Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/31/2012

இப்படியும் ஒரு மாணவியா? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் (Repost)




சீருடை அழுக்கென்று
சினந்தேன் 
அந்த மாணவியை‌...

மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தாள்..

உடம்புச் சூட்டில்
உலர்ந்துவிடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா..

காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈர விழியில் நனைந்த
ஓருடை..


31 comments:

  1. ஏழ்மையின் விளிம்பு நிலையை நச்சென்று மனம் கணம் கொள்ளும்படி சொல்லிவிட்டீர்கள்...

    ReplyDelete
  2. இளமையில் வறுமை கொடிது

    ReplyDelete
  3. மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கு நன்ரி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கவிதை படித்ததும் கண்ணில் ஈரம் மிகுந்தது! அருமையான படைப்பு!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  6. மீள் பதிவென்றாலும் சுள்ளெனச் சுட்ட பதிவு...
    அழகான வரிகள்

    ReplyDelete
  7. சில வரிகளில் முகத்திலறைந்தது போலிருக்கு உங்க கவிதை. இந்நிலை மாற வேண்டும் சகோ.

    ReplyDelete
  8. நெஞ்சை உலுக்கும் கவிதை சார் ..

    ReplyDelete
  9. அறிவு பசி தேடி
    அரசு பள்ளி வர காரணமே
    அந்த ஏழ்மைதானே

    ReplyDelete
  10. சுடும் நிஜங்களோடு அருமையான கவிதை!

    ReplyDelete
  11. கவிதை நல்லா இருக்குங்க, தலைப்பை இப்படி ஏடாகூடமாக வைக்க வேண்டுமா? :)

    ReplyDelete
  12. இதயம் கனத்தது... சற்றும் எதிர்பாராத பதிவு! நன்றி!

    ReplyDelete
  13. ஏழ்மையின் விளிம்பு நிலையை இப்படி ஒரு தலைப்பு வைத்து வாசகர்களை கவர வேண்டிய அவசியம் என்ன ??? அதனாலேயே இது எனக்கு பிடிக்கவில்லை !!

    ReplyDelete
  14. தலைப்பு கவிதைத்தனமாய் வைத்திருந்தால் அழகாக இருந்திருக்கும். கவிதை சூப்பர்.

    ReplyDelete
  15. வறுமையின் கொடூரத்தை காட்டிய விதம் அருமை கருண்

    ReplyDelete
  16. பழூர் கார்த்தி said...
    கவிதை நல்லா இருக்குங்க, தலைப்பை இப்படி ஏடாகூடமாக வைக்க வேண்டுமா? :)/// இது என் வகுப்பில் நடந்த விடயங்களை கவிதைகளாக, பல எழுதியுள்ளேன். அதனால் தான் // பள்ளியில் நடந்த உண்மைகள்// என தலைப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  17. Ponchandar said...
    ஏழ்மையின் விளிம்பு நிலையை இப்படி ஒரு தலைப்பு வைத்து வாசகர்களை கவர வேண்டிய அவசியம் என்ன ??? அதனாலேயே இது எனக்கு பிடிக்கவில்லை !!// மன்னிக்கவும் நண்பரே மேலே சொன்ன பதில்தான் உங்களுக்கும்.

    ReplyDelete
  18. துரைடேனியல் said...
    தலைப்பு கவிதைத்தனமாய் வைத்திருந்தால் அழகாக இருந்திருக்கும். கவிதை சூப்பர்.// தலைப்பு கவித்துவமாக இருந்தால் யார் படிப்பார்கள் சார்../ இருந்தாலும் இனி இது போல நடக்காது.

    ReplyDelete
  19. அன்பின் கருண்

    ஈரச் சீருடை - ஓருடை - காய்ந்த வயிறு - கொடுமையிலும் கொடுமை வறுமை - சொல்லொணாத்துயரம் - கவிதை நன்று - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. நல்ல கவிதை,ஏழ்மையை மிக அழகாய் சொல்கிறது
    இன்றையவானம் அ.தமிழ்ச்செல்வன்

    ReplyDelete
  21. Father's stomach was boiling with full of hot drinks

    ReplyDelete


  22. மீள் பதிவு என்றாலும் நான் படிக்காத ஒன்று. கவிதை நெஞ்சைத் தெட்டது! கருத்து சுட்டது

    ReplyDelete
  23. நல்லதொரு கவிதை ! கவிதைக்கு பாராட்டுக் கொட்டுவதை விட, சமூகத்தில் துன்பப்படும் சக மனிதருக்கு உதவிக் கரம் நீட்டுவோமே !!!

    ReplyDelete
  24. காய்ந்த வயிற்றிலும்
    உலரவில்லை
    ஈர விழியில் நனைந்த
    ஓருடை..

    ReplyDelete
  25. எதிர்பாராத அதிர்வு.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"