Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/12/2014

லிங்கா என் பார்வையில்...




திரையில் சென்சார் போர்டு சர்டிஃபிகெட் வந்தபோது காதுகளை ஜவ்விடவைத்த விசில் சத்தம், 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற எழுத்துகள் தோன்றி மறைவது வரை நீடித்தது... அதான் ரஜினி!
இந்தியா சுந்திரம் அடைவதற்கு முன்பு சோலையூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வறட்சியைப் போக்குவதற்காக, தனது சொந்த முயற்சியாலும், சொத்துகளாலும் மக்களை வைத்தே ஓர் அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன். அந்த அணையைக் கட்டுவதற்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள்....
அதே அணைக்கு தற்போது வரும் ஆபத்தும், அதைக் களைவதற்கு களமிறங்க வேண்டிய நிலைக்கு ஆளாகும் பேரன் லிங்கேஸ்வரனின் முயற்சியும்தான் எஞ்சிய திரைக்கதை.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது. 1939-ல் நடக்கும் அணை கட்டும் காட்சிகளில் நூற்றுக் கணக்கானோரிடம் வேலை வாங்கியிருக்கிறார். பீரியட் ஃபீலுக்கு துணை செய்திருக்கிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு.
பொதுவாக,
ரஜினிக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமும், அதில் தனது ஸ்டைலான சதுரங்க வேட்டையால் ரசிகர்களை வசீகரிப்பதும்தான் ரஜினி படங்களில் டெம்ப் கூட்டும் அம்சம். அது, லிங்காவில் மிஸ்ஸாகி இருக்கிறது.
தியேட்டரைவிட்டு நகரும்போது, ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்...
'படம் எப்படிங்க?' என்றேன்.  ‘ம்... நல்லா இருக்கே’ என்று பூரிப்பை வரவழைத்துச் சொன்னார் அந்த ரஜினி ரசிகர்.
அதான் ரஜினி!

ரஜினிடா... தலைவர்டா ....

6 comments:

  1. படம் நல்லா இருக்கிறது என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது.

    ReplyDelete
  2. வெற்றி தான்... பார்ப்போம்...!

    ReplyDelete
  3. பார்க்கனும்...
    புரியற மாதிரி சொன்னா வரும் எல்லா படமும் இயக்குனரின் பார்வையில் சிறப்பானதே பார்ப்பவர்கள் கண்ணோட்டத்திற்க்கு ஏற்ப மாறுபட்டு தெரிகிறது கதையில் ஆழ்ந்து கதா பாத்திரமாக தானே அமர்ந்து எந்த ஒரு படத்தையும் பாருங்க சிறப்பான படமாகவே தோண்றும் ...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"