திருச்சியில் ரயிலில் வந்து அமர்கிறார் பெரியார். பக்கத்தில் ஒரு துணி மூட்டை. அப்போது பெரியார் ஈ.வெ.ரா. தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர். அப்போது அதே ரயில் பெட்டியில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரும் வந்து பெரியார் பக்கத்தில் அமர்கிறார். பெரியாரைத் தெரிந்துகொண்டு நலம் விசாரிக்கிறார். "எங்கே போயிட்டு வர்றீங்க?" என்று கேட்டார் உ.வே.ச. "கதர்த் துணியை தெருத் தெருவாகப் போய் வித்திட்டு வறேன்" என்றார் பெரியார்.











