Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/23/2013

நம் ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.


கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் என்ற பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியப் படைவீரர்கள் ஐந்து பேர், பாகிஸ்தான் ராணுவத்தால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நம் இந்திய ராணுவம், ஏன் இன்னும் பதிலடி கொடுக்காமல், அமைதி காக்கிறது? தெரியவில்லை. மத்திய அரசின் உத்தரவுக்காக, காத்திருக்கிறதா ராணுவம்? என்றும் புரியவில்லை.

இந்தியாவை, இப்போது ஆள்கிற காங்கிரஸ் அரசின் அதிகார மையத்தில் இருப்பவர்கள், இதுபோன்ற மகா பாதக  படுகொலைகளுக்கெல்லாம், கவலைப்பட மாட்டார்கள். அவர்களிடமிருந்து, எந்த ஒரு  உத்தரவையும் நாம் எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் செய்தது, செய்யப் போவது எல்லாம், இது மட்டுமே...
ஒன்று, "நாங்கள் பொறுமையாய் இருப்பதால், எங்களை கோழைகள் என்று நினைத்து விடக்கூடாது", "இப்படிப்பட்ட அநியாய  படுகொலைகளால், எங்களைப் பணிய வைத்து விட முடியாது". 

இந்தியா - பாகிஸ்தான் உறவை, யாராலும் ஒன்றும் செய்ய  முடியாது' என்று, காகித அறிக்கை விடுவார்கள். மற்றொன்று, இன்னும் சில வாரங்களிலேயே, பாகிஸ்தான் பிரதமரையோ, அதிபரையோ சந்தித்து, நன்றாக விருந்துண்டு கூட்டாக அறிக்கை விடுவார்கள்.

தற்போது ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு, தேசத்தையும், மக்களையும் காப்பாற்றும் தகுதியை இழந்துவிட்டது. எனவே, ராணுவத்தில் பணிபுரியும் எங்கள் இரத்த சொந்தங்களே... இனியும் இதுபோல் ஒரு சம்பவம் நடக்காதிருக்க, நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். நம் தேசத்தைக் காப்பதோடு, உங்களையும் காத்துக் கொள்ளுங்கள்.

இங்கு 125 கோடி இந்தியர்களும் உங்கள் பின் நிற்கின்றனர். இனியும் நிற்பார்கள்.

8 comments:

  1. உண்மைதான்... நம் வீரர்களுக்கு சல்யூட்...

    ReplyDelete
  2. இந்த சீண்டல் இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்துக்கொண்டுதான் உள்ளது. நவாஸ் ஷெரீஃப் பிரதமராக வரும்போதெல்லாம் இவ்வாறு நடந்துக்கொண்டுதான் உள்ளது என்பதும் உண்மை. மேலும் இது தேர்தல் ஆண்டு என்பதால் சீண்டல் கொஞ்சம் அதிகரித்துள்ளது அவ்வளவுதான். பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தால் முடியாமல் இல்லை. யானை அது செல்கின்ற வழியில் மலம் தின்னும் பன்றிகளை ஒதுக்கிவிட்டுத்தான் செல்லுமே தவிர அவற்றை மிதித்து தங்களுடைய அந்தஸ்த்தை தாழ்த்திக்கொள்ளாது.

    ReplyDelete
  3. டிபிஆர் .ஜோசப் நன்றாக சென்னீர்கள்.

    ReplyDelete
  4. நாமும் ராணுவத்தோடு - சல்யுட்

    ReplyDelete
  5. மீண்டும் இந்திய 'அமைதி 'படையாகி விட்டதா?

    ReplyDelete
  6. 125 கோடி இந்தியர்களும் உங்கள் பின்னால் இருக்கிறோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும்.நம்மைப் பாதுகாக்க இந்தப் பாழாய்போன அரசியல்வாதிகள் உதவ மாட்டார்கள்.நமது இராணுவ சகோதரர்கள்தான் நமக்கு உதவுவார்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"