நான் ஒரு ஆசிரியர்.........
ஒரு மருத்துவரின் பின்னால்
நான் இருக்கிறேன்
ஒரு ஆசிரியராக.......
ஒரு பொருளியளாளனின்
பின்னால் நான் இருக்கிறேன்
ஒரு ஆசிரியராக.......
வானியலாளர்களின் பின்னாலும்
நான் இருக்கிறேன்
ஒரு ஆசிரியராக.......
என்னைக் கேலி செய்தாலும்
அவர்கள் வாழ்வில்
ஒளியேற்றுபவராக இருக்கின்றேன்...
ஆனாலும் நான் ஒரு ஆசிரியர்
என்னிடம் பொருளாதார வசதிகள்
அதிகம் இல்லை.....
விலையுயர்ந்த பொருட்களை
வாங்க முடிந்ததில்லை........
ஆம் நான் ஒரு ஆசிரியர்.....
எனக்குப் பல விடுமுறைகள் கிடைப்பதாக அனைவரும் நினைக்கக்கூடும்.
ஆனால் அவர்களுக்குத் தெரிவதில்லை, என்னுடைய விடுமுறை நாட்களானது விடைத் தாள்கள் திருத்துவதிலோ, வகுப்பறையில் எதை பாடம் எடுப்பது , எவ்வாறு எடுப்பது எனத் திட்டமிடுவதிலுமோ கழிகின்றதென.
ஏனென்றால் நான் ஒரு ஆசிரியர்.
சில வேளைகளில் நான் மனம் குழம்பியிருக்கின்றேன்.
எதை, எவ்வாறு கற்பிக்க வேண்டும்
என மாற்றம் செய்யும் அரசியல் கொள்கைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றேன்.
இவை அனைத்தையும் தாண்டி நான் ஒரு ஆசிரியர். நான் கற்பித்தாக வேண்டும், கற்பித்துக் கொண்டும் இருக்கிறேன்......
ஏனென்றால் நான் ஒரு ஆசிரியர்.....
எனது மனநிறைவானது என் மாணவர்களின் வளர்ச்சியிலும், வெற்றிகளிலும், செல்வங்களிலும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மையிலும் தங்கியிருக்கின்றது.
ஏனென்றால் நான்
ஒரு ஆசிரியர்.......
ஆம் நான் ஒரு ஆசிரியர்.......
மற்றவர்கள் என்னை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைப்பற்றி
எனக்கு வருத்தமில்லை.
எனது மாணவர்கள் என்னைவிடவும் அதிகம் சம்பாதிக்கலாம். நான் நடந்து செல்கையில் விலையுயர்ந்த வாகனங்களில் என்னைக்
கடந்து செல்லலாம்.

நான் அவற்றை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அதிகம் மகிழ்ந்திருக்கின்றேன். ஏனெனில் அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லை என்றாலும் அவர்களின் அந்த வளர்ச்சிகளின் பின்னால் ஒரு ஆசிரியராக எனது பங்களிப்பும் இருந்திருக்கின்றது.
ஆம் நான் ஒரு ஆசிரியர்........
ஆசிரியப் பணிக்காய் பெருமை கொள்வோம்.....
ஆம் நான் ஒரு ஆசிரியர்........
ஆசிரியப் பணிக்காய் பெருமை கொள்வோம்.....
அருமை...
ReplyDeleteவாழ்வும் வாழ்க்கையில் திருப்தியே அதிமுக்கியம்...
சொல்லாச் சுடரெரிந்து விடியல் தரும் வேள்விகள்
ReplyDeleteஅருமையான பதிவு அனைத்து மக்களும் அறிய வேண்டியதே
ReplyDeleteநன்றி !!. நல் ஆசிரியர்களின் பங்கு என் (அனைவருடைய !) வாழ்வில் மகத்தானது.என் முதல் பதிவே ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவுதான்.
ReplyDeletehttp://ennizhalbimbam.blogspot.com/2009/11/blog-post_10.html