"கல்யாண மண்டப ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடகியாக வந்த பெண்"
"ஹோட்டலில் எதிர் மேசையில் அமர்ந்து மெனு கார்டை மட்டுமே முப்பது நிமிடம் பார்க்கும் பெண்"
"பீச்சில் கை காட்டு ராசான்னு பக்கத்தில் உட்கார்ந்து குறி சொல்லும் பெண்"
"பப்பில் பீர் பாட்டிலை வாயில் ஓபன் செய்யும் பெண்"
"ஸ்மோக்கிங் சோனில் லைட்டர் கேட்டு ஸ்டைலா சிகரெட் பற்ற வைக்கும் பெண்"
"நல்ல மழையில் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கும் பெண்"
"திருவிழாக் கூட்டத்தில் முதல்முறை தாவணி உடுத்தி முந்தானை சரி செய்யும் பெண்."
"ஷேர் ஆட்டோவில் அருகில் அமரும் பெண்"
"அழகு நிலையத்தை ஒரு நமட்டுச் சிரிப்போடு கடந்து செல்லும் பெண்"
"ஒரு பனகல் பார்க் என்று 12 பி பேருந்தில் பத்து ரூபாய் நோட்டு நீட்டும் பெண்"
"அசடு வழிந்துகொண்டே வங்கியில் பேனா கடன் கேட்கும் பெண்"
"கடைசி இரண்டு முழம் மல்லிப்பூ பத்து ரூபாய் வாங்கிக்கோங்க என்று தி.நகர் பஸ்ஸ்டாண்டில் மன்றாடும் பெண்"
"ஒரு கையில் குழந்தையோடு மறுகையில் சிமென்ட் கலவை சுமக்கும் பெண்."
" துப்பட்டா செயின்ல மாட்டிக்க போவுது என்று எச்சரித்து விட்டு சிக்னலில் நிக்கும் போது ரொம்ப நன்றிங்க என்று சினேக பார்வையோடு நன்றியை வீசும் பெண்.."
"துணிக்கடையில் 32 சைஸ் பிரா என்று ராணுவ ரகசியம் போல மிக மெதுவாக கேட்டு விட்டு தான் கேட்டது மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதா? என்று திருதிருன்னு முழிக்கும் பெண்"
"தான் அழகுனு எந்த இடத்துலயும் காட்டிக்காம ஆணவம் இல்லாம கடந்துபோற பெண் "
"பேருந்து பயணத்தில் புன்னகையை வீசி சென்ற பெண்"
" பாஸ்போர்ட் ஆபீஸில் சந்தித்த பெண்"
"காதலை அளவுக்கு அதிகமாக காட்டிவிட்டு பிரிந்து சென்ற பெண்"
"எத்தனை முறை சண்டை போட்டாலும் தேடிவந்து பேசும் பெண் "
இந்த பெண்கள் அனைவருமே அவ்ளோ அழகு.
அழகு என்றாலே பெண்தான் .
இப்படி
தாயாக, சகோதரியாக, தோழியாக, குழந்தையாக.. எங்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட அனைத்து பெண்களுக்கும் நெஞ்சம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
அழகிய, அறிவார்ந்த, சக்தி ரூபங்களை வாழ்த்துவோம். வணங்கிடுவோம்.
ReplyDeleteசொன்னவிதம் வித்தியாசமாக இருந்தாலும்...
ReplyDeleteஇனிய மகளிர் தின வாழ்த்துகள்...(என்றும்)
வாவ் !! ரொம்ப அழகா இருக்கிறதே..வித்யாசமான வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDeleteமுக்கியமான ஒன்றை விட்டிட்டீப்க்களே... புளொக்கிலே தேடித் தேடிக் கொமெண்ட் போடும் பெண்கள் ... ஹா ஹா ஹா அழகு அனைத்தும்.
ReplyDeleteவித்தியாசமாய் சொன்ன மகளிர்தின வாழ்த்துக்கள்.
ReplyDelete