ஒருநாள் போட்டிகளில் 49 முறை சதமடித்து சாதனை செய்த சச்சின் தமது 50-வது சதத்தை அடிக்காமலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய 16-வயதில் நம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கிய டெண்டுல்கர் 39-வது வயதில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.
சச்சின் சாதனைகள் : சச்சின் மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் எடுத்த ரன்களின் சராசரி என்பது 44.83 ஆகும்.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் மொத்தம் 49 முறை சதமடித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். அதேபோல் 96 முறை அரை சதம் அடித்திருக்கிறார். இருப்பினும் ஒருநாள் போட்டியில் சச்சின் 50வது சதமடிப்பதை தாம் எதிர்பார்ப்பதாக அவரது மனைவி சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அந்த சதத்தை அடிக்காமலையே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 100 அரை சதமும் 50 சதமும் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எது எப்படியோ கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இதை யாராலும் மறுக்க முடியாது.
ரொம்ப லேட்!! தனி மனிதனின் ரெகார்டை விட அணியின் செயல்பாடு மிகவும் முக்கியம், 100 கோடிக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட நாட்டில் இவர் ஒருத்தரே தன்னுடைய ரேகார்டைப் பார்த்துக் கொண்டு இத்தனை நாள் அணியில் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது துரதிர்ஷ்டம். ஆஸ்திரேலிய அணியாக இருந்தால் மூன்று வருடத்துக்கு முன்னரே விரட்டியடித்திருப்பார்கள்.
ReplyDeleteஉண்மையா சொல்றீங்க?
ReplyDeleteஎப்படியோ 100 சதம் ஆயிடிச்சியில்ல அதுபோதும் ஆகட்டுங்க...
ReplyDeleteகிரிக்கெட் பார்க்க கூட நேரம் இருக்கா?
ReplyDelete