ் உதவித்தொகை :
கவிஞர் எச்.ஏ கிருஷ்ண பிள்ளை அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

லயன்ஸ் கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் என்டவுன்மென்ட் :

லயன்ஸ் கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் என்டவுன்மென்ட் பி.ஏ., வரலாறு முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களை தேர்வு செய்து உதவித்தொகை வழங்குகிறது.

மெட்ராஸ் ஓரியண்டல் கான்பிரன்ஸ் உதவித்தொகை :

இந்த உதவிதொகையானது சென்னை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ஒரு மாணவரை தேர்வு செய்து ஆண்டிற்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.

கிருபா பாய் சத்தியநாதன் மெமோரியல் உதவித்தொகை :

கிருபா பாய் சத்தியநாதன் மெமோரியல் அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு  www.unom.ac.in  என்ற இணையதளத்தை காணவும்.

Pdf வடிவில் படிக்க : இங்கே கிளிக் செய்யவும்

வாழ்த்துக்கள்.

1 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"