Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/27/2012

சீரழியும் மாணவ சமுதாயம்....



இன்றைய மாணவர்கள் சமுதாயத்தில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவது  அனைத்து பெற்றோர் மத்தியிலும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று சென்னையில் ஒரு மாணவியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக ஒரு ஓட்டலுக்கு சென்ற மாணவர்கள், விழா முடிந்ததும் அங்கு நடனமாடும் நங்கைகளுடன் (போதையுடன்)நடனமாட போட்டி போட்டுகொண்டு சண்டையிட்டதில் பிரச்சனையாகி  போலீசார் தலையிட்டு கைது படலம் வரை சென்றிருக்கிறது.

கடந்த காலங்களில் , ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒரு  ஆசிரியையை கொலை செய்தது மற்றும்  தன்னுடன் படிக்கும் மாணவியை  நான்கு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து  குளிர்பானத்தில் போதை மருந்தை கலக்கி பாலியல் பலாத்காரம் செய்தது. இப்படி எத்தனையோ விசயங்களை நாம் தினசரி செய்திதாளில் படித்திருக்கிறோம்.

நம்முடைய விஞ்ஞானம் எவ்வளவு முன்னேருகிறதோ அவ்வளவும்  மாணவர்கள் செய்யும் குற்றங்களும் முன்னேறி வருகிறது.டிவி, இன்டர்நெட், மொபைல் போன்   போன்றவற்றை, மாணவ, மாணவியர் ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும்  பயன்படுத்துகின்றனரா என்பதை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து, பாக்கெட் மணியும்  அதிகம் கொடுக்கக் கூடாது. 

நீதி கதைகள், யோகா, கவுன்சலிங்  போன்றவை, பள்ளிகளில் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். மதிப்பெண் பெறுவது மட்டுமே  வாழ்க்கையாக இல்லாமல், அதற்கு மேலே மனிதன் பெற வேண்டிய வேறு சில விஷயங்களையும், அறிவுரைகளும்  ஆசிரியர்கள், மாணவ சமுதாயத்திற்கு  போதிக்க வேண்டும்.

இன்று, கல்வி முற்றிலும்  வியாபாரமாகி, மனிதன் இயந்திரமயமாகி, மாணவ செல்வங்களை மதிப்பெண் பெரும் இயந்திரங்களாக மாற்றி விட்டதால் தான்  இந்த குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் உணரவேண்டும்  நம்முடைய அரசும்  இதற்கு தகுந்தவாறு  பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்து மாணவ செல்வங்களின் எதிர்காலம் பொற்காலமாக  அமையும்.

9 comments:

  1. சரியான வழி நடத்தல் இல்லாததை குறிக்கின்றது...

    ReplyDelete
  2. கூட்டுக்குடும்பங்கள் சிதறியதால் வந்த வினை இதெல்லாம்.

    ReplyDelete
  3. வருத்தமளிக்கும் விஷயம்! :(

    ReplyDelete
  4. நல்ல கருத்துகள் ...

    ReplyDelete
  5. மீண்டும் பதிவுலகில் வந்ததுக்கு வாழத்துகள்

    ReplyDelete
  6. வாங்க சார் வாங்க
    நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை

    இறுதியில் நல்வழி சொல்லி இருக்கீங்க சார்

    ReplyDelete
  7. சமூகம் சார்ந்ததே நீதி போதனையும்.வெறுமனே நீதி போதனை போதித்து விட்டு சமுகத்துக்குள் நுழையும் போது மாணவன் தடுமாறவே செய்வான்.சமூக திமிங்கலங்களுக்கு கடிவாளம் போட வேண்டும்.

    குற்றங்கள் எனும் வரை செல்லாத வரை மாணவ பருவத்தின் சிறு சிறு சில்மிஷங்களை அனுமதித்தே ஆகவேண்டும்.

    ReplyDelete
  8. ஊடகங்கள் அதிகரித்துவிட்டன..செய்திகளை நிரப்ப வேண்டும் என்பதற்காக, சினிமா, கொலை கற்பழிப்பு மற்றும் இதுபோன்ற ஆபாச கூத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்திகளை மட்டுமே வெளியிடும் பத்திரிக்கைகளும், சின்னத்திரைகளும்தான் இது போன்ற நிகளுவுகளுக்கு முக்கிய காரணம்..அதுமட்டுமின்றி, திரைப்படங்கள் அனைத்துமே மாணவர்களையும் இளைய சமுதாயத்தினரையும் வழிகெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஆபாச வியாபாரம் செய்கின்றான்..வேறு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் நண்பரே?






    ReplyDelete
  9. கல்வி கட்டாயம்
    இலவசம் என்றிருந்தால்
    மதிப்பெண் பெறும்
    இயந்திரமாக மழலைகள் இருக்காது

    என்ன செய்ய
    குறைந்த கட்டணத்தில் படிக்க ஆசைப்பட்டால் மதிப்பெண் நோக்கி மனப்பாடம் செய்து முட்டாளாக தேர்ச்சி பெற வேண்டியதுதான்

    cut off 99 என்றால் 1000 வரிசையில் இருக்கிறான் 100 இடங்களுக்கு

    50 மதிப்பெண் பெற்றவன் அஞ்சல் வழி கல்வி தேர்வு செய்வான். அரசு அதை நோக்கிதான் செல்கிறது


    இனிய சந்திப்பு
    பதிவர் விழாவில்
    வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"