அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதிலேயே பெரும்பாலானவர்கள் ஈடுபட்டு வரும் இந்த அறிவியல் யுகத்தில் பெண்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளத் தூண்டும் வகையில் படிப்புகளும் உள்ளன.
2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் மகளிரியலில் எம்.ஏ. பட்டப் படிப்பையும், எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம். மாணவிகளுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் இடமுண்டு. இரண்டு ஆண்டு கால இந்தப் படிப்பில் மொத்தம் 4 பருவத் தேர்வுகள் உள்ளன. இதில், முதல் 3 பருவத் தேர்வுகளிலும் தலா 5 பாடங்கள் உள்ளன.
இவற்றில் திட்ட வரைவும் (ப்ராஜெக்ட்) தயார் செய்ய வேண்டும். இறுதிப் பருவத் தேர்வில் திட்ட வரைவு முழு நேரமாக வைக்கப்பட்டுள்ளது. இளங்கலை பட்ட வகுப்பில் எந்தத் துறையாக இருந்தாலும், அதில், தேர்ச்சி பெற்றிருந்தால் மகளிரியல் முதுகலைப் பட்டப்படிப்பில் சேரலாம். இதேபோல, எம்.பில்., பிஎச்.டி. ஆய்வுகளில் சேர ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சமூகப் பணியில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை மட்டுமே இதில், சேர்க்கப்படுகின்றனர் என்கிறார் இந்த மையத்தின் இயக்குநர்.இது பற்றி அவர் மேலும் கூறியது:"பெண்ணியம் மற்றும் சமூகப் பொருளாதார, கலாச்சார, அரசியல் துறைகளில் பாலின பாகுபாடுகள் சார்ந்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு தீர்வுகளைத் தேடும் கண்ணோட்டத்தோடு இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆய்வுகளின் முடிவுகள் தேசிய மற்றும் மாநில அளவிலான வளர்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் வகுப்பதற்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.மகளிர் மேம்பாடு, மகளிர் பிரச்னை, பெண்ணியக் கோட்பாடு, சமூகவியல், பொருளியல் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதாவது, பெண்களுக்கு எதிரான அநீதிக்குக் குரல் எழுப்ப வைப்பதற்கான பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது.
மேலும், ஆண்-பெண் பாகுபாட்டைக் களையவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், வளர் இளம் பருவப் பெண்களுக்கு உள்ள பாலியல் ரீதியான பிரச்னைகள், ஊடகத்தின் தாக்கத்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், கருக்கலைப்பு, எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படும் பெண்கள், தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், ஜவுளித் துறையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்றவை தொடர்பாக ஆய்வு செய்யப்படுகின்றன.
உடனடி வேலைவாய்ப்பு: இப்படிப்பை முடித்தவர்களுக்குத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. குறைந்தபட்சமாக ரூ. 5,000 மாத ஊதியம் கிடைக்கும் அளவுக்கு வேலை கிடைப்பது நிச்சயம். நிறுவனங்களைப் பொருத்து, அதிக அளவிலும் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. Thanks Dinamani.
இந்த மையத்தில் மூன்றாம் பருவத் தேர்வுகள் முடிவதற்கு முன்பாகவே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து விடுகிறது.வெளிநாடுகளில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மகளிரியல் -பாலின கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திட்ட வடிவமைப்புப் பணிகள் அனைத்திலும், இந்த மைய மாணவர்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் இந்த மையத்தின் இயக்குநர்.
இன்று உலகமகளிர் தினம். அவா்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவோம்..
பெண்மையை போற்றுவோம்...
பெண்மையை போற்றுவோம்...
முந்தைய பதிவுகள்: 1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
2. மனதை தொட்ட கவிதைகள் 3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 4. திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....