'முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 136- லிருந்து, 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்' என, 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால், அணைக்கு மட்டுமல்ல, கேரளாவின் பல இடங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும்' என, கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன், கேரளா வில் பெய்த கனமழையால், ஒன்பது மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. கேரளாவில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரை, முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி வரை, தமிழக அரசு தேக்கி வைத்தது. ஆனால், 'அணையின் நீர்மட்டத்தை, 136 அடியாக குறைக்க வேண்டும்' என, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.அதை, ஏற்க மறுத்ததுடன், '142 அடியில் இருந்து நீர் மட்டத்தை குறைக்க வாய்ப்பே இல்லை' என, தமிழக அரசு தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முல்லைப்பெரியாறு அணையில், 142 அடி தேக்கி வைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழு அறிக்கையின்படி, 'அணையின் நீர்மட்டத்தில், 3 அடியை குறைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.'ஒரு அடி கூட குறைக்க முடியாது' எனக் கூறிய, தமிழக அரசு, 142 அடி நிரம்பிய அணையில் இருந்து, தண்ணீரை திறந்து விடுகிறது.
இது, எந்த விதத்தில் நியாயம்... தமிழக உரிமையை விட்டு கொடுக்கலாமா என்ற கேள்வி, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.நீண்ட காலமாக வறட்சியாக மாறியிருந்த, கம்பம் பள்ளத்தாக்கில், தற்போது விவசாய பணிகள் துவங்கியுள்ளன. தமிழக விவசாய பயன்பாட்டிற்கு, அதிகளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.எனவே, எக்காரணம் கொண்டும்,
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கூடாது!
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"