Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

2/17/2011

இதை படித்தால் சிரிப்பு வருமா?


சிரியர் மனைவி
இறந்ததற்காக
விடுமுறை...!
நண்பன் கேட்டான்
அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?

*************************************************************************************

ம்பதாயிரம்
கொடுத்தேன்
வேலை கிடைத்தது
லஞ்ச  ஒழிப்புத்  துறையில்...!

***********************************************************************************

மாணவர்களே
யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்...!
நாங்கள் யாராவது
படிப்பில் ஈடுபடுகிறோமா?

மேடையில் அரசியல்வாதி...!

***********************************************************************************

அவன் பேசினான்
அவள் கேட்டாள்
திருமணமான முதல் ஆண்டு...!


அவள் பேசினாள்
அவன் கேட்டான்
இரண்டாம் ஆண்டு...!


இருவரும் பேசினார்கள்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்
கேட்டார்கள்
இது மூன்றாம் ஆண்டு...!

***********************************************************************************

இன்னும்
ஒரே ஒரு வார்த்தை
என்னை திட்டினால்
நான் விதவையாகிவிடுவேன் !!!
கணவனுடன் சண்டையில்,
மனைவி...!!!

***********************************************************************************



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/16/2011

மரத்தில் பணம் காய்க்குமா ?


ணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று பணம் கேட்டு நச்சரிக்கும் தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர் கூறுவது வழக்கம்.

னால் இன்று மரம், செடிகளை வளர்த்துப் பராமரிக்கும் வேலையே அதிக வருவாய் தருவதாக மாறிவருகிறது. இதன் மூலம் தோட்டக்கலை தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

பூமி வெப்பமயமாகி வருவது, சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள், மரம் செடிகளை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சாப்ட்வேர் நிறுவனங்கள், பல அடுக்கு வணிக வளாகங்கள், பிரமாண்ட திரையரங்குகள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் நிறுவன வளாகத்தில் தோட்டங்களை அமைப்பதிலும், அறைகளுக்குள் அழகுக்காக தொட்டிகளில் செடிகளை வைத்திருப்பதையும் தவறாமல் கடைபிடிக்கின்றன. 

துபோல கட்டடங்களில் மேல் தளங்களில் தோட்டம் அமைப்பதும் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களில் தோட்டம் அமைப்பது, உள்புறத்தை அலங்கரிக்க தொட்டிகளில் செடிகளை வைத்து பராமரிப்பது போன்ற பணிகளை அனைவராலும் எளிதில் மேற்கொள்ள முடியாது. இதற்கு நிச்சயமாக சிறப்புப் பயிற்சி தேவை. தோட்டக்கலைத்துறையில் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே இதைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இதனால் இந்தப் படிப்பு முடித்தவர்களை தேடிப்பிடித்து தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி வருகின்றன பல நிறுவனங்கள்.

செடி, மரங்கள் குறித்த நுட்பமான அறிவு, ஆர்வம், சிறிது தகவல்தொடர்புத் திறனும் இருந்தால் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம். இந்தியாவில் மட்டும் தோட்டக்கலை தொடர்பாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பட்ட, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் மாணவர்கள் நமது நாட்டை மட்டுமின்றி தங்கள் எதிர்காலத்தையும் பசுமையாக்கிக் கொள்ளலாம்.

விதை ஒன்னு டிராப்ட்ல இருக்கு அதை போடனும்தான் நினைச்சேன்.. இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன். நம்ம ரஹீம் கஸாலி அண்ணனைப் பார்த்து எப்பவோ  எங்கோ படிச்சதை போட்டுட்டோமில்ல.. 



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/15/2011

பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு?


பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால்  நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள்.  இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.

சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பரபரப்பாக இயங்கும் அரசியல் தலைவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சினிமா நட்சத்திரங்களின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் குப்புசாமியும் மாரிச்சாமியும்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.

பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம்.

கா
லையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. நான் வருத்தமாக இருக்கிறேன் என்று பேஸ்புக்கில் கண்ணீர் வடித்தால், உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் ஆறுதல் வருகிறது. 

காதலைச் சொல்லவும், முத்தமிடவும், கட்டிப் பிடித்துக் கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. நமது பண்பாட்டைச் சிறையாக நினைக்கும் புதிய தலைமுறையினர், இந்த வசதிகளை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும், மீனவர்களுக்கு ஆதரவாகவும் தெருக்களில் போராட்டம் நடக்கிறதோ இல்லையோ, ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கண்டிப்பாக நடக்கும். ஸ்பெக்ட்ரம் முறைகேடும், எகிப்து எழுச்சியும் காரசாரமாக விவாதிக்கப்படும். 

பி.டி. கத்திரிக்காய் வேண்டாம் என்றும், போஸ்கோ தொழிற்சாலை கூடவே கூடாது என்றும் காரசாரமாக பிரசாரம் செய்யப்படும். அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படும். கையெழுத்து இயக்கம்கூட நடக்கும். இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.

ட்டங்களுக்கு இங்கு வேலை இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்;  மதகுருமார்களை கேலிச் சித்திரமாக வரைந்தால் ஆண்டுக் கணக்கில் தண்டனை கிடைக்கும்;  நீதிமன்றத்தை அவமதித்தால் சிறைக்குச் செல்ல  வேண்டும். 

துதான் பொதுவான சட்டம். சில மேற்கத்திய நாடுகள் பேஸ்புக்கில் எழுதுவதைக் கண்காணிக்கின்றன. விதிமீறல்கள் இருந்தால் தண்டிக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இங்குள்ள வலையுலகம் இதையெல்லாம் பொருள்படுத்துவது இல்லை. எல்லோரும் திட்டப்படுகிறார்கள், எல்லாமே விமர்சிக்கப்படுகின்றன. அந்த அளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

ந்தச் சுதந்திரம் இப்போது எதிர்மறையாகப் பயன்படுகிறது. பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரின் தனிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு. அண்மையில் பேஸ்புக் நிறுவனரின் கணக்கையே இணையக் குறும்பர் யாரோ திருடி, கண்டனச் செய்தியை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணைய வலைத்தள ஜாம்பவானுக்கே இந்தக் கதி என்றால், அவரை நம்பிக் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் நிலை குறித்து கவலை எழுந்தது.

ப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதுவும் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் இருக்கும் முகப்புப் புகைப்படம் மிகவும் பிரபலம்.

ன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள் என்று தத்துவம் வேறு சொல்லப்படுகிறது. இந்த முகப்புப் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். பொதுவெளியில் காணக்கிடைக்கும். இது தவிர புகைப்படத் தொகுப்பும் இருக்கும்.  இப்போது இந்தப் புகைப்படங்கள் எல்லாம் திருடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் புகைப்படங்களைத் திருடி அப்படி என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா?

ற்போது பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி ஆபாசமான டேட்டிங் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. லவ்லி ஃபேஸஸ் என்கிற அந்த இணையதளம் சுமார் 2.5 லட்சம் பேரின் பேஸ்புக் முகப்பு புகைப்படங்களை திருடியிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. 

ந்தப் புகைப்படங்கள் அனைத்தும் முக உணர்வை அடையாளங் காணும் மென்பொருளின் உதவியுடன் வகைப்படுத்தப்பட்டு இவர் இப்படிப்பட்டவர், இவருடன் டேட்டிங் செல்ல அணுகவும் என்கிற ரீதியில் சேவை அளிக்கிறது. இதில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் எல்லோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாடுகளை உடைத்து அனைவரையும் இணைக்கும் முயற்சி இது என்று இந்த டேட்டிங் இணையதள உரிமையாளர்கள் தங்களது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். (பதிவு தந்த தினமணிக்கு  நன்றி).

னால், ஒரு டேட்டிங் இணையதளத்தில் தனது படம் இடம்பெறுவதை, அதுவும் தன்னுடைய அனுமதியே இல்லாமல் இடம்பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். என்னதான் அத்துமீறுதல், கட்டுடைத்தல் போன்ற நவீன மரபுகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தியச் சமூகம் இவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரையில் முகநூலில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/14/2011

இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..


ழை வருகிறது
குடை கொண்டு வாருங்கள்
வாசலில்
அவள் போட்ட கோலம்...!

***********************************************************************************

டுமையான வெயில்
ஆனாலும் குளிர்கிறது
கையில் 
உன் கடிதம்...!

***********************************************************************************

வ்வொரு வார்த்தைக்கும்
அர்த்தம்  கண்டுபிடிக்கிறாய் நீ
அர்த்தம் ‌ என்பதற்கு
வேறு வார்த்தை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!

***********************************************************************************

ன் மௌனத்தைப்
பலவாறாக
மொழிபெயர்த்து விட்டு ,
எதுவும் பிடிபடாமல் - 
கடைசியில்
மொழிபெயர்த்துவிட்டு
சரிதானா ? என்றேன்
அதற்கும் மௌனம் தானா?

***********************************************************************************

மார்கழி  மலர்ந்துவிட்டது
பனியும் விழத் தொடங்கிவிட்டது
உடலெல்லாம் நடுங்குகிறது
வெப்பம் பெற ஏங்குகிறது
நீ என் அருகில் இருந்தால்
ஓரு தீக்குச்சி வீணாகாது...!

***********************************************************************************

பெண்ணுரிமை வாழ்ந்தாலென்ன?
வீழ்ந்தாலென்ன?
லோகத்தில் ஆஸ்திகமோ?
நாஸ்திகமோ?
நசித்தால் நமக்கென்ன?
பேரோ புகழோ பணமோதான்
வந்தாலென்ன? போனாலென்ன?
நாளை நாம் சந்திக்க வேண்டும்
அது மட்டும் தான் முக்கியம்
காதலிக்காத வாழ்கைக்கு
இன்ன பிற தேவை...!


2/13/2011

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது

மிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.

ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.(நன்றி நாளிதழ்)

இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

2/12/2011

மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்


ந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற ஒரே எண்ணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடினார்கள், வெற்றிபெற்றார்கள். அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.

னால் இப்போது நிலைமையே வேறு. காரணம் அதன்பிறகு ஏற்பட்ட குழப்பங்கள். அதனால் மேலோர், கீழோர் என பேதம் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் மதப் பிரச்னை உருவானது. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் தலைவிரித்தாடுகிறது. தேசிய அளவிலான இப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயத்தில் பிராந்திய அளவில் இன்னும் தொடர்கிறது.

மிழகத்தில் அண்மைக்காலமாக ஜாதிய அமைப்புகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சுயநலமும், தனிப்பட்ட விருப்பு,வெறுப்பும்தான் என்பதில் ஐயமில்லை  - நன்றி எஸ்.ரவீந்திரன்.

 விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஜாதித் தலைவர்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்டனர். 5 ஆண்டு நாடகம் முடிந்துவிட்டது. மீண்டும் கச்சேரியைத் தொடரலாம் என இவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

 னி இவர்களின் குரல்களை அடிக்கடி கேட்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஜாதிகள் பற்றிய புள்ளிவிவரங்களுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளைத் தேடி அலைவதுதான் இவர்கள் லட்சியம். தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று பீடிகையைத் தொடங்கி, பல லகரங்களை கறப்பது மட்டுமே நோக்கம் எனலாம். இதற்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.

 ன்றுபட்டுக் கிடப்பவர்களை உசுப்பிவிட்டு பிரிவினைக்கு வழிவகுப்பார்கள். நமது இனத்தாருக்கு சீட் தரவேண்டும் என கூச்சலிடுவார்கள். வேறு வழியின்றி பிரதானக் கட்சிகள் இவர்களையும் தங்களுடைய கூட்டணி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.

தில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
வாக்காளர்கள் ஆகிய நாம் இன வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து சிறந்த வேட்பாளர்கள் யார் என்பதைத் தேர்வு செய்து மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1.போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..
                                       

2/11/2011

நானும், எனது ஞாபகங்களும்..


ன்புடைமை
அதிகாரம்
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்...!

***********************************************************************************
தியாதார் வாசல்
மிதிக்காதே...!
“எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்” 

***********************************************************************************

ன்று 
என்ன செய்து கிழித்தாய்?
கேட்கிறது
நாள்காட்டி
...!

***********************************************************************************
முகம் சுளிப்பதில்லை
குப்பைகளை கண்டு
இரைதேடும்
கோழிகள்...!

***********************************************************************************

தொட்டிக்குள்
வாழ்ந்தாலும்
நீந்துகிறது
மீன்...!

***********************************************************************************
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1.போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..
                                         3. அழுத பிள்ளைக்குத்தானே பால்? 
 
 
 
                                 

2/10/2011

போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்

சில மாதங்களாக, இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக மிக உயர்ந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு, பெரிய வியாபாரிகளின் பதுக்கல் மட்டும் அல்ல, மத்திய, மாநில அரசின் நிர்வாக சீர்கேடும் தான் காரணம்.

சென்ற ஆண்டு, சிம்லாவில் ஆப்பிள் விளைச்சல், பன்மடங்கு அதிகமாக இருந்தது. அதனால், சென்னையில், தரம் குறைவான ஆப்பிள், கிலோ நாற்பது ரூபாய்க்கும், தரமானது கிலோ ஐம்பது ரூபாய்க்கும் கிடைத்தது.

பொதுவாக இந்த ஆப்பிளை, கிலோ 120 ரூபாய்க்கு விற்பது வழக்கம். சென்ற ஆண்டு குறைவான விலைக்கு விற்ற ஆப்பிள் விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஊக்கத் தொகை தந்ததா? பொருட்களின் விலை குறைவாக உள்ளபோது, தங்களது நடவடிக்கையால் தான், விலை குறைந்துள்ளது என அமைச்சர்கள் சொல்கின்றனர். 

ஆனால், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் போது, அவர்கள் அதற்கு பொறுப்பேற்பதில்லை. மக்கள் நன்மையை சிறிதும் கருதாமல், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தும் மத்திய அரசு, இவை நியாயம் தானா என யோசிக்க வேண்டும்.

கச்சா எண்ணெய் பேரல், 140 டாலராக விற்ற போது, இந்தியாவில் பெட்ரோல் விலை, லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக இல்லையே. 

இதை மத்திய நிதிஅமைச்சர் தான் விளக்க வேண்டும்.  பெரும்பாலும் எல்லா அமைச்சர்களும், கபில்சிபல் போல், உண்மையை மறைத்து, போலியாக பேசுகின்றனர். தேசப்பற்று இல்லாமல், சுயலாபத்துக்காக செயல்படுகின்றனர். ( நன்றி தினமலர்)

மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், கவிதை பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

                                         2. என்னடா உலகமிது...

2/02/2011

கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..



ருட்டில்
வந்துவிழும்
நிலவொளிகளை  உள்வாங்கிய
உறக்கத்தில் வந்து விழுந்ததன்று
இந்தக் கனவு...!



ழுந்தும்,  எழாமலும்
புரண்டு படுக்கையிலே
அதிகாலை வருமுன்னே
நித்திரையில் வந்து விழுந்ததன்று
இந்தக் கனவு...!


சிந்தனையை சீா்படுத்தி
மௌனித்த காலங்களில்
இதயப்  பள்ளத்தில்
வந்து விழுகிறது,
கண்களை  திறந்துகொண்டு இருக்கையிலே
ஒரு கனவு...!
 
ங்கையும், காவிரியும்
கைக் கோர்த்துக் கொண்டது...!
ஊற்றெடுப்பது என்னவோ
இமயமானாலும்
கடலோடு கலந்துகொள்வது
தென்குமரியில் தான்...!

னி,
பாரதத்தின் வரைபடத்தில்
ஒரே நதிதான்...!

வேதங்கள் ஒலிக்கும்
ஆலயங்களுக்கு விடுமுறை...!

தேவன் கோயில்
மணிகூண்டு இனி
மணிகாட்ட  மட்டுமே...!

குரான்களை ஓதும் மசூதிகளோ
புறாக்கள் வாழும் கூடுகளாகிவிட்டன...!

கலவரக் காலங்கள்
கலைந்து போய்விட்டது
இனி இங்கே
ஒரே மதம் தான்...!

நிலவுக்குள்
இந்தியக் குடியிருப்பு,
செவ்வாயில்
நம்தேசத்து செடி கொடிகள்,
ஒன்பது கோள்களுக்குள்ளும்
அழியாத அன்பை விதைப்பதே
இனி நமது
ஒரே சிந்தனை...!

காஷ்மீரத்து எல்லையோரம்
மொட்டுகள் மட்டுமே வெடிக்கும்
ரோஜா தோட்டங்கள்...!

லங்கைக்கு பாலம் அமைத்து
தென்னை ஓலைகளால்
கடல் நெடுகிலும் தோரணங்கள்...!

சீனத்து பெருஞ்சுவரில்
நம் இந்திய குயில்கள்...!

வாகா எல்லையில்
நம் இந்திய மயில்கள்...!

லகம் முழுவதும்
வெள்ளைக் கொடி பறக்கவைப்பதே
இனி நமது
ஒரே இலக்கு...!

பொதி சுமக்கும் குழந்தைகளுக்கு
உள்ளங்கையில்
அடங்கிபோகும் பாடங்கள்...!

வேலைக்கு ஆள் கிடைக்காமல்
ஓடி,ஓடி 
அலைய வேண்டும் நிறுவனங்கள்...!

குற்றங்கள் இல்லாததால்
காவல் நிலையங்களுக்கு
நிரந்தர விடுமுறை...!

னவுகளுக்கு ஏது முற்றுபுள்ளி
இன்னும் சொல்வேன்...!

காஷ்மீரத்தில் நிகழும்
ஊடுருவல்கள் போல
என் விழிகளின் வழியே
இந்தக்  கனவுகள்
ஊடுருவித் தொலைக்கிறது...!


ர்நாடகத்து அணைகள் போல
மூடியே கிடக்க
உடன்பட்டதில்லை,
அதனால் தான்
அதையும் எழுதித் தொலைக்கிறது
என் எழுதுகோல்...!

 

ந்தக் கனவுகள்
வந்தது என்னவோ
கண்கள்
திறந்து கிடந்தபோதுதான்...!
வைகள் நிறைவேற
காத்துக் கிடப்பதுதான் விதியோ?

ருட்டுக்குள்
ஒளி தேடுவதை விட்டுவிட்டு
உழைப்பென்னும்
ஒளியெடுப்போம்...!

சிலந்திகளுக்கு
சாரங்களாய் இல்லாமல்
சரிந்துபோன வெற்றிக்கு
கைக் கோர்ப்போமானால்
இந்தக் கனவுகள் கூட
நாளைய
நிஜங்கள்தான்...!


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், கவிதை பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.



2/01/2011

அழுத பிள்ளைக்குத்தானே பால்?

ஒன்றரை அடி உயரமும் 2-3 கிலோ எடையுடன் பிறந்த நம்மைத் தாய்ப்பாலுக்குப்பின் இப்போதுள்ள உருவத்துக்கு வளர்த்தவர்கள் விவசாயிகள்தானே? 

இந்த ஆழமான உண்மையைப் பாரதப் பிரதமர் முதல் கடைசிக் குடிமகன்வரை எல்லோரும்  சௌகரியமாக மறந்துவிடுகின்றனர். 

  பிரதமர் மன்மோகன் சிங், விவசாயத் துறை வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்; பசுமைப் புரட்சிக்குப் பின் புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளைச் சென்றடையவில்லை; விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் விவசாயிகளிடம் செல்ல வேண்டும், என்றெல்லாம் பேசுவாரா?  

இவர் மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் அலுவாலியா, உணவு அமைச்சர் பவார் எனப் பலரும் இதே கருத்தை எதிரொலிக்கின்றனர். வேடிக்கை என்னவென்றால், விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று முழங்கும் மன்மோகன் சிங் அரசு ஒரு சந்தர்ப்பத்தில்கூட விவசாயிகள் வாழ்வு எப்படியுள்ளது என்றோ, விவசாயிகள் வருவாய் எவ்விதமுள்ளது என்றோ பேசியதில்லை. ( நன்றி ஒர் தினசரி)


அரசு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்த விவசாயப் பல்கலைக்கழகங்களும் விவசாயத் தற்கொலைகள் பற்றி விவாதிக்கவில்லை. 

ஒரு பல்கலைக்கழகம்கூட தன் சொந்தக்காலில் நின்று தற்சார்பில் வாழ்ந்த விவசாயிகள் வாழ்வு ஏன் இப்படிச் சிதைந்துபோனது என்று ஆராயவில்லை.  ஆங்கிலேயரின் சுரண்டல், அடிமை ஆட்சியின்போது விளைந்ததில் பெரும் பகுதியை வரியாகப் பிடுங்கிக் கொண்ட போதும்கூட நிகழாத அளவிலான தற்கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏன் நிகழ்ந்திருக்கின்றன என யாரும் யோசிக்கக்கூடத் தயாராக இல்லை. 


இந்த அவலத்தைப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்கூட அலசவில்லை.  இது போன்றதொரு அவலம் - இதில் நூறில் ஒரு பங்கு அவலம் தொழில் துறையிலோ, சேவைத் துறையிலோ நிகழ்ந்திருந்தால் அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல்பக்கச் செய்தியாகி இருக்கும். தொலைக்காட்சிகளில் முக்கிய நேரத்தில் விவாதப் பொருளாகியிருக்கும். 


இந்தியா போன்றதொரு, 110 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு தனது விவசாயிகளைக் கொன்றொழித்துவிட்டுக் கம்பெனிகள் மூலம் மக்களுக்கான உணவைப் பெற முடியாது. தனக்கான உணவைக் கையேந்திப் பெற முடியாது. சுதந்திரமாக இருக்க முடியாது. நம் விவசாயிகள் பிற தொழிலில் உள்ளவர்களைவிட  கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். 

அதற்குத் தேவை மேலோட்டமான நடவடிக்கைகள் அல்ல. வேளாண்மைத் திட்டங்களில் அடி முதல் நுனி வரை மாற்றம் தேவை. பார்வையில் மாற்றம், சிந்தனையில் மாற்றம் தேவை, மக்கள் மீதான ஆத்மார்த்தமான அக்கறை தேவை.  இந்திய விவசாயிகளுக்காகப் பரிந்து பேச, அவர்களது பிரச்னைகளை நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்க யாருமில்லையே, ஏன்?  

எல்லாம் வரும். எல்லாம் கிடைக்கும். என்ன சொல்லி என்ன, அழுத பிள்ளைக்குத்தானே பால்?  புரியும் என்று நினைக்கிறேன்...
 

விவசாயிகளை பற்றிய இப்பதிவிற்கு உங்கள் கருத்து என்ன?


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....  அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.  நன்றி..




நேற்றைய பதிவு :      
என்னடா உலகமிது...