Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/20/2014

ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.

வசரமாக இந்தக் குரூப் ரத்தம் தேவை என்கிற குறுஞ்செய்தியோ அல்லது மெயிலோ வந்தால் அதை ஈஸியாகப் பார்வேர்டு செய்துவிட்டு போகிறவர்கள்தான் இன்று அதிகம். ஆனால், அவசரத் தேவைக்கு ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் குறைவுதான்.



இந்த நிலையை மாற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷெரீப் என்கிற இளைஞரின் முயற்சியால் தொடங்கப்பட்ட, friends2support.org என்ற இணையதளம், அகில இந்திய அளவில் ரத்த தேடலுக்கான ஒரே இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ரத்தம் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ‘Each One- Reach One’ என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் friends2support.org என்ற இணையதளத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்.

“இந்த இணையதளத்தைத் தொடங்கிய ஷெரீஃப், ஐதராபாத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்துல குறிப்பிட்ட ரத்த குரூப் கிடைக்காமல், வரிசையா உயிர்கள் பலியான கோர சம்பவம் அவரை, ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிருக்கு. ரத்தம் கிடைக்காம இறக்குறவங்க இனியும் அதிகரிக்கக் கூடாதுங்கிறதுக்காக, இந்த இணையதளத்தை ஆரம்பிச்சார்.
ஆரம்பிக்கும் போது வெறும் 200 பேர் தான் இருந்தாங்க. அதுவும் அவங்க எல்லாரும் ஷெரீஃபோட ப்ரெண்ட்ஸ்தான். எதுவும் தொடங்கும்போது உடனே வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியாது. அதனால தொடர்ந்து செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக ரத்த சேவை குறித்து தெரிய வந்ததும் நிறைய நண்பர்கள் ரத்தக் கொடையாளர்களாக இணைஞ்சாங்க. இப்போ, இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகா தலைமையகங்கள், முக்கிய நகரங்கள்னு அனைத்தையும் பதிவு செஞ்சிருக்கோம்.
ஒவ்வொரு நகரத்திலும் உள்ள குருதிக் கொடையாளர்கள் அவர்கள் எந்தக் குரூப் ரத்தத்தைச் சேர்ந்தவங்க, அவங்க செல்போன் நம்பர் உட்பட இணையத்தில் பதிவு செய்யும் வசதி இருக்கு. இந்த வசதியைப் பயன்படுத்தி இந்தியாவுல எங்க இருந்து வேணும்னாலும் எந்த வகை ரத்த தானம் செய்பவர்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் உடனடியாகத் தொடர்பு கொண்டு ரத்த தானம் பெற முடியும்.
அதேசமயம், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ரத்த தான அமைப்புகள் எங்களுக்கு உதவி செஞ்சாங்க. கிட்டத்தட்ட எங்களோட இணையதளம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு. 1.5 லட்சம் பேர் ரத்தக் கொடையாளர்களாக இருக்காங்க.

எங்க இணையதளத்துல ஒரு முறை ரத்தம் கொடுத்தா, அப்போதிலிருந்து 90 நாட்களுக்கு அவங்களோட பெயர் தானாகவே இணையதளத்துல இருந்து நீக்கப்பட்டுவிடும். அதேபோல், 90வது நாள் அந்த நபருக்கு, ‘நாளை முதல் நீங்கள் ரத்த தானம் செய்யலாம்’ என மெசேஜூம் போய் விடும். இணையதளத்துலயும் அவங்க பேர் இருக்கும்.

அதே மாதிரி, யார் ரத்த தானம் செய்யலாம், ரத்தம் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை தரணும். ரத்த தானம் செஞ்ச பிறகு என்ன செய்யணுங்கிற விழிப்புணர்வை தகுந்த நிபுணர்களை வெச்சு, பள்ளி, கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி வருகிறோம்.
ஒரு சிலர் ரத்தம் கொடுக்கிறேன்னு பதிவு செஞ்சிருவாங்க. திடீர்னு முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அப்படிப்பட்டவங்க இந்த இணையதளத்துல ‘ரிப்போர்ட்’ பகுதியில் அந்த விபரத்தை பதிவு செய்யணும்.

இப்படிப் பதிவு செஞ்ச பிறகு டோனர்களின் பெயர்கள் உடனடியாக லிஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

சேவைக்கு அங்கீகாரம்

எந்தச் சேவைக்கும் அங்கீகாரங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட அங்கீகாரம்தான் அந்தச் சேவை தொடர்வதற்கு ஊக்கமாக இருக்கும். அப்படி, எங்களோட இந்த இணையதளச் சேவைக்காக ‘லிம்கா விருது’ உள்ளிட்ட பல விருதுகள் கிடைச்சிருக்கு. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘வேர்டு யூத் சம்மிட்’ அமைப்பானது வருடந்தோறும் சமூகச் சேவை புரியும் அமைப்புகளுக்கு விருதுகளைக் கொடுக்கிறது வழக்கம். போன வருஷம் எங்களது அமைப்பின் சேவையைப் பாராட்டிக் கொடுத்தது.
வசதியும் - வருங்காலத் திட்டமும்

ஆண்ட்ராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் போன் மூலமும் இந்த வசதிகள் பெறக் கூடிய புதிய இலவச அப்ளிகேஷனை போன வருஷம்தான் அறிமுகப்படுத்தினோம். கேரள மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் ஜஸ்டின்தான் உருவாக்கித் தந்தார்.

தற்போது இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும். அதேசமயம், படிப்பறிவு இல்லாதவர்களும், இணையம் பற்றித் தெரியாதவர்களும் ரத்தம் தேவைப்படும்போது என்ன செய்ய முடியும். அவர்களுக்குப் பயன்படும் வகையில், toll free நம்பர் அறிமுகப்படுத்தறத் திட்டமும் இருக்கு.

நன்றி - மு.அழகர்பாரதி

3 comments:

  1. நல்ல செய்தி. எங்கள் பாஸிட்டிவ் பகுதிகளுக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கொள்கிறேன் - உங்கள் அனுமதியோடு! :)))

    வாழ்க இவர்கள்.

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    வணக்கம். ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்ள வைத்தீர்கள். நல்லதொரு பணியை நாட்டு மக்களுக்காக நாளும் செய்வது பாராட்டுக்குரியது.

    இணையம் பற்றித் தெரியாதவர்களும் ரத்தம் தேவைப்படும்போது என்ன செய்ய முடியும். அவர்களுக்குப் பயன்படும் வகையில், toll free நம்பர் அறிமுகப்படுத்தறத் திட்டமும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    வாழ்த்துகள். நன்றி.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpanit.blogspot.in

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு...
    நேற்றைய பகிர்வு திறக்கவில்லையே ஏன்...?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"