Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/23/2018

இந்தியா இன்று இப்படித்தான் இருக்கிறது...


ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

கிராம அதிகாரியும் செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார். மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.

ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் வைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராம மக்கள் கோரிக்கையான கிணறு நியாபகம் வந்தது.

உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு இரண்டு லெட்சம் ரூபாய் ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து. அந்த இரண்டு லட்சம் ரூபாயை அவர் சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.

கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.

முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட்டாமலேயே தான் இரண்டு லட்சம் எடுத்துக் கொண்டதை சொல்லி, தான் செய்த தவறு வெளிவராமல் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டினார்.

அப்பொழுது புதியவர் அவரை ஆறுதல் படுத்தி, நான் கவனித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தைரியமாகப் போங்கள் என அவரை வழியனுப்பி வைத்தார்.
ஓரிரு வருடங்கள் சென்ற பின் இந்த இரு அதிகாரிகளும் ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது பழைய அதிகாரி, புதியவரிடம் கேட்டார், சார் நமது கிணறு சமாசாரம் என்னவாயிற்று?

பிரச்சனை ஒன்றும் இல்லையே என்றார். அதற்கு புதியவர் சொன்னார்.
அந்த பிரச்சனை முடிந்து விட்டது, அதை சுமூகமாக முடித்துவிட்டேன் என்றார்.

முதலாமவருக்கு விளங்கவில்லை, ஆர்வம் தாங்காமல்,

எப்படி சார் என்றார் ?

அதற்கு இரண்டாமவர் சொன்னார், நீங்கள் வெட்டிய கிணற்று தண்ணீர் விஷத்தன்மை கொண்டது என்று Lab அறிக்கை வைத்து. அதை மூடுவதற்கு 3 லட்சம் செலவு என்று சொல்லி, நான் 3 லட்சம் எடுத்தேன் என்றார்.

இது தான் நம் நாட்டின் அரசியல் நிலை. வருபவர்கள் யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கி நிற்க நமது அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிவிடுவர்.

பிறகு நாடு எப்படி முன்னேறும்?

1 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"