Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/06/2014

சோனி என்கிற மாணவியும், அவளது வகுப்புத் தோழிகளும்..



சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, மத்தியப்பிரதேசத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 700 பள்ளிகளில் 'ஏகலைவா’ என்ற அமைப்பு, 'ஹோஷங்பகாத் அறிவியல் கற்பிக்கும் திட்டம்’ ஒன்றை நடைமுறைப்படுத்தியது.
அறிவியலை, நடைமுறை அறிவுடன் கற்பிக்கும் திட்டம் அது. இந்த நிலையில், அங்குள்ள பழங்குடி கிராமம் ஒன்றில் திடீரென ஒரு பீதி பரவியது.
செடிகளின் பச்சை இலைகளில் பாம்பு படம் எடுப்பது போன்ற வடிவம் தென்படத் தொடங்கியது. மக்கள் அதை நாகதேவதையின் சாபம்.
ஆண் பாம்பின் மீது லாரி ஒன்று ஏறி, அது செத்துவிட்டது. அதன் துணையான பெண் பாம்பு விட்ட சாபம்தான் இது’ என பீதி அடைந்தனர். இதனால், விளைந்த காய்கறிகளைச் சாப்பிட அஞ்சி, குப்பையில் கொட்டினார்கள்.
இந்த நிலையில் சோனி என்கிற மாணவியும், அவளது வகுப்புத் தோழிகளும் இது தாங்கள் படிக்கும் அறிவியலுக்கு எதிராக இருப்பதாகக் கருதினார்கள். அந்த இலைகளை ஊசிகளைக் கொண்டு குத்திப் பார்த்தபோது அனைத்து இலைகளிலும் சிறிய புழு இருப்பது தெரிந்தது. அந்தப் புழு, இலையின் பச்சை நிறத்துக்குக் காரணமான குளோரோஃபிலைத் தின்றது. இதனால் இலை வெளிறி, வளர்ச்சி அடையும்போது அந்தப் பகுதி பாம்பு படம் எடுப்பதுபோல காட்சி அளித்தது. மாணவிகளின் இந்தக் கண்டுபிடிப்பு, அந்தப் பகுதியில் நிலவிய அச்சத்தையும் பீதியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.
இதே சமயத்தில் சோனியின் தோழி, மற்றொரு பரிசோதனையைச் செய்தாள். பாம்பு உருவம் உள்ள இலைகளைப் பறித்துவந்து யாருக்கும் தெரியாமல் தன் வீட்டு உணவில் கலந்துவிட்டாள். அதைச் சாப்பிட்டதால் எந்தத் தீங்கும் வரவில்லை என்பதை நிரூபித்துக்காட்டினாள்.
'இப்படி செஞ்சா யாராவது அடிப்பாங்கனு நினைக்கலையா?’ என அந்த மாணவியிடம் கேட்டபோது அவள் சொன்னாள், 'மூடநம்பிக்கையை ஒழிக்க கொஞ்சம் அடி வாங்கினால்தான் என்ன?’ 

இது பழங்குடி குழந்தையின் துணிவு மட்டும் அல்ல; கல்வியறிவு தந்த துணிவும்கூட.

இப்படி நடைமுறை வாழ்க்கைக்குத் துணை நிற்பதுதான் கல்வியின் பயனாக இருக்க வேண்டும். தேர்வு எழுதி முடிந்ததுமே தேவையற்றதாகிவிடுவதற்குப் பெயர் அறிவு அல்ல; கழிவு.
ஹாட்சாப் சோனி...

8 comments:

  1. கல்வி தருகிற அறிவுத்துணிவு/கூடவே ஏகலைவா தந்த அறிவியல் நடைமுறைத்துணிவும் கூட/வாழ்த்துக்ஜ்கள் ஏகலைவாவிற்கும் குழைந்தைளுக்குமாய்/

    ReplyDelete
  2. அப்படியான கல்வி இப்போது எங்கே போனது.... கல்வியாளரிடையே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கை பயமுறுத்துகிறது...

    ReplyDelete
  3. இப்படிப்பட்ட கல்விமுறை எல்லா ஊர்களிலும் கற்பிக்கப்படும் நாள் எந்நாளோ?
    அந்நாளே நம் நாட்டிற்கு விடிவு.

    ReplyDelete
  4. கல்வியறிவு மூட நம்பிக்கைகளை இன்னும் வலிமையாக்க ஆதாரம் தேடுகிறது என்றே உணர்கிறேன் ..இது அந்த குழந்தையின் சுய பகுத்தறிவு ஆகும்.பாராட்டுக்கள் .

    ReplyDelete
  5. இப்படிபட்ட குழந்தைகள் தான் இன்றைய சமூகத்திற்கு தேவை.வாழ்த்துகள்மா

    ReplyDelete
  6. Brilliant.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"