Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

5/31/2013

இந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண்டா?



தமிழக முதல்வர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று, சட்டசபையில் சரத்குமார் பேசுகிறார். இதே போல், அ.தி. மு.க.,வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று பேசுகின்றனர்.

 தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, "சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட, வேஷ்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும்' என்கிறார். ஆக, இந்தியாவின் தென் கோடி மாநிலமாம், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனும், பிரதமராக வர முடியும் என்று, பேசும்படியான நிலை, தற்போது உள்ளது. உத்தர பிரதேச அகிலேஷ் யாதவும், இங்கு வந்திருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, "எங்கள் கட்சி அதிக சீட்கள் ஜெயித்தால், என் தந்தை பிரதமராவதற்கு, நீங்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறிச் சென்றார். 

தற்போது, நிலவி வரும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை, மாபெரும் ஊழல்களால், திறமையற்ற நிர்வாகத்தால், சீரிய தலைமையின்மையால், காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு, தேசியக் கட்சிகள் பெரும்பான்மை பெற முடியாத நிலை போன்றவற்றால், தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு, கூடுதலாக தோன்றுகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க., 30 இடங்களுக்கு மேல் ஜெயித்து, தேசியக் கட்சிகள் எதற்கும் பெரும்பான்மை இல்லை என்னும் நிலை வரும் போது, பிரதமரோ அல்லது துணைப் பிரதமர் பதவியோ, ஜெயலலிதாவிற்கு கிடைக்க வாய்ப்புண்டு. 

அதற்கான தகுதிகள் அவருக்கு உண்டா என்றால், உண்டு என்றே சொல்லலாம். தற்போது, அனைத்து விமர்சகர்களும், நரேந்திர மோடி பிரதமராக வந்தால், நன்றாக இருக்கும் என்றே கூறுகின்றனர். அவருடன் ஒப்பிடுவோமேயானால், ஜெயலலிதாவும் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஏழு மொழிகள் பேசத் தெரியும்; நான்கு மொழிகள் எழுத, படிக்கத் தெரியும். மிகப் பரந்த தொலை நோக்கு பார்வை உடையவர். அவரும், உலகறிந்த ஒரு பிரபலமான அரசியல் தலைவரும் கூட. எந்த ஒரு விஷயத்திலும், துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனால், தமிழனின் தலை எழுத்து, என்ன என்பதற்கு, இனி வரும் காலம் தான், பதில் சொல்ல வேண்டும்.

சு.பொன் இருளாண்டி, தேனி ...


5/30/2013

இது சந்தியாவின் முத்தம்



பூர்வமான
ஒரு தனிமையில்
உட்கார்ந்து  கொண்டிருந்தோம்.

வார்த்தைகளின்
இடைவெளிகளை நிரப்பிய
நெகிழ்வான மௌனங்கள்
கரைத்துக் கொண்டிருந்தன
நாம் பேச இயலாத
சஞ்சலங்களை.

ந்த அடர்ந்த வனத்தின்
ஒற்றைப் பட்டாம்பூச்சியைப் பின்
தொடர்ந்துக்கொண்டிருக்கிறது
உன் மனம்.

ந்த நீர்க்குமிழிக் கணத்தின்
எதோவொரு இழையில்
மீண்டும் பலப்படுகிறது
நம் நட்பு .

நெகிழ்வுகள் நீங்கிய
வேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!



மறுபதிவு .,
படங்கள் உதவி கூகிள்.

5/28/2013

பாமக விடம் கையேந்துகிறதா திமுக ?


வரும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இம்முறை கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவளித்தார்ல் அடுத்த ஆண்டு விஜயகாந்தின் மச்சான் சதீஷுக்கு திமுக ஆதரவளிக்கும் என்பதுதான் பேரம். ஆனால் விஜயகாந்தோ இம்முறை சுதீஷ் என்பதில் உறுதியாக இருந்தார். 

இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் பேசாமல் தேர்தலையே புறக்கணித்துவிட்டால் என்ன? என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக.. 

இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது. 

காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் என்று திமுக நம்புகிறது. 

ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. 

பாமக கை கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

5/27/2013

கருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்?


ஊழலின் விளை நிலம் இந்தியா' என்று சொல்லும் அளவுக்கு, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு சேர்த்ததில், காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான பங்குண்டு.

5/25/2013

டி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்


பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

5/24/2013

இதற்காகவே அம்மாவை பாராட்டலாம்...



"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்" என சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்திய போதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

60 சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர்.

அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது" என தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை.

வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக அரசின் அறிவிப்பு, மிகவும் தவறானது. ஆந்திரா உட்பட பல மாநிலங்கள், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்துள்ளன.

"தகுதி மதிப்பெண்கள் அளவை, மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம்" என, என்.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழக அரசு மட்டும், ஏன் இப்படி செயல்படுகிறது என, புரியவில்லை.

ஒரே தகுதியை, அனைத்து தேர்வர்களும் பெற வேண்டும் என்பது சரியல்ல. இதனால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நல்ல தரமான ஆசிரியர்கள் உருவாக இது சரியான நடவடிக்கையே.. இதற்காகவே அம்மாவை பாராட்டலாம்...

5/23/2013

காமெடி கலாட்டா



எஸ்.எம்.எஸ்.கலாட்டா

1) Complete மற்றும் Finished --- இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை Complete....
அதுவே அத்தனை நண்பர்களும் பெண்களாக இருந்துவிட்டால் உங்கள் லைப் Finished....

2) யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........

கண்ணா பின்னா தத்துவங்கள்

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, 
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?" 

2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து 
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். 
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

விஜய்க்கு வச்ச ஆப்பு

"நடிப்புனா என்ன" என்று கேட்ட போது.
கமல் -அது என் இன்னொரு உயிர்
ரஜினி - அதுதான் என் வாழ்க்கை
சூர்யா - அதுதான் என் சுவாஸம்
விஜய்- அப்படின்னா என்ன "ஏதாவது ரஜினி படமா?சொல்லுங்க REMAKE பன்னிடலாம்

Mr.மொக்கை

MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..
"என்னா மேன்.. உன் mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!
மொக்கை பதிலளித்தார்..

கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!

சர்தார்ஜீ ஜோக்

சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழன், குஜராத்தி, சர்தார் ஜீ ஆகிய மூவரும் தப்பினர். நீண்ட தூரம் ஒட முடியாத மூவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தினுள் சென்று தம்மைத் தாமே கோணிப் பைகளில் கட்டிக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் அங்கு பொலீஸ் படையணி வந்து சேர்ந்தது. முதலில் தமிழன் இருந்த மூட்டையை காவல் துறை அதிகாரி காலால் உதைத்தார்
அப்போது அவன் “வவ்! வவ்!” எனச் சத்தம் இட்டான்.

அடுத்து குஜராத்தி “மியாவ்! மியாவ!” எனச் சத்தமிட்டார்.
இந்த இரு கோணிப் பைகளிலும் முறையே நாய் மற்றும் பூனை இருப்பதாக எண்ணிக்கொண்டனர் காவல் துறையினர்.

இறுதியாக அவர்கள் சர்தார் ஜீ இருந்த பையை எட்டி உதைத்தார் நீண்ட நேரம் எந்த சத்தமும் வரவில்லை. மீண்டும் ஓங்கி உதைத்த போது

“உருளைக் கிழங்கு” என ஒரு சத்தம் வந்தது.

ரசிச்சது எப்புடி............

5/22/2013

TNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி?




தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, வருகிற ஜுன் 17ம ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17 ஆம் தேதியும். இரண்டாம் தாள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


தாள்-I...


1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.


தாள்-II...


6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள்அமைந்திருக்கும்.

ஆகவே , தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.

150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.

காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.''

- தகவல் இணையம்.

உலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை


குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இந்த வருடம் உலக பொருளாதார அமைப்பில் பேச உள்ளார். தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தவர்  நடிகை திவ்யா ஸ்பாந்தனா. 

இவருக்கு உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இளம் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், சர்வதேச இளம் தலைவர்கள் கலந்துகொள்வார்கள். இவர்கள் சர்வதேச பிரச்னைகள், அபாயங்கள் பற்றியும் அதை தீர்க்கும் விஷயங்கள் பற்றியும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். 

இதில் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இளைஞர்கள் அரசியலுக்கு ஏன் வரவேண்டும். கொள்கை முடிவுகளில் ஏன் பங்கெடுக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறார். இந்தக் கூட்டம் செப்டம்பர் மாதம் சீனாவில் நடக்க இருக்கிறது.