Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/30/2013

நிப்ட் ( NIFT ) விண்ணப்பிக்கும் நேரம் இது.



1986ம் ஆண்டு, நிப்ட் மையம் டெல்லியில் மட்டுமே  இருந்தது. ஆனால், இன்று  அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டோரல் படிப்புகள் வரை இவர்கள் வழங்குகிறார்கள்.

நிப்ட் மையங்கள்  பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய படிப்புகளைத் தாண்டி, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை பேஷன் படிப்புடன், துணைப் பாடங்களாக வழங்கப்படுகின்றன.

மேலும்  அவை கீழ்காணும் பட்டங்களை வழங்குகின்றன.

பேச்சுலர் ஆப் டிசைன்(B Des.)
இது 4 வருட படிப்பாகும். இதில், பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன் மற்றும் பேஷன் கம்யூனிகேஷன் போன்ற அம்சங்கள் அடங்கும்.

பேச்சுலர் இன் பேஷன் டெக்னாலஜி(B.F.Tech)
அப்பாரல் ப்ரொடக்ஷன். இது 4 வருட படிப்பாகும்.

மாஸ்டர் ஆப் டிசைன்(M.Des) - டிசைன் ஸ்பேஸ்

எம்.எப்.,டெக் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் டெக்னாலஜி

எம்.எப்.எம் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் மேனேஜ்மென்ட்.

எப்போது? எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

இந்த 2013ம் ஆண்டில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்போது பொதுப் பிரிவுக்கு ரூ.1,100ம், SC/ST/PHP பிரிவுக்கு ரூ.550ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

படிப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்ட Prospectus -ஐ, டவுன்லோடு செய்யwww.applyadmission.net/nift2013/Prospectus2013.pdf. இங்கு கிளிக்கவும். 

நுழைவுத்தேர்வு எப்படி இருக்கும் ?

இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள், ரெண்டு பிரிவுகளில், பேப்பர் வழியிலான தேர்வுகளை எழுத வேண்டும். General Ability தேர்வானது(GAT), Quantitative ability, Communication ability, English comprehension, Analytical ability, General knowledge and Current affairs போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.

Creative Ability தேர்வானது(CAT), உங்களின் படைப்பாக்க மற்றும் புத்தாக்க திறன்களை சோதிக்கிறது. 

மேற்கூறிய 2 தேர்வுகளில், செயல்பாடு கணக்கிடப்பட்டு, 6,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள், Material handling test என்ற ஒரு தேர்வில் பங்குகொள்ள வேண்டும். இந்த தேர்வில், மாணவர்களுக்கு மெட்டீரியல்கள் வழங்கப்படும். அதை வைத்து, கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற மாடலை அவர்கள் உருவாக்க வேண்டும்.

இளநிலை மற்றும் முதுநிலைகளில், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு நடத்தப்படும் GAT தேர்வானது, கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. இது கேஸ் ஸடடி ஆகும் ஆனால் கிரியேடிவ் டெஸ்ட் அல்ல. அனைத்து முதுநிலைப் படிப்புகளிலும் சேர, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை கடக்க வேண்டும். இவற்றுக்கு 30% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் உண்டு.

மேலும் விரிவான விவரங்களுக்கு கீழ்காணும் வலைமுகவறியைப் பார்க்கவும்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"