நம் இந்திய நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் இருக்கும் விவசாயிகளின் இன்றைய நிலை என்ன?
சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலைப் பாதையை தேர்ந்தெடுகிறார்கள் என ஒரு சர்வே கூறுகிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தொழில்துறையும் சேவைத் துறையும் அதிகமான பங்களிப்பை தருவது என்னவோ உண்மைதான் ஆனால் நாட்டு மக்களைப் பட்டினியில் தவிக்க விடாமல் பாதுகாக்கும் நம் விவசாயிகளின் நிலை எப்படி இருக்கிறது?
இப்போது நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை பொய்த்துப் போயுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் (கர்நாடகாவின் பாரா முகம் வேறு)காவிரிப் பாசனப்பகுதிகளில் குறுவை சாகுபடி என்பது அடியோடுபொய்த்துவிட்டது. அரசு செப்டம்பரில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்றுகூறி இருக்கிறது. இதில் கிடைக்கும் நீர் சம்பா பயிர் விளைவித்து, அறுவடை செய்வது வரைக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே.
அப்படியே போதிய அளவிற்குத் தண்ணீர் கிடைத்து விவசாயி விவசாயத்தைத் ஆரம்பிக்கும் போது, அவரு(னு)க்கு மற்றொரு பக்கத்திலிருந்து கடும் தாக்குதல் வர இருப்பதை சாதாரண விவசாயி இன்னும் உணராமலே இருக்கிறார்(ன்).
இன்றைய தேதியில் அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் விவசாயம் பன்னாட்டு விதை மற்றும் உர நிறுவனங்களின் தயவில்தான் இருக்கிறது. நம் நாட்டின் ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பூச்சி மருந்துகள்,உரங்கள் மற்றும் விதைகளை விற்பனை செய்திடும் நிறுவனங்கள் அவற்றின் விலைகளைப் பலமடங்கு உயர்த்தி உள்ளார்கள். இவற்றை எப்படி ஒரு சாதாரண விவசாயி வாங்கி விவசாயத்தை செய்ய முடியும்.
தன்னுடைய மாநிலங்களுக்குத் தேவையான உரங்களை சர்வதேச அளவில் இருந்து வாங்கி, விற்பனை செய்யும் பொறுப்பு நம் மத்திய அரசையே சாரும். ஆனால் மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு இதில் போதுமான கவனத்துடன் செயல்படாததாலும், மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாலும் நாட்டின் முதுகெலும்புகலான விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை மதிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்குவதில்லை.
இதனை அடுத்துத் தனியார் உர கம்பெனிகள் தங்களிடம் இருக்கும் உரத்தை பதுக்கி விடுகின்றன. அதன் காரணமாக எவ்வளவு விலை உயர்ந்தாலும் பரவா யில்லை விளைந்த பயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு, நம் விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.
இதுபோன்ற பல பிரச்சனைகளில்தான் விவசாயி தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் அவர்கள் தன் அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு கடைப்பிடிக்கும் கொள்கை தான். அதாவது உரம்,விதைகள், பூச்சி மருந்து போன்ற விவசாயிகள் வாங்கும் பொருள்களாக இருந்தாலும் சரி நெல், கோதுமை, சோளம், கரும்பு போன்ற விளைபொருள்களை விற்பதாக இருந்தாலும் சரி அவற்றின் விலையை அவன் தீர்மானிக்க முடியாது. அதனால் தான் விவசாயிகளுக்கு உரிய காலத்தே எதுவும் கிடைப்பதில்லை.
இதுபோன்ற விவசாய சம்பந்தப்பட்ட சந்தையைத் தீர்மானிப்பது யார்? விவசாயப் பொருள்களை பதுக்கி வைத்துக் கொள்ளையடிப்பவர்களும், அரிசி, கோதுமை போன்ற தானியங்களை கிடங்கில் பதுக்கி வைத்திருந்து தேவையான போது விலையை ஏற்றிக் கொள்ளையடிப்பவர்களும்தான் இந்த சந்தையைத் தீர்மானிக்கிறார்கள்.
இப்படி பங்கு போட்டுக்கொண்டு கொள்ளையடிப்பதில் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகளும் பங்குகொள்ளலாம் என்கிற முறையில் ஒரு கொள்கையைத்(?) தற்போது மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.
அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி இன்றும் விவசாயம் செய்பவர்களுக்கு நாம் என்றும் கடமைப் பட்டிருப்போம்.
சரியா சொன்னீங்க .
ReplyDeleteவிவாசயிகளின் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது...
ReplyDeleteமத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கவேண்டும்...
நாம் சாப்பிட அரிசி தரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் சுருங்கி கொண்டே போவது கவலை அளிக்கும் விஷயம்....நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை எப்ப கண்டு கொள்ள போகிறது நம் அரசும் சமூகமும் ?
ReplyDeleteகவலைகொள்ளும் விஷயம்!
ReplyDeleteஎன்று வாங்கும் சம்பளத்திற்கு கொஞ்சமாவது வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் நம் நாட்டிற்கு கிடைக்கிரார்களோ அது வரை மக்களின் இந்த தரித்திரியம் நீங்காது!
சிறப்பான அலசல்! விவசாயம் அழிந்து வரும் வேளையில் நல்லதொரு பகிர்வு!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html
சிந்தித்து செயல்படவேண்டிய அரசு கொள்ளை அடிப்பதில் மோகம் கொண்டிருக்கையில் நாட்டின் முதுகெலும்பை பற்றி கவலை இருக்காது சார் .. அற்புத பதிவு ...
ReplyDeleteஎல்லாம் பன்னிட்டு கம்பெனிகாரர்களிடம் அடகு வைத்து விட்டு காற்றையும் காசு கொடுத்து வாங்க செய்து விடும் இந்த காங்கிரஸ் அரசு
ReplyDeleteபல விவாசாயி இன்று பெருநகரங்களில்
செக்யூரிட்டியாக பணிபுரியும் அவல நிலை நமது நாட்டில் தான் நடைபெறும்
நல்ல பதிவு நண்பரே