Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/27/2018

குழந்தைகளா அல்லது பொதி சுமக்கும் கழுதைகளா? சிந்திப்பீர்


இன்றைய சிறு வயது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஒரு பாடம் சம்பந்தமாக, ஐந்து புத்தகங்கள் வீதம், ஐந்து பாடங்களுக்கு, 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நோட்டுகள், டிபன் பாக்சை முதுகில் சுமந்து செல்கிறார்கள்.

இதில், யோகா, அபாகஸ் என, வேறு சில பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள்.  தினமும், மன அழுத்தத்துடன், வீடு திரும்புகிறார்கள்.

"இரண்டாம் வகுப்பு வரை, வீட்டு பாடங்களை கொடுக்கக் கூடாது" என, தமிழக அரசு அறிக்கை விட்டுள்ளது; அதை மீறி, சில பள்ளிகளில் வீட்டு பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதை விட மிகவும் கொடுமையான, 'புராஜெக்ட்' என சொல்லப்படும், செயல் திட்டம் தான். வயதுக்கு மீறியதாக தெரிகிறது. குழந்தைகளுக்கு பதிலாக, அந்த வேலையை பெற்றோர் செய்ய வேண்டியுள்ளது.

அந்தப் பிள்ளைகள் , அவர்களின்  அம்மாவிடம், 'அம்மா... உனக்குத் தான், ஹோம் ஒர்க்' என, தருகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோராக இருப்பின், இரவு வெகுநேரம் கண் விழித்து, அந்த வேலையை செய்ய வேண்டியுள்ளது. இது பற்றியெல்லாம், பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் யாரும் விவாதிப்பது இல்லை.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ரீதியில், புகார் செய்வதில்லையா அல்லது தெரிந்தும் நடவடிக்கை இல்லையா என்பதும் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மேல் தவறுகள் இருப்பின், தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்தால் தான் திருத்தம் வரும்.

பள்ளி எப்படி நடத்தப்படுகிறது; ஆசிரியர்களின் திறன் எப்படி; மாணவர்கள் நலன் காக்கப்படுகிறதா என்பதை, நிர்வாகம் கவனித்தால் தான், பள்ளியின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படும்.

மாணவர்களின் எதிர்காலத்தையும், மன அழுத்தத்தையும் மனதில் நினைத்துப் பார்ப்பதுடன், ஆசிரியர்களும், பெற்றோரே என்பதை எண்ணிப் பாருங்களேன்!

1 comments:

  1. பூனைக்கு யார் மணி கட்றது என்ற கதைதான்...

    அப்புறம் அந்த பேன்ஸி டிரஸ் காம்பிடிஷனை விட்டுடிங்களே

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"