ஊழல் தடுப்பு மசோதாவை உருவாக்கும்போது, காந்தியவாதி அன்னா ஹசாரேவையும் ஆலோசனைக்காக சேர்த்துக் கொண்டது, மத்திய அரசு. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவின் அறைகூவலால், டில்லியில் கூடிய மக்கள் வெள்ளத்தைக் கண்டு மிரண்ட மத்திய அரசு, வேறு வழியில்லாமல், சமூக ஆர்வலர்களையும் அழைத்துப் பேசியது.
"லோக்பால் மசோதா உருவாக்க மேற்கொண்ட பரீட்சார்த்த முறைகளை, இனி எப்போதும் பின்பற்ற மாட்டோம். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் நடந்ததை, இனிமேல் முன்னுதாரணமாக எடுத்துக் காட்ட முடியாது. மற்ற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடமும், லோக்பால் மசோதா குறித்து கருத்து கேட்கப்படும்.