Ads 468x60px

9/18/2013

பயமுறுத்தும் இந்தக் காங்கிரஸ் அரசை என்ன செய்யலாம்?


ஊழல்


நம் தமிழகத்தில் நியாய விலை கடைகள் வாயிலாக சுமார் தொன்னூத்தி ஐந்து சதவீத மக்களுக்கு அரிசி 20 கிலோ, சர்க்கரை 2 கிலோ,பருப்பு வகைகள், மற்றும் பாமாயில் போன்ற தேவையான பொருட்களை தமிழக அரசு பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது.இதை அறிந்தும் ஆளும் மத்திய அரசு தமிழகத்தை முன்மாதிரியாக கொள்ளாமல் அவசர கோலத்தில் உணவு பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்களில்  62 சதவீதத்தினருக்கும் நகர்ப்புற மக்களில் 37 சதவீதத்தினருக்கு மட்டுமே பயன்பெறும் வகையில் உணவு பாதுகாப்புத் திட்டம் உள்ளது. தமிழ் நாட்டில் 49 சதவீத மக்கள் நகரங்களில் வசித்து வரும் நிலையில் மற்றவர்கள் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளது. தற்போது மத்திய அரசு அதன் தொகுப்பிலிருந்து, மாதத்திற்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தமிழ் நாட்டுக்கு வழங்கப்படுகிறது. 

அமேரிக்கா-இந்தியா


இந்த உணவு பாதுகாப்பு திட்டம் செயல்படுமானால்  1 லட்சம் டன் அரிசி மட்டுமே மத்திய அரசு வழங்கும். அதனால் வெளிச் சந்தையிலிருந்து தமிழக அரசு வாங்க கூடுதலாக ரூபாய் தேவைப்படும். மேலும் தமிழகத்திற்கான, மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரிய  துண்டு அல்ல ஓட்டையே விழும். எனவே இது உணவு பாதுகாப்பு திட்டமல்ல; உணவுக்கே பாதுகாப்பில்லா திட்டம் என்று நம்  முதல்வர் பலமாக எதிர்க்கிறார். 

எவ்வளவுதான் வெளிச்சந்தையில் வாங்கி சமாளிக்க முயற்சி செய்தாலும் வறட்சி போன்ற காலங்களில் அரிசி தட்டுப்பாடு பெரிதாக ஏற்பட்டு இன்னும் கூடுதல் நிதி சுமை ஏற்படும். இதன் காரணமாக நியாய விலை கடையை மூடிவிடும் அபாயம் உள்ளது.

இந்த உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் அரசை என்ன செய்யலாம்?


4 comments:

  1. ஒன்னும் சொல்லுவதற்கில்லை இல்லை தலைவரே .. எதிர்த்து கேட்க வேண்டியவனும் அவன் பிரச்சினைக்கே நேரம் போதாமல் திரிகிறான் .. இல்லாதவன் தலையில் மொளகா அரைக்க முயற்சிக்கிறான் இந்த காங்கிரசகாரன்

    ReplyDelete
  2. ஓட்டு வாங்க மக்களை ஏமாற்றும் எல்லாக் கட்சிகளும் பதவிக்கு வருவதைத் தடுத்தால்தான் விடிவு காலம் வரும்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"