Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/16/2014

புதிய கல்விமுறையை வரவேற்போம்...



நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அறிமுகப்படுத்த, மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது, வரவேற்கத்தக்கது தான்!
கடந்த, 1968ல், கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரையான, 10+2+3 பாடத் திட்ட முறை, இனிமேல், 8+4+3 என்று, பரிமாணம் பெறுகிறது.
முதல், எட்டு ஆண்டுகள் அடிப்படைக் கல்வி. அடுத்த, நான்கு ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு; இதில், மூன்று ஆண்டுகளின் முடிவில், பட்டம் வழங்கப்படும். நான்காம் ஆண்டு, 'ஹானர்ஸ் டிகிரி' சான்றிதழ் வழங்கப்படும் எனில், அடுத்த, மூன்று ஆண்டு மேல்படிப்பை, என்னவென்று அழைப்பது?
இப்புதிய கல்வித் திட்டத்தில், மூன்று சிறப்பம்சங்கள் உள்ளன.
நுழைவுத்‬ தேர்வு முறை இல்லை; 

மதிப்பெண்‬ மட்டுமல்ல, பிற திறன்களும், பொருளாதார பின்னணியும் பார்க்கப்படும்; 


செய்முறையை‬ கட்டாயம் அமல்படுத்துதல். 


இவை மூன்றும் வரவேற்கத்தக்கவை.

பாடத்திட்டத்தில், எத்தனை மொழிகள், தாய் மொழியின் பங்கு என்ன என்பதையும், தெளிவுபடுத்த வேண்டும்.
நாடு முழுவதும், ஒரே வகையான கல்வி என்றால், மொழியியல் பாடத்தில், நிச்சயமாக குழப்பம் வரும்.
வட, தென் மாநிலத்தவர்கள், ஏற்கும்படியான மொழிப்பிரிவு அமைத்தல் என்பது, குதிரைக் கொம்பு தான்.
புதிய கல்வி முறை, நவீன தொழில் நுட்ப யுக்திகளுடன் கூடிய பாரம்பரிய கல்வி முறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வரைவுத் திட்டம் முழுவதுமாக வெளியே வந்தால் தான் தெரியும்!

2 comments:

  1. வரைவுத் திட்டம் வரட்டும்...
    நல்ல கல்வி முறை என்றால் நாமும் வரவேற்போம்...

    ReplyDelete
  2. வரட்டும்... வியாபாரம் எப்படி என்று பார்ப்போம்....!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"