வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீஹரன் திடீரென மயங்கி விழுந்தான். மகன் மயக்கமுற்ற அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன தாய் உடனே அவன் தந்தைக்கு தகவல் சொல்ல, இருவரும் சேர்ந்து ஸ்ரீஹரனை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இரத்தப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், சேலத்தில் இருந்து கோவையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு ஸ்ரீஹரனைக் கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளனர். மகனுக்கு என்னவோ ஏதோ என்கிற பதட்டத்தோடு கோவை மருத்துவமனைக்குச் செல்ல, ஸ்ரீஹரனுக்கு வந்திருக்கும் வியாதி பற்றி மருத்துவர்கள் பெற்றோருக்கு கூறும்போது, அவர்களுக்கு முதலில் விளங்கவில்லை, ஒன்று மட்டும் புரிந்தது, மகன் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளான்!

ஏப்ளாஸ்டிக் அனீமியா
சில வியாதிகள் ஏன் ஏற்படுகின்றன என்கிற மூலகாரணம் விளங்குவதில்லை. கோடியில் சில பேர், இதனால் பாதிக்கப்படுகின்றனர். அப்படித்தான், ஸ்ரீஹரனுக்கு வந்துள்ள நோயும் - 'ஏப்ளாஸ்டிக் அனீமியா' எனப்படும் அரியவகை இரத்தசோகை. இந்தவகை அனீமியாவால் பாதிக்கப் படுபவர்களுக்கு இரத்த சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்ஸ், மூன்றுமே உடலில் உருவாவது குறைந்துகொண்டே வருகிறது. இதனால், மயக்கம், உடற்சோர்வு, நோயெதிர்ப்பு சக்தி குறைதல் ஏற்படும், சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் மரணம் கூட சம்பவிக்க வாய்ப்புண்டு.
ஸ்ரீஹரனின் தந்தை விவசாயக் கூலியாக வேலை பார்ப்பவர், தாய் பிரைமரி ஸ்கூல் ஒன்றில் டீச்சராக வேலைபார்த்து வருகிறார். இப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்ரீயின் மருத்துவ செலவுக்காக 10 லட்ச ருபாய் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. மகனைக் காப்பாற்ற, சென்னையில் தங்கி மருத்துவம் பார்ப்பதற்கு திண்டாடி வருகின்றனர் தம்பதியினர்.
அரியவகை நோய்க்கு போன் மேரோ மாற்று சிகிச்சை செய்யவேண்டும், இதற்கு சரியான நபரிடமிருந்து ஸ்ரீஹரன் உடல் ஏற்றுக்கொள்ளக்கூடிய போன் மேரோ தேவைப்படுகிறது. அதுவரை மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம், சிறுவனின் உடல்நிலையை ஸ்திரப்படுத்தி வைத்துள்ளனர் மருத்துவர்கள். தன் பிஞ்சு வயதையும் தாண்டி, வலிமிகுந்த சிகிச்சையை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீ-யைக் கண்டு டாக்டர்களும் ஆச்சரியம் கொள்கின்றனர்.

"உனக்கு புது இரத்தம் ஏத்துறதுக்கு வந்துருக்கோம்னு சொன்னா, இன்னும் எவ்வளவு இரத்தம் ஏத்துனா நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்?னு கேப்பான். சிலதடவை எழுந்து விளையாடுவான், ஆனா உடனே டயர்டு ஆகி படுத்துக்குவான். ஓடியாடி விளையாண்டுக்கிட்டு இருந்த பிள்ளை இப்படி படுத்த படுக்கையா இருப்பதைப் பார்க்க முடியலையே..." அம்மா கோமதியால் அதற்குமேல் பேசமுடியவில்லை...
ஸ்ரீஹரனுக்கு உதவ https://www.edudharma.com/campaigns/save-shriharan எனும் லிங்கிற்குச் சென்று உங்களால் முடிந்த உதவியைச் செய்யலாம். இந்தத் தகவலை முடிந்தவரை உங்களின் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்வதன் மூலம் விரைவில் தேவையான உதவி பெற்று ஸ்ரீஹரன் வீடு திரும்பமுடியும்.
"என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸையும், பக்கத்து வீட்டு ப்ரெண்ட்ஸையும் பாக்கணும் போல இருக்கு" - படுக்கையில் இருக்கும் ஸ்ரீயின் ஆசை இதுதான். ஸ்ரீயும் எல்லாக் குழந்தைகளையும் போல மகிழ்ச்சியாக விளையாடித்திரிய முடியுமா? மீண்டும் பள்ளிக்குப் போவானா? இதற்கான விடையை எழுதும் சக்தி நம் கையிலும் உள்ளது என்பதை உணர்வோம்...
மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் இந்த தளம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயமாக சரிபார்த்துக் கொள்ளவும்.
கட்டுரை மூலம் விகடன் வலைத்தளம்.

0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"