Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/17/2015

ஆனந்தி டீச்சரின் ஒரு சோக அனுபவம்..


நான் ஒரு முறை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விற்காக ஒரு M R மாணவனுக்கு Scribe ஆக சென்ற போது நடந்த அனுபவம்.

நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது இருந்த பயம், படபடப்பு இன்றும் உணர்ந்தேன். அந்த உணர்வுகளோடே இன்றும் தேர்வறைக்குச் சென்றேன்.வினாத்தாள் கொடுப்பார்கள். நான் அந்த மாணவனுக்கு கேள்விகளை சொல்லவேண்டும், அவன் சொல்லும் பதிலை நான் விடைத் தாளில் எழுதவேண்டும் இதுதான் முறை. எடுத்தவுடன் கேள்விகளை கேட்க விரும்பாமல் அவனைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும் இயல்பாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவன் ஒன்றுக்குமே பதில் அளிக்கவில்லை. நேரம் போய்க் கொண்டேயிருந்தது. முதல் வினாவைக் கேட்டேன் பதிலில்லை, தெரியவில்லை போல, என்று அடுத்த வினாவை கேட்டேன், அதற்கும் பதிலில்லை.

முனுசாமி படிக்கலையா? முதுகில் தட்டிக் கொடுத்து அடுத்த வினாவைக் கேட்டேன். அவன் எதையோ யோசனை செய்துகொண்டிருந்தான். அவ்வறையில் நானும் அவனும் மின்விசிறியின் சத்தமும் மட்டுமே. அவன் வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

சரி விடு உன் அப்பா என்ன செய்கிறார்? மௌனம் . சரி அம்மா என்ன பண்ணறாங்க..? வேலைக்குப் போறாங்க. முதன்முறையாக வாய்திறந்து பேசினான். அப்பா...? என்றேன். 

தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.

எங்கப்பா ஒரு உல்லாசி மட்டுமல்ல ஒரு சுகவாசியும். எங்க அம்மாவின் சம்பளத்தில் ஊர் சுற்றும் ஒரு ஊதாரி. இதற்கு ஒரு காரணம் நான் தான் டீச்சர், நான் இப்படி மாற்று திறனாளியாக பிறந்துவிட்டேன் என்கிற சோகமாம்.

ஊரெல்லாம் கடன், அம்மா கேட்டாலோ அடி, உதை. போன மாதம் தான் கடன்காரர்கள் தொல்லை அதிகமாகி அப்பா தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். அப்போது அம்மா நான் உனக்கு பணம் ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லி, அவர்களுடைய கிட்னியை விற்று பணத்தை கொடுத்து இருக்கிறார்கள். இப்போது என் அம்மா மருத்துவமனையின் என்று சொல்லி முடித்தான். இன்னும் நிறைய சொன்னான். 

அவ்வளவுதான். அதுவரை நான் அடக்கி வைத்திருந்த கண்ணீர் பொளேரென்று வெளிவந்துவிட்டது. நான் தேர்வு அறையில் இருக்கிறேன் என்றே மறந்துவிட்டேன்.

அதன்பிறகு கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? பெண் கல்வி குறித்து பெரியாரின் கருத்து என்ன? மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை? இது போன்ற கேள்விகளைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

இன்னும் ஒருமணி நேரம்தான் இருக்கிறது? எழுதவேண்டிய விடைத்தாளும் இன்னும் நிரப்பப்படவில்லை.இப்போது என் கண் முன்னே ஒரு பெரிய கேள்வி? என்னுடைய மனது சொல்வதைக் கேட்பதா. ஒரு அரசு ஊழியராக அரசு விதி சொல்வதைக் கேட்பதா ?தத்தளித்தேன் என்று முடித்தார்.

ஆனந்தி டீச்சர், எங்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியை. 

அட... 

6 comments:

  1. ரொம்ப கஷ்டமான நிலை ஆனந்தி டீச்சருக்கு..
    மனசு சொல்வதைக் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. normally humanitarian attitude and behaviour would be echoed in such situations...i never knew what Anandhi teacher did on that day

    ReplyDelete
  3. அன்புள்ள ‘வேடந்தாங்கல் திரு. கருண்’ அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (07.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/7.html

    ReplyDelete
  4. அன்புள்ள ‘வேடந்தாங்கல் திரு. கருண்’ அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (07.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/7.html

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"