Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/23/2018

சட்ட நுழைவுத் தேர்வு - CLAT விண்ணபித்து விட்டீர்களா?


சட்டத் துறையில்  வழக்கறிஞர் ஆக விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய, தேர்வு CLAT  என்று அழைக்கக் கூடிய    ‘காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’ (கிளாட்) எனும் நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் செயல்படும், 19 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு சட்டக்கல்லூரிகளில், சேர்க்கை பெறுவதற்கு, இந்த நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது  மிக  அவசியமாகும்.

இளங்கலை பாடங்கள்:

பி.ஏ.எல்எல்.பி., பி.எஸ்சி.எல்எல்.பி., மற்றும் பி.காம்.எல்எல்.பி.,

தகுதிகள்: 

பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. தற்போது பிளஸ் 2 படிக்கும், மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


முதுநிலை பாடம் :

 எல்எல்.எம்.,

தகுதிகள்:

குறைந்தது 55 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன் எல்எல்.பி., அல்லது ஏதேனும் ஒரு சட்ட பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-03-2018
தேர்வு தேதி : 13-05-2018


மேலும்   விபரங்களுக்கு:    www.clat.ac.in



0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"