Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

4/20/2011

தமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை: இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்; ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு அறிக்கை!?


இலங்கை இறுதி போரில் போர் குற்றம் நடந்ததா? என கண்டறிய ஐ.நா.சபை 7 பேர் குழுவை அமைத்தது. இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி டருஷ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை அமைப்பு பிரதிநிதி யாஸ்மின் சோஜா, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன் ரட்னா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விரிவாக விசாரணை நடத்தினார்கள். 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டன.   அவர்கள் விசாரணையை முடித்து 196 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளனர்.

இந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இருதரப்பினருமே போர் விதிமுறைகளை மீறினார்கள். இருதரப்பும் போர் குற்றங்களை செய்தன என்று கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* இறுதிப் போரின்போது ஒரே இடத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் தப்பி செல்ல முடியாமல் குவிந்து இருந்தனர். அவர்கள் உயிரைப்பற்றி கவலைப் படாமல் இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் இரு தரப்பினரும் தாக்கினார்கள்.

* இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

* தாக்குதல் நடத்தப்படாத இடம் என அறிவித்து விட்டு அந்த பகுதிகளிலும் குண்டு வீசினார்கள்.

* போரில் தடை செய்யப்பட்ட குண்டுகளும், ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. மக்கள் உயிரிழப்பை பற்றி கவலைப்படாத அரசு குண்டு வீச்சை ஊக்கப்படுத்தியது.

* ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை பொதுமக்களுக்கு உதவி செய்ய விடாமலும், சிகிச்சை அளிக்கவிடாமலும் ராணுவம் தடுத்து விட்டது.

* அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பெரிய குண்டுகளை வீசி தகர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் செய்யப்படவில்லை.

* போரில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதால் பத்திரிகை நிருபர்கள் அங்கு செல்லவிடாமல் தடுக்கப் ட்டனர். பொதுமக்கள் இறப்பு குறித்து விமர்சனம் செய்தவர்கள் கடத்தப்பட்டனர். மிரட்டப்பட்டனர்.

* ராணுவம் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

* இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் சிக்கி கொண்டு பொதுமக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர். பெண்கள், குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

* ஏராளமான தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்தனர். அவர்கள் பலர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் சிலரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கொன்றனர்.

* போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை குறுகிய பகுதிகளுக்குள் அடைத்து வைத்தனர். அங்கிருந்த பெண்களும் கற்பழிக்கப்பட்டனர்.

* வெளியே வந்த மக்களை விடுதலைப் புலிகள்தானா? என கண்டறிய எந்த அளவு கோளையும் வைக்கவில்லை. சந்தேகப்பட்ட அனைவரையும் அழைத்து சென்று சித்ரவதை செய்தனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள்.

* போர் பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்தனர்.

* விடுதலைப்புலிகள் என சந்தேகப்பட்ட நபர்களை ராணுவத்தினர் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

* போரில் தப்பி வந்த மக்களுக்கு போதிய வசதி செய்து தராமல் கடும் கஷ்டங்களை கொடுத்தனர். சித்ரவதைகளும் நடந்தன.

* போரில் காயம் அடைந்து வெளியே தப்பி வந்தவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வில்லை.

* ராணுவ நீதிமன்றங்கள் ராணுவத்தினர் அத்துமீறல் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உதவி மாலை மலர்

வாழ்க்கையின் முரண்பாடுகளைத் தெரிந்துகொள்வோம் !?


வாழ்க்கையின்  முரண்பாடுகள் பற்றி ஒரு கதை:

ஒரு சீன வியாபாரிக்கு இரண்டு  சொத்துக்கள் இருந்தன. ஒன்று, அவர் மகன், மற்றொன்று அவருடைய குதிரைகள்.

ஒரு நாள் அவனுடைய குதிரை காணாமல் போனது. செய்தி கேட்ட ஊர் காரர்கள் அவரருகில் வந்து ' என்னப்பா இப்படியொரு துரதிஷ்டம் நடந்துவிட்டது' என்றார்கள். அவர் திருப்பிக் கேட்டார் , 'எதனால் இதை துரதிஷ்டம் என்கிறீர்கள்?'

அடுத்த சில நாள்களில் காணாமல் போன குதிரை கூடவே பத்து குதிரைகளை கூட்டிவந்தது. உடனே ஊர்காரர்கள் , ' அதிஷ்டகார பயலப்பா நீ' என்று அவரை மெச்சினார்கள். அப்போதும் வியாபாரி கேட்டார் , 'நான் ஏன் அதிஷ்டக்காரன்?'

அடுத்த  சில நாட்கள் கழித்து குதிரையில் சென்றுகொண்டிருந்த  போது அந்த வியாபாரியின் மகன் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான்.  வழக்கம்போல அந்த ஊர்க்காரர்கள், ' என்னப்பா இப்படியொரு துரடிஷ்டகாரனா இருக்கே' என்று சோக கீதம் பாடினார்கள். அந்த வியாபாரியும் சளைக்காமல் கேள்வி கேட்டார்.

ராணுவ வீரராக இருந்த வியாபாரியின் மகன் கால உடைந்ததால் அப்போது நடைப் பெற்ற போருக்கு அழைக்கவில்லை. இறுதியில் அந்தப் போரில் தோற்று பல வீரர்கள் உயிர் இழந்திருந்தனர். ' நிச்சயம் நீ அதிஷ்டகாரன்தாப்பா' என்றார்கள்  ஊர்காரர்கள். இப்போதும் வியாபாரி கேட்டார் , 'எதை வைத்து என்னை அதிஷ்டகாரர் என்கிறீர்கள்?'.

வியாபாரி வாழ்கையை புரிந்து வைத்து இருக்கிறார். வாழ்க்கை என்றால் எதாவது ஒரு தருணத்தில் தமக்கு மகிழ்ச்சியும், சோகமும் ஏற்படும் என்று . ஆகவே அவர் எல்லா நேரத்திலும் எதற்கும் தயாராக சமநிலையில் இருந்தார்.

4/19/2011

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தமிழன்! வைகோ நேரில் அஞ்சலி!



இன்றைய  மாலை செய்தி :

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார்.


கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன. 


தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. கடந்த 20 தினங்களுக்கு முன்னர் தனது கிராமத்துக்கு திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி. தன்னுடைய தாய் தந்தை உள்பட யாரிடமும் தனது உணர்ச்சிகளை காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்திருக்கிறார். 


இதற்கிடையில் 18.04.2011 அன்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி பத்த வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்று விட்டது. இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது. அதில்,

இலங்கை
ராமன் - ராவணன்,
ராமன் - ராஜபக்சே, 

அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சிநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார். 




அப்போது பேசிய வைகோ, தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த  கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர்தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்படவேண்டும். ஐநா சபையால் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். 
அதற்கு இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன் என்றார்.

மேலும் பேசிய வைகோ, இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியை நம்பி இருந்த ஏழை குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

உதவி நக்கீரன் , மாலைமலர் .

வகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்


அந்தச் சிறுவன் அப்போது தமிழ் மீடியதிலிருந்து ஆங்கில மீடியப் பள்ளியில் சேர்ந்தான். அவனுக்கு இப்பள்ளியின் புதிய சூழல் முற்றிலும் புதிதாய் இருந்தது.

ஆங்கில வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. சிறுவனின் பின்புலம் அறிந்த ஆசிரியர் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

' I ' என்றால் என்ன? ' YOU ' என்றால் என்ன?

சிறுவன் உடனே சொன்னான். 'I' என்றால் நீங்கள் . 'YOU' என்றால் நான்!.

வகுப்பறையில் இருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனை கோபமாக பார்த்தார். ஆங்கிலப் பள்ளியில் படித்துக்கொண்டு இது கூட தெரியாமல் இருப்பதா?

முட்டாள் 'I'  என்றால் நான் என்று அர்த்தம். 'YOU' என்றால் நீ என்று அர்த்தம். இது கூட தெரியாமல் இந்தப் பள்ளியில் படித்து என்ன செய்யப் போகிறாய். உன்னால் இந்தப் பள்ளிக்குத்தான் அவமானம் என்றார்.

சிறுவன் அழவில்லை. அவமானமாக உணரவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு ஆசிரியரைப் பார்த்துப் பேசினான்.

ஐயா ஒரு நிமிடம். நான் சொன்னது சரி என்று இப்போதும் கூறுகிறேன்.       'I' என்றால் நான் என்று தானே அர்த்தம். 'I' என்று உங்களைத்தானே காண்பித்துக் கொண்டீர்கள், அதனால் நீங்கள் என்று அதற்கு அர்த்தம் சொன்னேன். 'YOU' என்றால் நீ என்று தானே அர்த்தம். அதை நீங்கள் கேட்டதால் நான் என்று சொன்னேன்.

வகுப்பறை சில நிமிடம் மெளனமாக இருந்தது. பிறகு, ஆரவாரம் தான்.

ஆசிரியர் சொன்னார். உனக்கு தெரியும் நீ தவறாகவே சொல்லியிருக்கிறாய் என்று, ஆனால் நீ பின்வாங்க தயாராகவில்லை. நீ சொன்னதை சரியென்றும் கூறலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் இருப்பதை தெரிந்துக்கொண்டு சரியாகப் பயன்படுதினாய் அல்லவா? அதற்குத்தான் இந்தப் பாராட்டு. தோல்வி என்று உணராமல் அதற்காக தலை குனியாமல் தைரியமாகப் போராடினாய். அதற்குப் பாராட்டுக்கள் .

4/18/2011

யார் உனது சிறந்த நண்பன் ?


உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...


யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும்.
 
எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான்.


இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.


உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே. 


அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான். 
நன்றி  வெப்துனியா. 

இதுவரை யாரும் எழுதாத கவிதை!!!


காலையிலிருந்தே
மூளையில் அரித்தது
கவிதை எழுதி
ரொம்ப நாளாச்சே என்று...!

அவ்வப்போது
வந்துபோகும்
சிந்தனைச் சிதறல்களை
வாக்கியங்களாக
பதிவு செய்யவேண்டும்
என பேனாவும் தாளும்
எடுத்து   அமர்ந்தேன்...!

பழைய நண்பா்
மொபைலில் அழைத்தார்
பத்து நிமிடமாச்சு
அவருடன் பேசி முடிக்க...!

வந்த பின்
அந்தத் தாளைப் பார்த்தால்
இரண்டு வயது
நிரம்பாத என்மகள்
அந்தப் பக்கம் முழுக்க
கிறுக்கி வைத்திருந்தால்...!

பார்க்கும்போதே
பரவசமானேன்
இதுவரை யாரும் 
எழுதாத கவிதை!!!

4/17/2011

வடிவேலுவுக்கு முதல் அடி!


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. 

ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.

தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். 

வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.

பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே.  வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

நீங்கள் சிறந்த நண்பரா...? இங்கே சோதித்துக் கொள்வீர்!


தோழன்/தோழி... ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாதவன்/முடியாதவள். வாழ்க்கை முழுமையடைய இன்றிமையாததே தோழமை.
ஒவ்வொரு உறவுக்கும் உரிய வரையறை வகுத்து, ‘எப்படியேனும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும்’ என வழிகாட்டியுள்ளனர், நம்முடைய சான்றோர்கள்.
அந்த வகையில், நீங்கள் சிறந்த நண்பராக இருக்கிறீர்களா? நல்ல நண்பராக இருக்க வேண்டிய வரையறைகளை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்தது வருகிறீர்களா?

தன்னைத் தானே சோதித்து அறிந்துகொள்ள 
இதோ 10 கேள்விகள்... அவற்றுக்கு பதிலளித்த பின், உங்களது நட்பின் 
தரத்தை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.

முத‌லி‌ல் ஒரு கா‌‌கித‌ம் ம‌ற்று‌ம் பேனாவை எடு‌த்து‌க் கொ‌ண்டு உ‌ங்களது கே‌ள்‌வி எ‌ண்ணையு‌ம், ப‌திலு‌க்கான எழு‌த்தையு‌ம் வ‌ரிசையாக கு‌றி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌பி‌ன்ன‌ர் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
துவங்குவோமா..?


1)
உங்கள் வாழ்நாட்களுக்கு போதுமான அளவில் பணம், ஓர் அறையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வல்லமையும் அக்கறையும் கொண்ட நண்பர் மற்றொரு அறையில் இருக்கிறார். உங்களது தெரிவு என்ன?
அ) நண்பர்
ஆ) பணம்
இ) பூவா, தலையா போட்டு தேர்வு செய்வேன்.

2)
ஒருவரிடம் நட்பு கொண்ட பின், அது மென்மேலும் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது எப்போது?
அ) தருணம் வரும்போது மட்டுமே முயற்சி செய்வேன்.
ஆ) எப்போதும் முயற்சி செய்வேன்
இ) நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுவேன்.

3)
நண்பர் தன்னையறியாமல் தவறிழைத்தபோது...?
அ) கண்டுகொள்ளவே மாட்டேன்
ஆ) என்னைப் பற்றி தவறாக எண்ணிவிடுவார் என்பதால், தவறை எடுத்துரைக்க மாட்டேன்
இ) நண்பர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, தவறை உணர்த்துவேன்.

4)
நண்பரை தேர்வு செய்யும்போது, எதை கவனத்தில் கொள்வது?
அ) கருத்து ஒற்றுமை
ஆ) தேக ஒற்றுமையும், பழக்கவழக்கமும்
இ) ஏதுமில்லை.

5)
நண்பருக்காக எத்தகைய காரியங்களைச் செய்வது?
அ) நண்பரின் முகத்தில் புன்னகைப் பூக்கும்படியான செயல்கள்
ஆ) நண்பரின் மனம் மகிழும்படியான காரியங்கள்
இ) இந்தக் கேள்வி எனக்குப் பொருந்தாது.


6) நண்பருக்கு ஆபத்து நேரும்போது...
அ) எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுவேன் ஆ) நட்புக்கு தற்காலிக ஓய்வு தருவேன்
இ) நம்மால் ஆபத்தை நீக்க முடியுமா? என யோசிப்பேன்.

7)
நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...
அ) இன்பம் மட்டுமே
ஆ) இன்பமும் துன்பமும்
இ) களிப்பினை மட்டுமே.

8)
நண்பரிடம் ஏதேனும் திறமையைக் கண்டுணர்ந்தால்...
அ) உள்ளே பொறாமை இருக்கும், ஆயினும் புகழ்ந்து பேசுவேன்
ஆ) பொறாமையின்றி வாயாறப் புகழ்வேன்
இ) புகழ்வதோடு, அந்தத் திறமை மென்மேலும் வளர்வதற்கு உதவுவேன்; ஊக்கப்படுத்துவேன்.

9)
உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்கள் நண்பர் செய்யும்போதோ அல்லது விரும்பாத பொருளை தரும்போதோ...
அ) தயங்காமல் ஏற்றுக்கொள்வேன்
ஆ) எனக்கு விருப்பமில்லை என்று நிதானமாக புரியவைப்பேன்
இ) உரிமையோடு பகிரங்கமாக மறுத்துவிடுவேன்.

10)
உங்கள் நீண்டகால நண்பரே உங்களுக்கு தீமையிழத்தால்..?
அ) நட்பை முறித்துக் கொள்வேன்
ஆ) அன்பு மாறாமல் நட்பைத் தொடர்வேன்
இ) பழிவாங்குவேன்.

உங்களது 10 விடைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா? இதோ முடிவுகள்...
நீங்கள் தேர்வு செய்தவை 1-அ, 2-ஆ, 3-இ, 4-அ, 5-ஆ, 6-அ, 7-ஆ, 8-இ, 9-அ, 10-ஆ எனில்...
உங்கள் பெயரை அகராதியில் தேடுங்கள். அங்கே உங்களது பெயரின் அர்த்தம் ‘நட்பு’ என்றிருக்கும். ஆம், நீங்கள் சிறந்த நண்பர் மட்டுமல்லர்; நட்பின் இலக்கணமும் கூட!

நீங்கள் தேர்வு செய்தவை 1-ஆ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-அ, 6-இ, 7-அ, 8-ஆ, 9-ஆ, 10-அ எனில்...
உங்களால் சிறந்த நண்பராக முடியும். ஆனால், சூழ்நிலையில் கைதியாகிவிடுகிறீர்கள். உங்களது நட்பால், எவருக்கும் பாதகம் இல்லை. எனினும் முயன்றால், நீங்கள் எளிதில் சிறந்த சிநேகிதராகலாம்.
நீங்கள் தேர்வு செய்தவை 1-இ, 2-இ, 3-அ, 4-ஆ, 5-இ, 6-ஆ, 7-இ, 8-அ, 9-இ, 10-இ எனில்...
மன்னிக்கவும். உங்களுக்கு நண்பராகும் தகுதி, அறவே இல்லை. தயவு செய்து உங்கள் எண்ணப் போக்கை மாற்றிக்கொண்டு, நண்பர்கள் பலரைப் பெற, ‘நட்பு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

 
நன்றி : திருவள்ளுவருக்கு! 

ஆம், தெய்வப் புலவரின் 79, 80, 81-வது அதிகாரங்கள் முறையே ‘நட்பு’, ‘நட்பாராய்தல்’ மற்றும் ‘பழைமை’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்கண்ட கேள்விகளும் பதில்களும் தயாரிக்கப்பட்டன. 
நன்றி வெப்வுலகம்

4/16/2011

மக்கள் நாங்க மாறிட்டோம்?! அரசியல்வாதிகளே நீங்க????


தற்போது  நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம் இரண்டு மட்டுமே.ஒன்று   ஊடகம், மற்றொன்று  தேர்தல் ஆணையம். 

இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும், இவர்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது. தேர்தல் குறித்த செய்திகளும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் தங்கள் எதிர்ப்பை அல்லது ஆதரவைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு ஆளானார்கள். 

இந்த இளைஞர் கூட்டத்தில் வழக்கமாக வாக்களிக்க வருவோர் மட்டுமன்றி, பெருவாரியாக வாக்களிக்க வந்த காரணத்தால்தான் வழக்கமான 65 விழுக்காடு வாக்குப்பதிவு இந்த முறை 77.8 விழுக்காடு என உயர்ந்தது. அதற்காக இவர்கள் எதிர்க்கட்சியைத் தேர்வு செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2011-ன் கதாநாயகனாகவும் இருப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே.இந்தமுறை தேர்தல் காலத்தில், ஊடகம் பார்த்தோரும், பத்திரிகை படித்தோரும் பேசிக்கொண்டவை அனைத்தும்- அது வீட்டுச் சமையல்கூடமாக இருந்தாலும் டீக்கடையாக இருந்தாலும்- தேர்தல் கமிஷனின் நியாயமான, நேர்மையான நடவடிக்கைகள் பற்றித்தான்.

மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாகவே ஆற்றியிருக்கிறார்கள். இதே கடமை உணர்வு அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் பொறுப்புணர்வுடன் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனையும், தேச நலனையும், வருங்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றினால், இங்கே ஒரு நல்லரசு அமையும் என்பது நிச்சயம்.

அட்ராசக்க சி.பி கரஸ்பான்டன்ஸ்ல கார் ஓட்ட கத்துக்கிறாராம் !!!



"சார்! நீங்க பேசுவது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.''

"அப்படியா... நன்றி!''

"முதல்ல சிரிக்கிறோம். அப்புறம் ஏன் சிரிச்சோம்னும் சிந்திக்கிறோம்.'' 

**********************************************************************************************

அமைச்சர் : மன்னா! தேர்வுக்குச் செல்லும் இளவரசர்களுக்கு விடை கொடுத்து அனுப்புங்கள்.''

மன்னர் : அமைச்சரே! தேர்வில் என்ன கேள்வி கேட்பார்கள் என்று தெரியாத நிலையில் நான் எந்த விடையைக் கொடுத்தனுப்ப முடியும்?''

***********************************************************************************************

போலீஸ்: என்ன கார் தாறுமாறா ரோடுல இங்கயும் அங்கயுமா ஓடுது...

சி.பி : இப்பத்தான் சார் கத்துக்கறேன்...

போலீஸ் : சொல்லி கொடுக்க பக்கத்துல ஆள் இல்லாமலேயா?

சி.பி: இல்ல சார் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்கறேன்... 

***********************************************************************************************

பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

***********************************************************************************

ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?

மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.

 **********************************************************************************************