‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள்.
மகாபாரதத்தில் கர்ணனுக்கு பரசுராமர் ஒரு சாபம் கொடுப்பார்.
அதாவது அவன் கற்ற வித்தைகள், மந்திரங்கள் எல்லாம் அவனுக்குத் தேவையான நேரத்தில் மறந்து போய்விடும் என்பதே அது.
அதுபோல் மற்ற நேரங்களில் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் விஷயங்கள்' தேர்வு எழுதும்போது மட்டும் சரியாக மறந்து விடுகிறதே, அது ஏன்?
மறதி எதனால் வருகிறது என்பதற்கு முதலில் நாம் விஷயங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். நினைவில் வைப்பது என்பது மூன்று படிகளில் நடக்கிறது. ஆங்கிலத்தில் இதை RRR என்பர்.
முதலாவது, ஒரு விஷயம் நம் மூளையில் பதிவது (Registration).
இரண்டாவது, பதிந்தது நம் மூளையில் நிலைத்திருப்பது (Retention).
மூன்றாவது தேவையானபோது அதை நினைவின் அடுக்குகளிலிருந்து திரும்பி எடுப்பது (Recall).
நல்ல நினைவுத் திறனுக்கு விஷயங்கள் நன்கு பதிவது முதல் தேவை. பதற்றமாகவும் அவசரமாகவும் படிக்கும்போது அது பதியாது. சுற்றுப்புறத்தின் தன்மை, கவனச் சிதறல், மாணவனின் மனநிலை, படிக்கும் விஷயத்தின் மீதுள்ள ஆர்வம் போன்றவை நம் மனதில் பதிவதைத் தீர்மானிக்கின்றன.
பதிந்த விஷயங்கள் எல்லாமே நம் மனதில் நிலைத்து நிற்பதில்லை. பாடங்களைப் பொறுத்தவரை ஒருமுறை படித்ததில் ஒரு மாதம் கழித்து கிட்டத்தட்ட 80 % வரை மறந்து போய்விடுவதாகக் கண்டறிந்துள்ளனர். எனவே மீண்டும் மீண்டும் படிப்பதே நம்முடைய நினைவில் நீங்காமல் நிற்பதற்கான ஒரே வழி.
அடிக்கடி படிக்கும் விஷயங்கள் சுலபமாக நினைவில் நிற்கின்றன. நீங்காமல் இருக்கும் விஷயங்களை மீண்டும் மீட்டெடுப்பது பிரச்சினை இல்லை.
மீண்டும் மீண்டும் படித்ததும்கூட தேர்வின்போது மறந்துவிடுகிறதே என்கிறீர்களா? அதற்கு மிக முக்கியக் காரணம், அவசரம், பதற்றம், பயம் போன்றவைதான். அவசரத்தில் அண்டாவில்கூட கையை நுழைக்க முடியாது. அமைதியான சூழலில் அவசரப்படாமல், பதற்றம் இல்லாமல் விஷயத்தை முழுமையாக உள்வாங்கிப் படியுங்கள்.
கசக்கிறதே... வலிக்கிறதே என்று படிக்காமல் இனிமையாகப் படியுங்கள். நினைவுப் பாத்திரத்தைப் பதற்றப்படாமல் கையாண்டால் அது அட்சயப் பாத்திரமாய் கைகொடுக்கும்.
//நினைவுப் பாத்திரத்தைப் பதற்றப்படாமல் கையாண்டால் அது அட்சயப் பாத்திரமாய் கைகொடுக்கும்.//
ReplyDeleteசரியாச் சொன்னீங்க ஆசிரியரே!
எதையும் விரும்பிச்செய்தால் அது ஞாபகத்தளத்தில் இருக்கும்போல.. நல்லதொரு கட்டுரை.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteவணக்கம்.
தாங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது, என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப்பற்றியும் பாராட்டி சிறப்பித்து அறிமுகம் செய்து எழுதியிருந்தீர்கள்.
என்னைப்பற்றிய இவ்வாறான வலைச்சர அறிமுகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டதனால், இப்போது என் வலைத்தளத்தினில் அவற்றைபற்றிக் குறிப்பிட்டும், என்னை அறிமுகம் செய்துள்ள வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறியும் ஒருசில தொடர்பதிவுகளாக இப்போது வெளியிட்டு வருகிறேன்.
இன்றைய பதிவினில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/2-of-16-2-6.html
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in
//அது அட்சயப் பாத்திரமாய் கைகொடுக்கும்.//
:))))) அருமை