Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/12/2014

கற்றுக் கொள்வோம் மனிதாபிமானம்...

சில தினங்களுக்கு முன், டில்லி உயிரியல் பூங்காவில், வெள்ளைப் புலியின் கூடாரத்தில் ஒருவன் மாட்டிக் கொள்ள, அவனை அந்தப் புலி கொடூரமாக தாக்கி கொன்றது.

அங்கிருந்த அனைவருமே அந்த காட்சியை படம் பிடித்தனரே தவிர, வேறொன்றும் செய்யவில்லை. அதில் சிலர், கற்களையும் எடுத்து வீசினர். திரைப்படத்தில் மட்டுமே காணும் இதுபோன்ற காட்சிகளை, மனிதாபிமானம் மறைந்து போன இக்காலத்தில் நேரடியாகவே காண வேண்டியுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைப் பற்றி பூங்காவின் உயர் அதிகாரிகளை கேட்டால், 'அவர், கடந்த நான்கு ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்' என, விளக்கமளித்துள்ளனர். சரி... மனநலம் பாதிக்கப்பட்டவர் எனில், அந்த நபரை எதற்கு பூங்காவில் அனுமதிக்க வேண்டும். அப்படியே அவர் புலிகள் இருந்த இடத்தில் குதித்து விட்டார் என்றால் கூட, அவரும் மனிதன் தானே; அதுவும் ஒரு உயிர் தானே. பயங்கர விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் இடங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? சரி... அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் விட்டீர்கள். ஆரோக்கியமான மனிதனோ அல்லது பூங்கா ஊழியர்களோ மாட்டியிருந்தால் காப்பாற்றி இருப்பீர்களா?

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில், ரயில்வே ஸ்டேஷனில் பயணி ஒருவர் ரயிலில் இருந்து இறங்கும்போது, கால் இடறி விழுந்து விட, அவரின் கால், பெட்டியின் ஒரு சக்கரத்தில் மாட்டிக் கொண்டது. துடிதுடித்து கத்திய அவரை, அங்கிருந்த சக பயணிகள் மற்றும் ஸ்டேஷனில் இருந்த அனைவரும் உடனடியாக அந்தப் பெட்டியை அலக்காக ஒரு பக்கம் சாய்த்து, வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரை காப்பாற்றிஉள்ளனர்.

அவர்களிடம் எவ்வளவு பெரிய உள்ளமும், மனிதாபிமானமும், பெரும் முயற்சியும், எடுத்துக் கொண்ட காரியத்தில் மன உறுதியும், தன்னம்பிக்கையும் உள்ளதென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளைக்காரனிடம் வெள்ளையான பல நல்ல விஷயங்கள் உள்ளன; அவற்றை கற்றுக் கொள்வோம். படம் பிடிப்பதை நிறுத்திவிட்டு, மற்றவரிடம் பற்று கொள்வதை விதைத்து வைப்போம்.

மனிதம் வளர்ப்போம்..

2 comments:

  1. பாடம் தரும் இரண்டு நிகழ்வுகள் ,நன்றாக படம் பிடித்து காட்டினீர்கள் ,பாராட்டுக்கள் !
    த ம 1

    ReplyDelete
  2. அந் நிலையில் படமா! வெந்தப் புண்ணில் வேலா!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"