Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/18/2014

நம்பிக்கை தான் வாழ்க்கை - ஒரு சிறிய சம்பவம்..




நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

“அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?”

”சிறையிலே இருந்தேன்!”

”ஏன்?”

”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!”

”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”

”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”

”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?”

"அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி, மருந்து மாத்திரை அல்ல‌!”

16 comments:

  1. படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் அல்ல..படிக்காதவர்கள் எல்லோரும் முட்டாள்கள் அல்ல------

    ReplyDelete
  2. நம்பிக்கை தான் சிறந்த மருந்து என்று அருமையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல கதை. நம்பிக்கை தான் உந்து சக்தி.

    ReplyDelete
  4. நல்ல உத்வேகம் கொடுக்கும் கதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு....

    அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. சபாஷ் போடவைக்கும் சம்பவம்....

    ReplyDelete
  7. அருகையான கருத்தை மிக அழகாக சொல்லி விட்டீர்! நண்பரே!

    ReplyDelete
  8. ஆங்கில மருந்துகள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் அதை உட்கொள்ளும்போது விரைவில் குணமாகும் என்ற நம்பிக்கையுடன் சாப்பிட்டால் கண்டிப்பாக குணமாகும் என்று சொல்வதுண்டு.... நன்று...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"