ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக, டில்லியில் நாளை மறுதினம் துவங்கும் தன் உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்,'' என, பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அறிவித்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவர், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்.
ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 4ம் தேதியில் இருந்து, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் .,
சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர்.
இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.











