Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/21/2018

10, 11,12 வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டி மற்றும் தேர்வு அட்டவணை


பத்தாம், பதினோறாம்  மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும், எந்தப் பாடங்களில் எப்படி கவனம் செலுத்த வேண்டும்,  அதிக மதிப்பெண் எடுக்க எப்படி திட்டமிடுவது என இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த வருடம் (2018) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடக்கிறது. 

ப்ளஸ் ஒன் தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ப்ளஸ் டூ தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வழக்கமாக வருடந்தோறும் இந்த நேரத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் வழக்கமாக  டென்ஷனில் படபடத்துக்கொண்டிருப்பார்கள். இந்த வருடம் பிளஸ் ஒன் மாணவர்களும் இந்த ஜோதியில் இணைந்து விட்டார்கள்.
அவர்களுக்கு சில அறிவுரைகள் :

இந்த தேர்வு நேரத்தில் டென்ஷன் நார்மலான விஷயம்தான். அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல்  உங்களுடைய  பெஸ்ட்டை படிப்பில் காட்டுங்கள்.

இதற்கு முன்பு பிளஸ் ஒன் எக்ஸாமில் 1 மார்க், 3 மார்க், 5 மார்க் என இருந்த கேள்வி பேட்டர்ன், இந்த வருடத்திலிருந்து 1 மார்க், 2 மார்க், 3 மார்க், 5 மார்க் என வரப்போகிறது. இதில், ஒரு மார்க் கேள்விகளுக்கு முழு புத்தகத்தையும் படித்தால்தான் பதில் அளிக்க முடியும். எனவே முழு புத்தகத்தையும் புரிந்து படித்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள்  கட்டாயம் வருகிற கேள்விகள், வருவதற்கு வாய்ப்பிருக்கும் கேள்விகள் என இரண்டாகப் பிரித்துப் படித்தால், கூடுதல் மார்க் எடுக்கலாம். 

படிக்க உட்காரும்போது, முதல் நாள் இரவு படித்ததை ஒரு தடவை பார்க்காமல் சொல்லி பார்த்துவிட்டு, அடுத்த பாடங்களுக்குச் செல்ல வேண்டும். இப்படி ரீகால் செய்வது, எல்லாம் படித்ததுதான் ஆனால், சட்டென்று ஞாபகம் வரவில்லையே என்கிற மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு  கம்ஃப்ர்டபிளான நேரத்தில், அமைதியான இடத்தில் அமர்ந்து படியுங்கள். அப்போதுதான் படிக்கும் பாடங்கள் நினைவில் நிற்கும்.

இது பொதுவான அறிவுரைகளே, ஒவ்வொரு பாடங்களையும் எப்படி படித்தால் அதிக மதிப்பெண், சென்டம் எடுக்க முடியும் என அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்..

வாழ்த்துக்கள் .....

Time Table :



0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"