Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

4/09/2018

இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியின் மூலம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.

சிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"

கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"

மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

________________________________
*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*
*தேய்ச்சி விடேன்டி!"*

*மனைவி: "ஏன்,*
*நீங்களே தேய்க்க கூடாதா?"*

*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*
*சொல்லி அனுப்பினார்,அதான்"*
_______________________________

*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*

*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*

*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*
________________________________

கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்..

இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் ..
_______________________________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?

அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
____________________________
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??..

"ரொம்ப நீளம்னு எழுது..."

Source : Whatsapp

4/08/2018

மனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா

இன்றைக்கு உணவு மாற்றத்தால் வருகிற சர்க்கரை வியாதி, தைராய்டு சிக்கல், ரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படுகிற மன அழுத்தம், மூட்டு வலி… என்றெல்லாம் உடனே பட்டியலிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

அடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி

தோல்விகளைச் சந்திக்காத இயக்குனர் என்ற பெயரை தக்கவைத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘பாகுபலி’ படத்தின் மூலமாக பிரமாண்ட இயக்குனர்களின் பட்டியலில் உலக அளவில் இடம்பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தோடு சேர்த்து இதுவரை 11 படங்களை இயக்கியிருக்கும் எஸ்.எஸ். ராஜமவுலியின் அனைத்தும் படங்களுமே வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது படங்கள் அனைத்திலும் படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேஸ்வரராவ், இசையமைப்பு எம்.எம்.கீரவாணி. இது தவிர ராஜமவுலி இயக்கிய 11 படங்களில் 9 படங்களுக்கு அவரது தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

எஸ்.எஸ்.ராஜமவுலி ஆரம்ப காலகட்டத்தில்,  இயக்குனர் கே.ராகவேந்திரராவ் வழிகாட்டுதலின் பேரில் தொலைக்காட்சி தொடர்களை இயக்கிக்கொண்டிருந்தார். பின்னர் கே.ராகவேந்திரராவ் தயாரிப்பில் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ என்ற படத்தை இயக்கினார். ஜூனியர் என்.டி.ஆர். அறிமுகமான ‘நின்னு சூடாலனி’ திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், அவரை வைத்து ராஜ மவுலி இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்கவும் அந்த வெற்றி உதவியது.

2001-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ‘ஸ்டூடண்ட் நம்பர்-1’ என்ற பெயரிலேயே தமிழிலும் வெளியான இந்தப் படத்தில் சிபிராஜ் நடித்திருந்தார்.

இதையடுத்து 2003-ம் ஆண்டு மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ‘சிம்ஹாத்ரி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் ‘கஜேந்திரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அடுத்ததாக நிதின், ஜெனிலியா நடிப்பில் 2004-ம் ஆண்டு ‘சை’ என்ற படம் வெளியானது. இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் ‘பாகுபலி’ ஹீரோவான பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் 2005-ம் ஆண்டு ‘சத்ரபதி’ என்ற படத்தை இயக்கினார். வெற்றிப்படமான இந்தப் படம், ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் பிரபலமானதைத் தொடர்ந்து, தமிழில் ‘சந்திரமவுலி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.

ரவிதேஜா, அனுஷ்கா நடிப்பில் ராஜமவுலி இயக்கி, 2006-ம் ஆண்டு வெளியான ‘விக்ரமார்க்குடு’ படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, அந்தப் படமும் தமிழில் கார்த்தி, தமன்னா நடிப்பில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் ரீமேக்கானது. இந்தப் படத்தை அடுத்து ராஜ மவுலியுடன் மூன்றாவது முறையாக ஜூனியர் என்.டி.ஆர். இணைந்தார். இந்தக் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியான ‘எமதொங்கா’ திரைப்படம், ராஜமவுலி பிரமாண்ட இயக்குனர் என்பதற்கான அஸ்திரவாரத்தை அமைத்துக் கொடுத்தப் படம் என்றால் அது மிகையல்ல. இந்தப் படத்தில் எமலோகத்தில் நடை பெறுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிரஞ்சீவி மகன் ராம் சரணுடன் இணைந்தார் ராஜமவுலி. தனது முதல் படத்தில் வெற்றிபட இயக்குனரான பூரிஜெகந்நாத்துடன் இணைந்து ‘சிறுத்தா’ படத்தைக் கொடுத்த ராம்சரணுக்கு, அந்தப் படம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எனவே தொடர் வெற்றியைக் கொடுத்து வரும் ராஜமவுலியிடம், தன் மகனை சேர்த்து விட்டார் சிரஞ்சீவி. தெலுங்கில் ‘மகதீரா’ என்ற பெயரிலும், தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரிலும் வெளியான இந்தப் படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாத்துறையினர் அனைவரையும் ராஜமவுலியை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது.

இதனால் அவரது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அனைவரும் அடுத்து என்ன பிரமாண்டப் படத்தை இயக்கப்போகிறார்? என்று கூர்ந்து கவனித்த வேளையில், சாதாரணமாக ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கினார். அதுவரை தெலுங்கில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சுனிலை கதாநாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி. அதற்கு இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டதே சான்று ஆகும். சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம், மரியாதை ராமண்ணாவின் ரீமேக்தான்.

அடுத்ததாக ராஜமவுலி, ஈயை வைத்து கிராபிக்ஸ் மூலம் பிரமாண்டமாக இயக்கியிருந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. சுதீப், நானி, சமந்தா நடிப்பில் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் வெளியான அந்தத் திரைப்படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக வெளியான ‘பாகுபலி’ படத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதன் வெற்றி உலகம் அறிந்த ஒன்றாகிப்போய்விட்டது. உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடிவரை அந்தப் படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் ராஜமவுலி. ‘பாகுபலி’ திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகிய இரண்டு நாயகர்கள் நடித்ததைப் போலவே, அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோரை இயக்குகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தின் கதைக்களம் குத்துச்சண்டையை அடிப்படையாகக் கொண்டது என்று அரசல்புரசலாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

எது எப்படியோ.. இதுவரை தான் இயக்கிய 11 படங்களையும் வெற்றிப்படமாக்கிக் காட்டிய ராஜமவுலி, தன்னுடைய அடுத்த வெற்றிக்கு தயாராகிவிட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...


தினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்படி உண்பது என்றும் பலருக்கு தெரிவதில்லை. சரி தினமும் உண்பதால் அப்படி என்ன நன்மை கிழே பார்க்கலாம்.

ஒரு முட்டையில் 212 mg கொழுப்பு உள்ளது ஆனால் இது உடலின் ரத்தத்தில் கலபதில்லை எனவே இது உடலுக்கு நன்மையே.

தினமும் 1 முட்டை சாப்டிடுவதால் கண் பார்வை அதிகரிக்கிறது மேலும் அது கண்பார்வையை மேம்பட செய்கிறது.
இதில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் சத்துக்கள் இருப்பதால் உடலின் கட்டுமானத்துக்கு மிகவும் பயன்படுகிறது.

தினமும் முட்டையை அவித்து உண்பதால் உடலுக்கு நல்ல சத்து மற்றும் சக்தி கிடைக்கிறது.

Article source : Google

How To use Amma wifi?

ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும் ‘அம்மா வை-பை’ வசதியை எப்படிபயன்படுத்துவது என்று விரிவாக பார்க்கலாம்.
#AmmaWiFi மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

4/07/2018

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்....


இளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கடைசி நாள்


சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சொந்த செலவில் புதிய சீருடை வாங்கிக்கொள்ள வேண்டும்

தமிழக அரசு பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய சீருடைகளை, அவர்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.