Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/21/2013

Face book - ல் முகம் காட்டும் பெண்களே ... பேஸ்புக் விபரீதங்கள் !



இது ஒரு பத்திரிகைகையில் படித்த செய்தி. யாரோ ஒரு பெண், அவளுக்கு குணமான கணவன், கல்லூரியில் பயிலும், இரு மகள்கள் என, மாமனார்- மாமியாருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறாள்.

பேஸ்புக்'கில், தன் புகைப்படம் மற்றும் முகவரியை வெளிப்படையாகப் பதிந்து வைத்திருந்தாள். இது எப்படியோ, ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்யப்பட்டு, நட்பு வட்டாரம் பெருகியது.

திடீரென ஒருநாள் அவளுடைய மொபைலில் ஒரு அழைப்பு. முப்பது ஆண்டிற்கு முன், காதலித்து ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்த காதலன் தான், அழைத்திருந்தான். 

தன் தற்போதைய நிலை, கணவர் மற்றும் குழந்தைகள் பற்றி அந்தப் பெண் எவ்வளவோ எடுத்து கூறியும், முன்னாள் காதலன் அதை புரிந்து கொள்ளாமல், காதலி கிடைத்து விட்டாளே என்ற சந்தோஷத்தில் தினமும் மொபைல் மற்றும் பேஸ்புக்'கில் வந்து தொல்லை கொடுத்து வருகிறாராம்.

இதனால், பயந்து போன அந்தப் பெண் எப்போதும் ஒரு வித அச்சத்துடனே காணப்படுகிறாளாம். பேஸ்புக்'கில் ஏன் புகைப்படத்தை போட்டோம் என்று இப்போது வருந்துகிறாளாம்.

பேஸ்புக்'கில் புகைப்படம் மற்றும் மொபைல் எண்ணுடன்,முகவரியும் போட்டு தங்கள் எண்ணங்களை பரிமாறி கொள்ளும் பெண்களே இனி, எச்சரிக்கையுடன் இருங்கள்.

18 comments:

  1. இது வாரமலரில் வந்த செய்தி! நானும் படித்தேன்! பேஸ்புக்கில் கொஞ்சம் எச்சரிக்கையோடுதான் புழங்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. அந்த செய்தி தான் என்னுடைய எச்சரிக்கை யும்...

      Delete
  2. தினமலரில் வாசித்தேன்... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இது வார மலரில் வந்த கடிதம். தினமலரில் அல்ல... நன்றி ..

      Delete
  3. நல்ல எச்சரிக்கைப் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தவறுகள் நடக்க நாமே இடம்கொடுத்துவிடகூடாது....

    நல்லதொரு எச்சரிக்கை பதிவு

    ReplyDelete
  5. நண்பர்களே தாங்கள் கருத்து சொல்லும் போது இதை நான் இந்த நாளிதழில் படித்தேன் பார்தேன் என்று சொல்லுவதைவிட இந்த பதிவில் உள்ள விஷயம் எப்படி பாதிக்கின்றது எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். அதை மற்றவர்களிடமும் எடுத்து சொல்லுங்கள்

    தினசரி மற்றும் வார இதழ்கள் பல பதிவாளர்கள் பதியும் விஷயங்களை க்ரெடிட் எதுவும் கொடுக்காமல் அப்படியே சிறிது மாற்றி எழுதுகிறார்கள்,

    அதனால் அவர்கள் வெளியிடும் விஷயங்களை நாம் வெளியிடும் போது நாம் க்ரெடிட் கொடுக்க்க வேண்டுமென்று அவசியமில்லை காரணம் நாம் வெளியிடுவது லாப நோக்கில் அல்ல ஆனால் அவர்கள் செய்வது லாப நோக்கில்


    விஷயம் பல பேரை அடையவேண்டும் என்பதால்தான் கருண் அவர்கள் இதை பதிவாக வெளியிட்டு இருக்கிறார். இதே விஷயம் பதிவாளர்கள் இட்டு இருந்தால் அவர் க்ரெடிட் கொடுத்து இருப்பார் ஆனால் அது வாரமலரில் இருந்து வந்ததால் அவர் அதற்கு க்ரெடிட் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை

    ReplyDelete
  6. வணக்கம்

    இனியாவது பெண்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்... பதிவுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. எச்சரிக்கைப் பகிர்வு...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி குமார்

      Delete
  8. எச்சரிக்கை செய்யும் அவசியப் பதிவு..
    ஏற்று நடத்தல் நலம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.

      Delete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"