Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/26/2018

‘கேட்’ (சி.ஏ.டி.,) CAT EXAM பற்றி தெரிந்துகொள்வோம்.


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், கட்டாயம் எழுத வேண்டிய தகுதித் தேர்வு ’கேட்’ (CAT) எனும் ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’.

நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ.(MBA) ,பி.ஜி.டி.எம்., - போஸ்டு கிராஜூவெட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் மற்றும் எப்.பி.எம்.,-பெல்லோ புரொக்ராம் இன் மேனேஜ்மென்ட்போன்ற பல்வேறு மேலாண்மை பட்டப்படிப்பில், உள்ள இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய அளவில், நடத்தப்படும் நுழைவுத்தேர்வு தான் ‘கேட்’.

மேலும், பல்வேறு பி.ஸ்கூல்ஸ் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ‘கேட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ‘அட்மிஷன்’ வழங்குவது குறிப்பிடத்தக்கது.

தகுதிகள்:


ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை: 

கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட் CBT (சி.பி.டி.,) முறையில், ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், 180 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வில், வெர்பல் எபிலிடி அண்ட் ரீடிங் காம்பிரிஹென்சன், டேட்டா இன்டர்பிரிடேஷன் அண்ட் லாஜிகல் ரீசனிங் மற்றும் குவான்டிடேட்டிவ் எபிலிடி ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண் உண்டு.

CAT 2018 Highlights :

Date of Exam3rd to 4th week of November 2018
Conducting BodyIndian Institute of Management
Mode of ExamOffline
Official Websitehttps://iimcat.ac.in
Duration of Exam180 Minutes
EligibilityMinimum 50% marks in any Bachelors degree.
Courses offeredPostgraduate Management courses
Minimum cutoff percentile60 percentile

விபரங்களுக்கு:  http://iimcat2018.in/

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"