Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/28/2013

அறிவியல் இன்றி ஓர் அணுவும் அசையாது


இன்று பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்.


அறிவியல் என்பது, அனைவரின் வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த அறிய கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு மட்டும் நின்று விடாமல், அதை செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆண்டுதோறும் அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு" கண்டுபிடித்த நாளை தான்  தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் எனும்  ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள் ஆவர்.

இவர் பிரசிடென்சி கல்லூரியில் இளநிலைமற்றும்  முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அதே நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்" நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்திருந்தார். 

ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது  என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், "ராமன் விளைவை' கண்டுபிடித்தார். 

நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது என கண்டுபிடித்தார். இதுவே ராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது. இந்த அறிய கண்டுபிடிப்புக்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

நாமும் இந்த நாளை கொண்டாடுவோம்.


5 comments:

  1. உள்ளேன் ஐயா!
    அறிவியல் இல்லையெனில் இன்றைய வசதிகள் ஏது?!

    ReplyDelete
  2. நல்ல நாளில் நல்ல அறிஞரை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. நல்ல தகவல் ...

    எங்கே பாஸ் ரொம்ப நாளா காணும் ???

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"