இன்றைய மாணவர்களுக்கு மதிப்பெண்களைத் தவிர மற்ற அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு அனைத்து சலுகைகளும் "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை மேம்படுத்த நிதிநிலை அறிக்கையிலும்கூட மூன்றில் ஒரு பங்கு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.
இருந்தாலும் , நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த விலையில்லா கல்வி உதவிகளால் பள்ளிகளில் கற்பித்தல், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என்றே தோன்றுகிறது.
மார்ச், ஏப்ரல், மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே "ஆன்-லைனில்' பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களை அளிக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதையடுத்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளையும் தலைமை ஆசிரியரே மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்காக விலையில்லாமல் வழங்கப்படும் அனைத்து பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப் பை, சீருடைகள், காலணிகள், பஸ் பயண அட்டை, சைக்கிள்கள், வண்ணப் பென்சில்கள், கணிதக் கருவிப் பெட்டி, புவியியல் வரைபட நூல், இடைநிற்றலைத் தடுப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி, செஸ் விளையாட்டுக் கருவிகள், மதிய உணவு உள்ளிட்டவற்றைத் தகுதியான ஒவ்வொரு மாணவருக்கும் பெற்றுத்தருவதை தலைமை ஆசிரியர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக சில மாதங்கள் சாதி வாரியாகப் பட்டியல் தயாரித்து, அரசுத் துறைகளுக்கு அனுப்ப வேண்டும். சீருடைகள், காலணிகள் போன்றவற்றை மாணவர்களிடம் அளவெடுக்கும் பணியையும் பள்ளிகளே மேற்கொள்ள நேரிடுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பீடித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களில் இருந்து உதவித் தொகைகளைப் பெற்றுத் தருதலும் பள்ளி நிர்வாகங்களின் பணியாகும்.
இந்த உதவித்தொகைகள் அனைத்தும் மாணவர்களுக்குக் காசோலையாக வழங்கப்படுகிறது. இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கும் பணியையும் கவனிக்க வேண்டும். இதுவே இப்போது தலைமை ஆசிரியர்களுக்கு பேரும் தலைவலி.
இப்பணிகளோடு, வழக்கமான பள்ளி நிர்வாகப் பணி, கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டங்கள், அரசின் அவ்வப்போது அறிவுப்புக்கிணங்க பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள நேரிடுவதால், தலைமை ஆசிரியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சத்துணவுத் திட்டத்துக்கென பள்ளிகளில் அமைப்பாளர்கள் உண்டு; இதேபோல், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுக்குத் தனித் தனியே திட்ட அலுவலர்களைப் பள்ளிக் கல்வித்துறை நியமிக்கிறது.
இவ்வாறாக விலையில்லா பொருள்கள்,இதுமாதிரியான நலத் திட்ட உதவிகளை மாணவர்களுக்கு வழங்க, தனியே அலுவலர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தலைமை ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை குறையும். பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்.
தலைமை ஆசிரியர் மட்டுமல்ல கல்வித் துறை அலுவலர்களின் பணிச்சுமையும் மிகவும் அதிகரித்துள்ளது.பல்வேறு புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும் அனுப்புவதற்குமே நேரம் போதவில்லை.எல்லாமே அவசர கதியில் செய்யவேண்டியுள்ளது .இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப் படுவது என்னமோ உண்மைதான். இதனால் பல ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை விருபவதில்லை.
ReplyDeleteநல்ல பதிவு கருண்
நீங்கள் சொல்வதும் தம்பி முரளி சொல்வதும் முற்றிலும். அரசு செவி சாய்க்குமா..?
ReplyDeleteசரியாய்த்தான்படுகிறது தோழரே..
ReplyDeleteநல்லது
ReplyDelete//மார்ச், ஏப்ரல், மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே "ஆன்-லைனில்' பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களை அளிக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்
ReplyDelete//
தல இது நீங்க செய்ய போற வேலை .. H.M க்கு வேலை இல்லை ..
மற்ற விஷயங்கள் நீங்கள் சொல்வது உண்மை .. ஆனாலும் இவை அனைத்தும் இவர் ஒருவரை செய்ய போவதில்லை இவர் மேற்பார்வை மட்டும்தான் மற்ற ஆசிரியைகள் தானே செய்ய போகிறார்கள் ???
ReplyDeleteஇதையும் படிக்கலாமே ??
ReplyDeleteஅஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25
சரியாதான் சொல்றிங்க...ஆனா நடக்குமா ?
ReplyDeleteசார் தலைமை ஆசிரியரோ...
ReplyDeleteநல்ல பதிவு ஆனாலும் தலைமையாசிரியர் தன் வேலையினை பிரித்துக் கொடுக்கும் யுக்தியைக் கையாளலம்...
தொழிற் பிரிப்பைப் போல...
பயிற்றுவிப்பதைத் தவிர பல இதர வேலைகள் எக்கச் சக்கம்........... சரியில்லை. Afte promoting as HM they would transfer you to a remote place!!
ReplyDeleteநீங்கள் சொல்வது சரியாய்த்தான் தோன்றுகிறது நண்பரே...!
ReplyDeleteஎங்குமே தலைமை என்பது சாப வரம்தான்!
ReplyDeleteநீண்ட இடைவேளையின் பின்னர். நலங்கள் எல்லாம் எப்படி?
ReplyDeleteவிலையில்லா பொருள்கள்,இதுமாதிரியான நலத் திட்ட உதவிகளை மாணவர்களுக்கு வழங்க, தனியே அலுவலர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தலைமை ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை குறையும். பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்.
ReplyDeleteஅரசு ஆவன செய்யவேண்டும் ...