Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/14/2013

உங்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா?மனசை தொட்டு சொல்லுங்கள்.


ற்றவர் மனதிற்குள் 
நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள்
நீ,
நுழைந்ததுண்டா ...?

ன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?

ன் மனம்
உன் அசிங்கங்களின்
குப்பை கூடையாக
இருக்கிறதல்லவா...?

ன் மனம்
உன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?

 
ன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்து
உன் கனவு என்ற
அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து,
இரசிக்கிறதல்லவா...?

ந்த
படத்தில் மட்டும் தான்
நீ,
ஒர் நடிகனாக இல்லாமல்
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா...?

ந்தப் படத்தை
பகிரங்கமாய்
உன்னால்வெளியிட முடியுமா...?

ன் மனம்
ஓர் பாற்கடல்
அதை கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல !!!
ஆலகால விஷமும்
வெளிப்படும்   என்பதை
நீ,
அறிவாய் அல்லவா...?
 ன் முகவரி
உன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது 
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?

ம்முடைய முகவரிகள் 
பொய்யானவை,
நம்முடைய முகங்கள் 
பொய்யானவை,

நாம் யாருமே
நம்முடைய
முகவரியில் இல்லை !?


தனால்
யாரும்,யாரையும்,
!!!!!! பார்க்க  முடிவதில்லை.....

முகம்,
ஓர் முகமூடி !!!???
ஓர் நாடக அரங்கம்...

நாம்
எல்லோரும்
அந்த அரங்கத்தில்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்.


ம்
முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???

 யாரும்  அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????

மீள்பதிவு..

5 comments:

  1. வணக்கம்

    அருமையாக கவிதைஅமைந்துள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நாம் வாழும் இந்த பிரபஞ்சம் போலவே நமது மனதும் எல்லை இல்லாதது. நாடோடிகளாய் திரிந்து வாழ்ந்த மனிதனும் தன் மனம் போன போக்கில்தான் வாழ்ந்து வந்தான். உழுது பயிரிட்டு ஒரே.இடத்தில் தங்கி சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்தில் தான் சார்ந்த சமுதாயத்தில் ஒரு. இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஆரம்பித்த காலத்திலுந்தே மனிதன் முகமோடி அணிய தொடங்கிவிட்டான். இன்றைய காலங்களில் இது இல்லாமல் எதுவும் நடக்காது. அல்லது தோல்வியில்தான் முடியும். இல்லை என்றால் துறவி ஆகிவிட வேண்டியதுதான் மீதம்.

    ஆக்கம் நன்று.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. சிந்திக்கத் தூண்டும் சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  4. இருண்ட அறைகளுக்கும்,
    அங்கே உலவும் பேய்களுக்கும்,//உண்மைதான்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"