Ads 468x60px

8/03/2013

இதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க?



Repost
**********************************************************************************
கணக்கு ஆ‌சி‌ரிய‌ர் : மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்கு‌ள்ள இரு‌க்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?

சிறுவன் : ஒண்ணுமே இருக்காது டீ‌ச்‌ச‌ர்

ஆ‌சி‌ரிய‌ர் : உனக்கு கணக்கே தெரியலை

சிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.



**********************************************************************************

பிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...

சசி: எப்புடி??

பிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா......
**********************************************************************************

ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.

மாணவர்: என்ன கடனா?
**********************************************************************************

தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....
**********************************************************************************

ஒரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்!

Traffic Police : நான் விசில் அடிச்சும்,கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல?

L.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல!

அன்று மாலையில் ஒரு L.K.G. பையன் கோபத்துடன் அந்த Traffic Police யிடம்!

L.K.G.Boy : இன்னொரு தடவ என் ஆளப் பார்த்து விசில் அடிச்ச, மவனே நீ! செத்தடா!

Traffic Police : !!!!!!

**********************************************************************************

GIRL : நான் MOBILE நீ SIM CARD …

BOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா?

GIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.

**********************************************************************************

பிரகாஷ் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி..

சசி : அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?

பிரகாஷ் : இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..
**********************************************************************************

3 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"