Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/21/2013

மாணவியின் சந்தேகமும், அவனின் விளக்கமும்...! உண்மைக் கதை.


ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.

அவை மேலே பறக்கும் பலூன்கள்.

அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு மாணவி கவனித்துக் கொண்டிருந்தாள்.

மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.

இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா? என்று கேட்டாள்.

ஓ… பறக்குமே. என்ன விஷயம்?

பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?  என்று மீண்டும் கேட்டாள் அந்த மாணவி.

அந்தப் பள்ளி மாணவி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

ஏம்மா கேக்குற?

இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்த மாணவியின்  நிறம் கறுப்பு.

பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா. உள்ள இருக்கிற வாயுதான். என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார் வேண்டுமானாலும் உயரலாம் என்றார்.

சில சமயம் பலூன் விற்பவர்கூட ஆசிரியராக மாறிவிடுகிறார்கள்.

18 comments:

  1. Replies
    1. மிகவும் நன்றி தனபாலன் சார்..

      Delete
  2. (நேற்று) முந்தைய பதிவில் கருத்து சொல்ல முடியவில்லை... Problem உள்ளது சரி பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நான்தான் கருத்து பெட்டி எடுத்தேன்..

      Delete
  3. அறிவுரை கதை ஓக்கே! தலைப்பு கொஞ்சம் நெருடலா இருக்கே!

    ReplyDelete
  4. தங்கள் கவிதையின்
    உட்கருத்துப் போலவும்...
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அதான் இன்னும் அவர் பலூன் வித்துகிட்டு அலையுறாரா ?
    த.ம 7

    ReplyDelete
  6. நிறமல்ல, தரமே நிரந்தரம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"