Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

8/10/2012

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள்-4


அன்பு நண்பர்களே வணக்கம் ... இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும் குருப் தேர்வுகளுக்குப் பயன்படும் குறிப்புகள் ஆகும் , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன்.

தொடர்ச்சி: 

11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது

அ. கேபிள்
ஆ. ரேடியோ அலைகள்
இ. மைக்ரோ அலைகள்
ஈ. ஆப்டிகல் பைபர்

12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?

அ. ஸ்டீபன்ஸன்
ஆ. ஜேம்ஸ்வாட்
இ. மெக்ஆடம்
ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ்

13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்

அ. பெட்ரோலியம்
ஆ. நிலக்கரி
இ. இயற்கை வாயு
ஈ. சூரியன்

14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்

அ. சுழற்சி இயக்கம்
ஆ. வேக இயக்கம்
இ. நேர்கோட்டு இயக்கம்
ஈ. அலை இயக்கம்

15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்

அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்
ஆ. அவை ஒரே நேரத்தில் விழும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு

16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்

அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்

17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது

அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று

18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய

அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ

19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்


அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி

20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்

அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு 

விடை: 11. ஈ 12. ஆ 13. ஈ 14. இ 15. ஆ 16. ஈ 17. ஈ 18. ஆ 19. இ 20. அ.


8/09/2012

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள் - 3


இன்று தமிழ் ..


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

                                              
அறநூல்கள் - 11
                                              
அகநூல்கள் - 6
                                                      
புறநூல் - 1
அறநூல்கள் - 11

நாலடியார்
சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை
விளம்பிநாகனார்
இன்னா நாற்பது
கபிலர்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார்
திரிகடுகம்
நல்லாதனார்
ஆசாரக்கோவை
பெருவாயின்முள்ளியார்
பழமொழி
முன்றுரையரையனார்
சிறுபஞ்சமூலம்
காரியாசன்
ஏலாதி
கணிமேதாவியர்
திருக்குறள்
திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி
கூடலூர் கிழார்

 புறநூல் -1

களவழி நாற்பது
பொய்கையார்

அகநூல் - 6

ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது
மூவாதையார்
திணைமொழி ஐம்பது
கண்ணன் சேந்தனார்
கார் நாற்பது
கண்ணன் கூத்தனார்
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார்
ஐந்திணை அறுபது () கைந்நிலை
புல்லங்காடனார்
.
1.அறநூல்கள் விளக்கம்

8/08/2012

அனைவருக்கும் செல்போன் இலவசமாக வழங்கப் போகிறது மத்திய அரசு..



இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் வீழ் வாழும் அனைத்து  ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு செல்போன் இலவசமாக வழங்குவது என மன்மோகன் அரசு  அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி MID TERM TEST - 2012 QUESTION PAPER-2

பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவ செல்வங்களுக்காக...

திருவள்ளூர் மாவட்ட முதல் இடைப்பருவத் தேர்வு கேள்வித்தாள் இன்று ஆங்கிலம்..

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் ..



கேள்வி தாளை டவுன்லோட் செய்ய  இங்கே கிளிக்கவும்... 

நாளை ஆங்கிலம்..

8/07/2012

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள் - 2


அன்பு நண்பர்களே வணக்கம் ...
இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும்  குருப் தேர்வுகளுக்குப் பயன்படும்  குறிப்புகள் ஆகும்  , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். நன்றி . தங்கள் படிக்கும்  குறிப்புகளையும் எனக்கு தந்தீர்கள் எனில் எனக்கும் பயன்படும் .. 
நன்றி ...

1. ஒரு குதிரைத்திறன் என்பது

அ. 946 வாட்
ஆ. 846 வாட்
இ. 746 வாட்
ஈ. 646 வாட்


2. வௌவால் ஏற்படுத்துவது

அ. குற்றொலி
ஆ. மீயொலி
இ. செவி உணர் ஒலி
ஈ. அனைத்தும் தவறு


3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:

I. மனிதன் - 1. 1000 - 1,00,000
II. யானை - 2. 100 - 32,000
III. பூனை - 3. 20 - 20,000
IV. கொறி விலங்குகள் - 4. 16 - 12,000

அ. I-3 II-1 III-2 IV-4
ஆ. I-3 II-4 III-1 IV-2
இ. I-3 II-2 III-1 IV-4
ஈ. I-3 II-4 III-2 IV-1


4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்

அ. மாயபிம்பம்
ஆ. மெய்பிம்பம்
இ. பொய்பிம்பம்
ஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள்


5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்

அ. பரப்பு இழுவிசை
ஆ. ஈர்ப்பு விசை
இ. மைய நோக்கு விசை
ஈ. மைய விலக்கு விசை


6. முதன்மை நிறங்கள்

அ. சிவப்பு, பச்சை, நீலம்
ஆ. பச்சை, சிவப்பு, கருப்பு
இ. சிவப்பு, பச்சை, வெள்ளை
ஈ. கருப்பு, மஞ்சள், நீலம்


7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்

அ. காற்று
ஆ. ஆக்சிசன்
இ. நீர்
ஈ. சூரியன்


8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை

அ. 9.9 N
ஆ. 9.10 N
இ. 9.8 N
ஈ. 9.11 N


9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்

அ. சமமாக இருக்கும்
ஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்
இ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்
ஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை


10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்

அ. 20 கி.மீ.
ஆ. 18 கி.மீ.
இ. 25 கி.மீ.
ஈ. 30 கி.மீ.


விடை: 1. இ 2. ஆ 3. ஈ 4. அ 5. அ 6. அ 7. ஈ 8. இ 9. அ 10. ஆ. 



8/06/2012

சமச்சீர் கல்வி MID TERM TEST - 2012 QUESTION PAPER



பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவ செல்வங்களுக்காக...


திருவள்ளூர் மாவட்ட முதல் இடைப்பருவத் தேர்வு கேள்வித்தாள் இன்று தமிழ்..


படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் ..



கேள்வி தாளை டவுன்லோட் செய்ய  இங்கே கிளிக்கவும்...

நாளை ஆங்கிலம்..

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள்


அன்பு நண்பர்களே வணக்கம் ...
இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும்  குருப் தேர்வுகளுக்குப் பயன்படும்  குறிப்புகள் ஆகும்  , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். நன்றி . தங்கள் படிக்கும்  குறிப்புகளையும் எனக்கு தந்தீர்கள் எனில் எனக்கும் பயன்படும் .. 
நன்றி ...







6/13/2012

காங்கிரசும் , கறுப்புப் பணமும்...



இன்றைய தேதியில் உலக அளவில் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டபோதுகூட, நம் இந்திய அரசு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக, பிரதமர் மன்மோகன் சிங் , நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  திட்டக் குழு துணைத் தலைவர் ஆகியோர் அறிவித்தனர். ஆனால் இப்போது, நிலைமை தலைகீழாக இருக்கிறது. 

ஆனால் இப்போது அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் எனக் காட்டுகின்றனர். இங்குள்ள வரலாறு காணாத விலைவாசி ஏற்றத்தையும், மிகவும் தாராளப் பணப் புழக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதில், எந்தவித மாற்றமும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. 

இந்த அவலட்சணத்தில் பலர் வெளி நாட்டில் மறைத்துவைத்துள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர, நிதி அமைச்சர் பிரணாப்பின் அறிக்கை வேறு சிரிப்பை கிளப்புகிறது. அங்குள்ள தொகையும், கழுதையாக இருந்து, இப்போது கட்டெறும்பாகத் தேய்ந்துவிட்டது. இப்போது, அந்தத் தொகையின் மதிப்பு, 4 ஆயிரம் கோடி ரூபாய் தானாம். 

கடந்த 50 ஆண்டுகளாக, அதைப்பற்றிப் பேசிப்பேசி, ஒரு பைசா கூடப் வரவில்லை. பின்னே எப்படி, அங்கே அந்த அளவு கறுப்புப் பணம் இருக்கும்? இன்னும் சில நாட்களில், இந்த இருப்பும் சுத்தமாகக் காணாமல் போய்விடும். அதைக் கொண்டு வர, அங்கே ஒன்றும் இல்லை என்று, பின்பு கூறுவர். 

சரி, உள்நாட்டிலாவது பதுக்கி இருக்கும் திருட்டுப்பணத்தைப் பரிசோதனை செய்து, வெள்ளைப் பணமாக்க முயற்சியாவது செய்வார்களா என்றால், அதுவும் மிகப்ஏமாற்றம் தான். பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம், பெரிய பெரிய பணக்காரர்கள், ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், இப்போதுள்ள எம்.பி.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பயங்கர தாதாக்கள்! 

பொருளாதாரத்தை தலைநிமிர்த்த, நம் பிரதமருக்கு தனிப்பட்ட ஆலோசகர் வேறு. முன்பு இருந்த முன்னாள் பிரதமர்களான லால் பகதூர் சாஸ்திரி மற்றும்  மொரார்ஜி தேசாய் போன்றோருக்கு இருந்த துணிச்சல்,தைரியம், இப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு கிடையாது. இவர்களிடம், புரட்சிகரமான, வளர்ச்சி தரக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளை எதையும் எதிர்பார்க்க முடியாது!

வாழ்க நம் ஜனநாயகம்.. வளர்க கையாலாகாத காங்கிரஸ்....!!!!!!

3/07/2012

தோல்வி என்பது நிரந்தரமல்ல தோழா.... Repost



ல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஒரு சில மாணவர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடுவதுண்டு. இதற்கு மாணவர்களது பெற்றோரும் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுவார்கள்.