Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/08/2013

மனைவியும், அயல் நாட்டில் வேலை செய்யும் கணவனும்...!?




மெயில் விசாரிப்புகள் .....!
பேஸ்புக்கில் அரட்டைகள் ....!

'சாட்'டில் தகவல்,
பரிமாற்றங்கள் ......! 

நேரம் கிடைக்கும்போது 
'ஸ்கைப்பில்'  சில சில
வார்த்தைகள்....!

தொலைவாகிப்போனோம்...!

நாளை வருகிறது 
நம்,
திருமண நாள்....!

அன்றைய 
உன் வெட்கச் சிரிப்பு 
எனக்குள் இன்னும் 
பசுமையாய்...!

நீ...
நம் குழந்தையோடு 
கோயிலுக்குப் பொய் வா...!

நான் தனியாக 
இந்த 
அறையில் பிரார்த்தனை 
செய்கிறேன்...!

கூடுதலாக 
ஒரு மணிநேரம் 
வேலை செய்தால் 
அதையும் காசாக்கலாம்...!

உன் வாழ்த்தை 
மறக்காமல் 
மின்அஞ்சலில் அனுப்பி வை...!

கலையில் 
அதல் முகத்தில் தான் 
நான் 
விழித்தாகவேண்டும்...!

நானும் சொல்லிக்கொள்கிறேன் 
நம் திருமண நாள் வாழ்த்தை...!


14 comments:

  1. வெளி நாடுகளில் பிழைப்புக்காக
    பிரிந்திருப்போரின் அவதிகளை அவஸ்தைகளை
    மிகச் சரியாகச் சொல்லிப்போகும் படைப்பு
    அருமையிலும் அருமை
    பகிர்வ்க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தனிமை கொடுமை

    ReplyDelete
  3. ஆமாங்க...நிறைய வெளி நாட்டு நண்பர்கள் இப்படியாக புலம்புவதைப் பார்த்த போது எனக்குள் தோன்றிய கவிதை

    மாதத்திற்குமாய்
    வாரத்திற்கும்
    நீ பேசிச் செல்வது
    நிமிடங்களில் நொடிகளில்
    கரைந்து போகிறதே...

    ReplyDelete
  4. சூப்பர் கவிதை சார்...

    ReplyDelete
  5. வருமானத்துக்காகச் சில சந்தோசங்களைத் தொலைக்கத்தான் வேண்டியிருக்கிறது
    அருமை கருண்

    ReplyDelete
  6. வெளிநாடு வாழும் இளைஞர்களின் ஏக்கத்தை பிரதிபலிக்கும் சிறப்பான படைப்பு! வாழ்த்து!

    ReplyDelete
  7. பலரது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது கருண்....

    நல்ல கவிதை.

    ReplyDelete
  8. மனைவியின் அரவணைப்பில், மக்களின் முத்தங்களில் கிடைக்கும் ஆனந்த பெரு வெள்ளத்தை இழந்து அயலகத்தில் பொருள் தேடி உழலும் வாழ்க்கை என்ன வாழ்க்கையோ. கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு சொந்த நாட்டில் சொந்த குடும்பத்தில் இன்பமாய் வாழ்வதே பேரின்பமாகும்.

    ReplyDelete
  9. உண்மைதான். இளம் வயதில் பணத்திற்காக, குடும்பம் நன்மைக்காக, குழந்தைகள் படிப்பிற்காக இப்படியெல்லாம் நம் வாழ்நாளை கரைத்திருக்கிறோம். கையில் காசு சேர்கிறது, வசதி வாய்ப்புகள் பெருகுகின்றன, பிள்ளைகள் படித்து முடித்துவிடுகின்றனர்.... நாம் திரும்பி வருகிறோம்... ஆனால் நம்முடைய இளமைதான் எங்கோ போய்விட்டிருக்கிறது. பணம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஏதோ ஒன்னு இல்லாதது போல.... கொடுமைதான்.

    ReplyDelete
  10. த்தூத்தேரி என்னடா வாழ்க்கை

    ReplyDelete
  11. //கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு சொந்த நாட்டில் சொந்த குடும்பத்தில் இன்பமாய் வாழ்வதே பேரின்பமாகும்//
    நிரஞ்சன் தம்பி: காலில்லாதவன் கூட நடந்துருவான்.இது மட்டும் நடக்கவே நடக்காது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"