வீட்டுப் பாடம்
எழுதாதற்காய்
முட்டிப் போடச் சொன்னேன்
சிறுவனை...
மனசுக்குள் உறுத்தியது
அன்று
கையெழுத்து வாங்க வேண்டிய
நோட்ஸ் ஆப் லெசன் (பாடக் குறிப்பு)
தலைமை ஆசிரியரிடம்
காட்டாதது.....
2.
குற்ற உணர்ச்சியில்
குறுகிப் போகிறது மனசு..
மாணவர்களின்
பிரிவு உபச்சார விழாவில்..
யாரோ சமைத்ததைதான்
பரிமாறினோம்...
சமைக்க சொல்லித் தரவேயில்லையே
நான்
இறுதிவரை...!