தொடர்ச்சி:
11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது
அ. கேபிள்
ஆ. ரேடியோ அலைகள்
இ. மைக்ரோ அலைகள்
ஈ. ஆப்டிகல் பைபர்
12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?
அ. ஸ்டீபன்ஸன்
ஆ. ஜேம்ஸ்வாட்
இ. மெக்ஆடம்
ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ்
13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்
அ. பெட்ரோலியம்
ஆ. நிலக்கரி
இ. இயற்கை வாயு
ஈ. சூரியன்
14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்
அ. சுழற்சி இயக்கம்
ஆ. வேக இயக்கம்
இ. நேர்கோட்டு இயக்கம்
ஈ. அலை இயக்கம்
15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்
அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்
ஆ. அவை ஒரே நேரத்தில் விழும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்
அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்
17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது
அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று
18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய
அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ
19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்
அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி
20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்
அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
விடை: 11. ஈ 12. ஆ 13. ஈ 14. இ 15. ஆ 16. ஈ 17. ஈ 18. ஆ 19. இ 20. அ.
நல்ல சேவை.
ReplyDeleteதொடருங்கள்.
தொடரட்டும் பயனுள்ளபணி
ReplyDelete